Thursday, October 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ராகிங் செயல்பாட்டிற்கெதிரான வலைத்தளம் மற்றும் ஹெல்ப்லைன்!

 

ராகிங் செயலுக்கெதிரான வலைதளத்தையும், ஹெல்ப்லைனையு ம் மனிதவள அமைச்சர் கபில்சிபல் டெல்லியில் தொடங்கி வைத் தார்.

இந்த போர்டல், ராஜேந்திர கச்ரூ என்ப வரின் கீழ் செயல்படும் அமன் சத்யா கச்ரூ ட்ரஸ்ட் என்ற அமைப்பால் ஏற்ப டுத்தப்பட்டது.

கடந்த 2009ம் ஆண்டில், ராகிங் செயல் பாட்டிற்கு எதிரான ஒரு போர்டலை உருவாக்க வேண்டுமென உச்ச நீதிமன் றம் கூறியிருந்தது நினைவிருக்கலாம்.

இந்நிகழ்ச்சியில் பேசிய கபில் சிபல், “ராகிங் என்பது ஒரு பெருங் குற்றம். இது, ஒரு மாணவரின் தன்னம் பிக்கையை அழித்து, அவரை தற்கொலைக்கும் தூண்டுகிறது” என் றார்.

“இந்த புதிய போர்டல், ராகிங் பற்றிய புகார்களுக் கு, அரைமணி நேரத்தில் நட வடிக்கை எடுக்கும்” என்று கச்ரூ நம்பிக்கை தெரிவித் தார். அவர் மேலும் கூறியதா வது: இந்த போர்டலில் புகார் அளித் தவுடன், உடனடியாக கல்லூரி முதல்வர் அல்லது நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும். அவர்களை தொடர்புகொள்ள முடியாத பட்சத்தில் சம்பந்தப்பட்ட பகுதியின் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படும்.

ராகிங் செயல்பாட்டிற்கு எதிரான புகாரை 18001805522 என்ற எண் ணில் தெரிவிக்கலாம் அல்லது www.antiragging.in மற்றும் www. amanmovement.org. என்ற இணையதளங்களில் பதிவு செய்ய லாம்.

நாடு முழுவதும் ஏறக்குறைய 40 ஆயிரம் கல்லூரிகள் உள்ளன. அனைத்து கல்லூரிகளின் தரவுகளும்(Data base) உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

– dinamalar

 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: