Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மாமியாருடன் சண்டைக்கு தயாராகும் சுதாவுடன் சில நிமிடங்கள்

 

தென்றல் தொடரில் புயலான மருமகளாய் வந்து மாமியாரிடம் மல் லுக்கு நிற்கும் சுதாவின் நிஜப் பெயர் பாவ்ய கலா. ஆந்திராவில் பிறந்து பெங்க ளூரில் செட்டில் ஆகியிருக்கும் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் சீரியல்களில் பிஸி நடிகை. தொடரில் வில்லத்தனம் செய்தாலும் நிஜத்தில் அமைதியானவ ராம். பாவ்யகலா தன்னுடைய சின்னத் திரை பயணம் பற்றி நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார் படியுங்களேன்.

என்னுடைய சொந்த ஊர் ஆந்திரா. ஆனா ல் ரொம்ப நாள் முன்பே பெங்களூருவில் செட்டில் ஆகிவிட்டோம். அதனால் இப் போது கன்னடவாசி என்றும் சொல்லலாம் . தொடர்களில் நடிப்பதற்காக பெங்களூரு வி ல் இருந்து சென்னைக்கும் ஆந்திரத்துக்கும் வந்து போகிறேன்.

நான் முதன் முதலில் கன்னட தொடர்களிலும் படங்களிலும் நடித்து கொண்டிருந்தேன். பிறகு தெலுங் கில் ஜெமினி டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாகவும், தொடர் களிலும் நடித்து வருகிறேன்.

தமிழில் மெகா டிவியில் சுற்றமும் நட்பும்’ என்ற நிகழ்ச்சியைத் தொகு த்து வழங்கினேன். அதுதான் தமி ழில் எனது முதல் புராஜக்ட். அதை அடுத்து “ருத்ரா’ தொடரில் குஷ்பு வின் தங்கையாக நடித்துள்ளேன். அதன்பிறகு “கோலங்கள்’ தொடரி ல் ஒரு பாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்போது தென்ற லிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. ரொம்ப சந்தோஷமாக இரு க்கிறது. “கஸ்தூரி’ தொடரில் நடித்திருக்கிறேன். அதையடுத்து “தங்கம்’ தொடரில் ரம்யா கிருஷ்ணனின் கணவராக வரும் கலெ க்டருக்கு முறைப் பெண்ணா கக் கிராமத்து வேடம் செய்கிறேன்.

“தென்றல்’ தொடரில் எனக்கு முழு வில் லத்தனமான கதாபாத்திரம் இல்லை என் றாலும் கொஞ்சம் நெகடிவ்வான ரோல் தான். அந்த வீட்டுக்கு மூத்த மருமகள் நான். பொதுவாக ஒவ்வொரு வீட்டிலும் நடக்கும் மாமியார், மருமகள் சண்டை, ஈகோ, பிரச்னைதான் தென்றல் தொடரி லும் நடக்கிறது. மென்மையான கதாபாத்திரத்தை விட, இதுபோன்ற கேரக்டர் செய்வதுதான் எனக்கு ரொம்பப் பிடித்தி ருக்கிறது. என்ன தான் வலுவான கதாபாத்திரமாக இருந்தாலும் மென்மையாக நடிக் கும்போது அந்த அளவுக்கு மக்களிடம் அங்கீகாரம் கிடைப்பதில் லை. அதுவே வில்லத்தனம் என்றால் உடனே ரீச் ஆகிவிடுவோம். எனவேதான் இதுமாதிரியான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுக்கிறே ன் என்று கூறிவிட்டு மாமியாருடன் சண்டைக்கு தயாரானார் சுதா.

{ { { இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம் } } }

-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.

உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்.

 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: