பார்க்க அப்பாவியாகத் தெரியும் இந்த ஈக்கள் செய்யும் வேலை மிக வும் அபாயகரமானது. குப்பைகள், கழிவு நீர், மலம் போன்ற
ஏராள மான கிருமிகள் குடியிருக்கும் இடம் தான் இவற்றின் வாழ்விடம். நூறுக் கும் மேற்பட்ட நுண்ணு யிரிகளை சுமந்து திரியும் ஈயின் ஆயுட்காலம் ஒரு வாரம்தான். ஆனால், அதற்குள் இது எத்தனை யோ ஆபத்துகளை உருவாக்கி விடுகிறது. ஒவ்வொரு முறையும் சுமார் 500 முட்டைகள் வரை இடு ம் ஈயானது, தன்னுடைய வாழ் நாளில் 75 முதல் 150 முறை முட் டையிடும். அப்படி என்றால் ஒரு ஈ, தனது வாழ்நாளில் எத்தனை ஈக் களை உற்பத்தி செய்கிறது என்று கணக்கிட்டுக்கொள்ளுங்கள். கழி
வுகளில் குடியிருக்கும் ஈ, உண வாக உட்கொள்வதும் அக் கழிவு களைத்தான். ஈக்களின் கால்களி ல் பிசின் போன்ற வட்டமான ஒரு உறுப்பு உள்ளது. கழிவுகளின்மீது உட்காரும்போது இப்பிசின் போ ன்ற பகுதியில் கிருமிகள் ஒட்டிக் கொள்கின்றன. பிறகு அந்த ஈக்க ள் உணவுப் பொருட்களின் மீதோ அல்லது நம் உடலின் மீதோ உட் காரும்போது, கிருமிகள் எளிதாக நம் உடலுக்குள் சென்று விடுகின் றன.
டைஃபாய்டு, காலரா, வயிற்றுப்போக்கு, வாந்தி, போலியோ, மஞ்சள் காமாலை, காச நோய், ஆந்த்ராக்ஸ், கண் அழற்சி, வயிற்றுப் புழுக்
க ள் போன்ற பல்வேறு நோய்க ளைத் தோற்றுவிக்கும் காரணி யாக விளங்குகின்றன ஈக்கள். இந்த ஈக்களால் ஆண்டுதோறு ம் பல லட்சம்பேர் பல்வேறு தொற்று நோய்களுக்கு ஆளா கின்றனர். இவை எல்லாம் ஆர ம்பத்தில் சாதாரண வியாதிக ளாகத்தான் தோன்றும். ஆனா ல், கண்டுகொள்ளவில்லை என்றால் பெரிய ஆபத்தாகிவி டும். உதாரணமாக வயிற்றுப்போக்கு தொடர்ச்சியாக இருக்கும்போ து, உடலில் நீர்ச்சத்து குறைந்து மரணம் ஏற்படும் வாய்ப்புண்டு.
மஞ் சள் காமாலை, ஆந்த்ராக்ஸ் போன்ற வையும் உயிருக்கு உலை வைக்கக் கூ டியவை.அதனால் குப்பைகளைத்தேங் க விடாமல் உடனுக்குடன் அப்புறப்படு த்த வேண்டும். வீட்டுக்கு அருகில் தண் ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வதன் மூலம் ஈக்களின் எண்ணிக்கை பெரு காமல் தடுக்க முடியும். உணவுப் பொரு ட்களை மூடி வைத்தே பயன்படுத்த வே ண்டும். மொத்தத்தில் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொண் டால் ஈக்களால் பிரச்னை இல்லை. சுற்றுப்புறம் என்பது நம் வீடு மட் டும் அல்ல; பொது இடங்களையும் சேர்த்துத்தான். பக்கத்துத் தெருவி ல் தேங்கி இருக்கும் மழைநீரில் உள்ள ஈ, உங்கள் வீட்டுக்குப் பறந்து வர ஒரு நிமிடம்கூட ஆகாது. ஆகவே கவனம் தேவை!