Sunday, June 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அன்புடன் அந்தரங்கம் (28/07): "உங்களது மனைவி மறுமணம் செய்து கொள்வாரா?"

 

அன்பு சகோதரிக்கு,

தமிழகத்தில் மிகப்பெரிய கம்பெனி ஒன்றில், சூப்பர்வைசராக பணி புரிந்து ஓய்வு பெற்றவன். என் வயது, 64. எனக்கு இரண்டு மகன் கள், இரண்டுபேரும் இன்ஜினிய ர்கள். இருவரும், நல்ல கம் பெனியில் பணி ஆற்றுகின்றனர். இருவருக்கும் திருமணமாகி, இரு மருமகள்க ளும் நல்ல பணியில் இருக்கின்றனர்.

நானும், என் மனைவியும் எங்க ளது சொந்த வீட்டில், வசதியாக வசித்து வருகிறோம். மகன்கள் தனியாக சென்று விட்டனர். எங்க ளை கவனிப்பது இல்லை. என் சொந்த உழைப்பின் பலனாக, வீட்டு வாட கை, வீடு, கடை, வாழைத்தோட்டம் என, எல்லாம் இருக்கிறது. இதை நான் கவனித்து வருகிறேன்.

என் மனைவிக்கு கடந்த, 20 வருடங்களுக்கு மேலாக, மனநிலை சரியில்லை என்று கூறும்படி, சில சமயம் நடந்து கொள்வாள். சில சமயம், நல்ல மனநிலையில் இருப்பாள். ஆறாவது அறிவு வேலை செய்யாது. சரியாக சமையல் செய்ய மாட்டாள். என் துணிகளைத் துவைக்க மாட்டாள்.

எரிச்சல், கோபம், சதா என்னையே குறை சொல்லி ஏசுவாள். பல மனோதத்துவ டாக்டர் களிடம் பரிசோதித்து, சிகிச்சை பெற்று தற் காலிகமாக சரியானது. பின் டிப்ரஷன், கோபம் என்று பாதிக்கப்படு கிறாள். பல நேரங்களில், நானே சமையல் செய்துதான் சாப்பிடும் நிலை ஏற்படுகிறது.

சிறு வயதிலேயே, என் அம்மா, அப்பா இறந்து விட்டனர். என்னதான் உழைத்து சம்பாதித்து சொத்து சேர்த்து இருப்பினும், வீட்டில் மனை வி பொறுப்பில்லாமல் இருப்பது வெறுப்பையே அதிகரிக்கிறது.

வாழ்க்கை, ஒருசமயம் சூனியமாக தெரிகிறது; மறு சமயம் மனதை தேற்றி நடக்க முயற்சிக்கிறேன். என் மனம் தடுமாறுகிறது. நான் தின சரி யோகாசனம் செய்கிறேன். மனம் நிம்மதியடைகிறது. மறு சமயம், மனைவியின் செய்கையால் வெறுப்பாகிறது.

இந்த, 64 வயதில் வாழ்வை நிம்மதியுடன் முடித்துக் கொள்வோமா அல்லது வேறு ஒரு துணையுடன் இருக்கும் வாழ்வைத்

தொடருவோமா என, மனம் அலை பாய்கிறது.

நான் இதுவரை, யார் தயவையும் நாடவில்லை. மனைவியின் அன்பு, பாசத்திற்காக ஏங்கியதில்லை. ஆனால், இந்த வயதில் நல்ல துணை வியின் நட்பு, உதவி தேவைப்படுகிறது. இதில், ஒரு முடிவுக்கு வர மனம் தடுமாறுகிறது. இப்போது, மனநிலை பாதிக்கப்பட்ட மனைவி யை, முழுமையாக வெறுத்து ஒதுக்கவும் முடியவில்லை. வேறு, ஒரு நல்ல துணைவியை தேடவும் மனம் விரும்புகிறது. நான் என்ன செய்ய வேண்டும். தாங்கள் தான் நல்ல வழி கூற வேண்டும்.

இப்படிக்கு
உங்கள் சகோதரன்.

அன்புள்ள சகோதரருக்கு, உங்கள் கடிதம் கிடைத்தது…

சிறுவயதிலேயே பெற்றோரை இழந்து, அனாதை சிறுவனாக வாடி இருக்கிறீர்கள். சொந்தபந்தங்களின் உதவி இல்லாமல் படித்து, ஒரு நல்ல பணிக்கு போயிருக்கிறீர்கள். உங்களுடைய தற்சமய வயது, 64. உங்களது, 26 வயதில், உங்களுக்கு திருமணமாகியிருக்கிறது.
உங்களது திருமணமும், சொந்த முயற்சியில் தான் நடந்திருக்கிறது. திருமணமான முதல், 18 வருடங்கள், உங்களது மனைவி தெளி வான, மனநிலையில்தான் இருந்திருக்கிறார். இரு பிள்ளைகளை படிக்க வைத்து மணம் செய்வித்து, தனிக்குடித்தனமும் அனுப்பி விட்டீ ர்கள்.

உங்களது திருமண வாழ்க்கையை இரண்டாக பிரித்தால், முதல் பாதியில் தென்றலாகவும், பிற்பாதியில் புயலாகவும் உங்களது மனைவி இருந்திருக்கிறார். அவரது மனநிலை பாதிப்புக்கு, நீங்க ளும், உங்களது இரு மகன்களும் நேரடியாகவோ, மறைமுக மாகவோ காரணமாய் இருந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

சதா பணம், பணம்; அலுவலகப்பணி, என்றலைந்து, மனைவியை இதம்பதமாய் நடத்தாமல் போனீர்களோ? உங்களது ஆவலாதிகளை, கோபதாபங்களை, மனைவியின் தலையில் கொட்டி, அவரது மூளையை சூடேற்றினீர்களோ?

உங்களது பண நிர்வாக திறமையால்தான், குடும்பம் முன்னுக்கு வந்தது என, மனைவியை சதா குத்திக் காட்டினீர்களோ? உறவினர் ஒத் துழைப்பு இருந்திருந்தால், இன்னும் அழகான, அறிவான மனைவி கிடைத்திருப்பாள் என, அமிலவார்த்தைகளால் மனைவி யை குளிப்பாட்டி இருப்பீர்களோ? அத்தனையும் பரம்பொருள் ஒருவ னே அறிவான்.

உங்களிடம், 64 வயதாகியும், நாற்பது வயதுக்குரிய உடல் ஆரோக்கி யம் கொட்டிக் கிடக்கிறது. கழுத்தைச் சுற்றும், கால்களைச் சுற்றும் எந்த பொறுப்புகளும் உங்களுக்கு இல்லை. தேவைக்கு அதிகமாக பணம் கையிருப்பில் குவிந்திருக்கிறது.

உங்களின் மனைவி, உங்களின் துணிகளை துவைப்பதில்லை; உங் களுக்கு சமைத்துப் போடுவதில்லை என குற்றஞ்சாட்டுகிறீர்கள். ஒரு பணிப்பெண், நீங்கள் கேட்கும் இந்த இரு விஷயங்களையும், நன்றாகவே செய்து கொடுத்து விடுவாள்.

உங்களது ஆழ்மனம் மறுமணத்திற்கோ, கம்பானியன்ஷிப்புக்கோ ஏங்கி தவிக்கிறது. மனதில் காமவிகாரம் பூத்து விட்டால், யோகா சனம் எந்த நிவாரணத்தையும் பெற்றுத் தராது. 38 வருஷம் குடும்பம் நடத்திய மனைவி மீதும், மனதில் ஒரு சாப்ட்கார்னர் வைத்துள்ளீ ர்கள்.

உங்களது கடிதத்தில், நீங்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பதை குறிப்பிடவில்லை. ஆனால், இந்து மதத்தினர் என யூகிக்கிறேன். இந்து திருமணச் சட்டப்படி, உங்களது மனைவி மனநலம் சரியில்லா தவர் என்பதை நிரூபித்து, விவாகரத்து பெற வேண்டும். உங்களின் விவாகரத்து பெறும் முயற்சிக்கு, உங்களது மகன்கள் துணை நிற்பரா என்பது சந்தேகமே.

சொந்த உழைப்பின் பலனாக, நீங்கள் சம்பாதித்த சொத்துகளை, மக ன்களுக்கும், மனைவிக்கும் பாகம் பிரித்து தர வேண்டியதில்லை. இருந்தாலும், ஒரு மனிதாபிமான அடிப்படையில், சொத்துகளை பாகம் பிரிந்து தருவது நல்ல விஷயம் தானே?

மறுமணம் செய்து கொள்வது என்ற முடிவுக்கு வந்து விட்டால், குழ ந்தை இல்லாத, 40 – 45 வயது விதவைப் பெண்ணே சரியான தேர் வாய் அமையும். அந்த விதவைப் பெண், உங்களது உறவுக்கார பெண் ணாக இருந்தால், இன்னும் நல்லது.

உங்களுக்கு, ஆத்மார்த்தமாய் ஒரு அறிவுரை கூற விரும்புகிறேன்.

சமையலுக்கும், வீட்டு வேலைக்கும் ஒரு பணிப்பெண் அமர்த்திக் கொள்ளுங்கள். உங்களது மனைவியை மனநோயாளி என்று விட்டு விலகாமல், அவருடன் அன்புடன் பேசிப் பாருங்கள். பணத்தை சம்பா தித்தது போதும். அன்பான இதயங்களை சம்பாதிக்கப் பாருங்கள்.

மகன்களின் குடும்பங்களில் பங்கு கொண்டு, பேரக் குழந்தைகளை கொஞ்சுங்கள். தாம்பத்தியத்தின் சிறப்பான தருணங்களை, கணவன் – மனைவி கூட்டாய் அசை போட்டு மகிழுங்கள். இந்த, 38 வருட திரு மண வாழ்வில், நீங்கள், 18 வருஷம் மனநோயாளியாக இருந்திருந் தால், உங்களது மனைவி மறுமணம் செய்து கொள்வாரா? அவர் விரும்பினாலும் ஆணாதிக்க சமுதாயம் அனுமதிக்குமா?

இந்த பணம் சார்ந்த உலகில், 64 வயது வயோதிகருக்கு, புதிய நல்ல துணைவியின் நட்பும், உதவியும் கிடைக்கவே கிடைக்காது.

தற்கொலை எண்ணத்தை விட்டு, அதே மனைவியுடன் இரண்டாவது இன்னிங்ஸ் ஆட ஆரம்பியுங்கள். விட்டுக் கொடுத்தல், சகிப்புத் தன் மை, குற்றம் குறை கூறாமை, வயோதிக தாம்பத்யத்தை இனிமையா க்கும் மூலக்கூறுகள்.

—என்றென்றும்  தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.
(தினமலர் வாரமலர் நாளிதழுக்கு நன்றி)
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
விதை2விருட்சம் வரவேற்கிறது.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: