Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மனித உணர்வுகளிலே முதன்மையானது பாலுணர்வுதான்!!

தம்பதியருக்கு இடையேயான நெருக்கத்தை உணர்த்துவது ஸ்பரிசம் தான். அதனால்தான் திருமணநாளன்று தாலிகட்டி முடித்த உடனே தம்பதியரின் கைகளை பிடித்து கட்டி அவர்களுக்கு இடையேயான நெருக்க த்தை உணர்த்துகின்றனர். அதேபோல் இந்து மத சடங்குப்படி நடக்கும் திரு மணங்களில் அக்னியை வலம் வரும் போது கணவனின் கைகளை பிடித்து மனைவி வலம் வருகிறாள்.

தம்பதியர் தினம் தினம் ஸ்பரிசத்தால் ஒருவருக்கொருவர் அன்பை உணர்த்த வேண்டும் அப்பொழுதுதான் குடும்பத்தில் அன்பும், மகிழ்ச்சியும் தழைக்கும் என்கின்றனர் நிபு ணர்கள். பத்து வார்த்தைகளின் மூலம் வெளிப்படுத்தும் அன்பினை ஒரு முத்தத்தினாலோ, சின்ன ஸ்ப ரிசத் தினாலோ வெளிப்படுத்தி விடலா ம் என்கின்றனர்.

மனித படைப்பின் மூலாதாரமே பாலுணர்வுதான். மனித உணர்வுக ளிலே முதன்மையானதும் பாலு ணர்வுதான். இது உலகிலுள்ள ஆண்-பெண் இருபாலருக்கும் பொ ருந்தும். ஆனால் மனித சமுதாயம் இதனை வெளிப்படையாக ஒப்புக் கொள்வதில்லை. மனித இனத்தில் ஆண்பெண் என இரு பிரிவினரு க்கும் மாதத்தில் ஒரு குறிப்பிட்ட நாட்களின்போது, இயற்கையான பாலுணர்வுகள் இயற்கையாகவே உற்றெடுக்கும்.இது அறிவியல் பூர் வமான உண்மை என்று பல உளவி யல் அறிஞர்கள் எடுத்துரைத்துள் ளார்கள்.
 
பாலுணர்வு வெளிப்படும் நேரத் தில் ஆரோக்கியமான தாம்பத்ய உறவில் ஈடுபடுவது தம்பதியருக்கு முழு இன்பம் கிடைக்கும். ஆண்-பெண் தாம்பத்ய உறவில் ஈடு படும் போது இருவரது உடல் முழுவதும் பாலுண ர்வுகள் மையம் கொண்டுவிடும். அந்த நொ டிப் பொழுதில் இரண்டு மனங்களும் புற சூழ்நிலையை மறந்து ஒன்றுபட்டு விடுகிற து. இருவரது இதய துடிப்பும் ஒன்று பட்டு ஒலிக்கும். இருவரது சுவாசமும் ஒன் றாகி விடும் என்கின்றனர் நிபுணர்கள்.
 
இந்த நிலைதான் ஆண்-பெண் என இரு உயிர்கள் இணைந்து ஒரு உயிராகும் நிலை. இந்த நிலையின்போது ஆண்-பெண் இருபால ரும், ஒரு சேர பெறுகின்ற ஸ்பரிச உணர்வானது, மலர்கள் நம் மீது படுகின்றபோது ஏற்படுத்துகின்ற ஸ்பரிசத்தைவிட மிகவும் மென் மையானது. இத னை கருத்தில் கொண்டுதான் ‘மலரினும் மெ ல்லியது காமம்’ என்று முன்னோர்கள் கூறியுள்ளன ர். இந்த மென்மையான ஸ்பரி சத்தை பெறுகின்றபோதுதான் , ஆண்-பெண் இருவரிடத்திலு ம் உள்ள பாலுணர்வுகள் மறைந்து, பாச உணர்வுகள் ஊற்றெடுக்கும் என்கின்றனர்.
 
இதனால் தம்பரியரிடத்திலே வன்முறை உணர்வுகள் குறைந்து, மனதிலே அன்பு வீச தொடங்கி விடும். இந்த அன்பு தெய்வீ கமானது. இதனால் ஒருவருக்கொருவர் விட்டு கொடுக்கும் மன பக்குவத்தை பெற்றுவிடுவார்கள் என்கின்ற னர் நிபுணர்கள். எனவே தம்பதியர் ஒருவருக்கொருவர் ஸ்பரிசத்தின் மூலம் அன்பான இல்லற வாழ்க்கையினை அமைத்துக் கொள்ள லாம்.

{ { { இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம் } } }

-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.

உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: