Monday, April 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இந்திய திரைப்பட வரலாற்றிலேயே முதன்முறையாக . . .

 

திருநங்கையான ஒருவர் சினிமாவில் இயக்குனராவது இந்தியாவி லேயே இதுதான் முதல் முறை. ஆம்! திருநங்கை ரோஸ் கிரிக்கெட் சூதாட்டம் குறித்து திரைப்படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். இவரின் இயற்பெயர் ரமேஷ் வெங்கடேசன். திருநங்கையாக ஆன பின்னர் ரோஸ் என மாற்றி க்கொண்டார்.. தொடக்க காலத் தில் விஜய் டிவியில் ‘இப்படிக்கு ரோஸ்’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதில் இருந் து பிரபலமாக ஆரம்பித்தார். தற் போது சினிமாவுக்கு வந்துள்ள ரோஸ் ஒரு குத்தாட்டமும் ஒரு படத்தில் போட்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பான படத்தை இயக்கப்போகிறாராம் ரோஸ். இதுகுறித்து அவர் கூறுகையில், சென்னை சத்யபாமா என்ஜினீயரிங் கல் லூரியில் மெக்கானிக்கல் என்ஜினீயரி ங் படித்தேன். பின்னர், அமெரிக்கா சென் று லூசியானா பல்கலைக் கழக த்தில், பயோ மெடிக்கல் படித்தேன். ஒரு சினி மா படத்தை இயக்கவேண்டும் என் பது நீண்டநாள் கனவு. அந்தஆசை எனக்குள் நீண்ட காலமாக இருந்து வந்தது. அதற்கான சந்தர்ப்பம் இப் போது அமைந்து இருக்கிறது. என்னுடைய நண்பர் செந்தில் குமார் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்தியாவிலேயே ஒரு சினிமா படத் தை இயக்கும் முதல் திரு நங்கை நான் தான். படத்துக்கு, கிரிக்கெட் ஸ்கே ன்டல் என்று பெயர் சூட்டியிருக்கி றோம். கிரிக்கெட் சூதாட்டத்தை கருவாக கொண்டு இப்படத்தை ஆங்கிலத்தில் எடுக்கிறோம். பின் பு, தமிழிலும் மொழி மாற்றம் செய்கிறோம். கிரிக்கெட் சூதாட்ட த்துடன், திருநங்கைகள் பற்றியும் 30சதவீத கதை இருக்கிறது. அதில் , ஒரு கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன். ஆங்கிலம் பேச தெரிந்த-கிரிக்கெட் ஆர்வம் உள்ளவர்களை நடிக்க வைக்க முடிவு செய்து இருக்கிறோம். பிரபலமான சில நடிகர்களும் பங்கு பெறுவார்கள். படப்பிடிப்பை சென்னையிலும், இலங்கையி லும் நடத்த திட்ட மிட்டு இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: