Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நானா துரோகி? -படபடக்கும் எஸ்.வீ.சேகர்!

(2010 ஆம் ஆண்டு பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டி ஒரு பார்வை)

அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ. எஸ்.வீ.சேகர், கடந்த 2 வருடகாலமாக தி.மு.க. ஆத ரவாளர் என்கிற அடையாள த்துடன் இயங்கி வந்தார். எப் போது வேண்டுமானாலும் தி.மு.க.வில் இணைந்துவிடு வார் என்கிற பேச்சும் இருந்த து. இச் சூழலில், காங்கிரஸி ல் இணைவதற்கான ஒரு முயற்சியில்… ராகுல் காந்தி யை தற்போது சந்தித்திருக்கிறார். இது குறித்து டெல் லியில் இருந்த அவரை தொடர்புகொண்டு பேசினோ ம்.

* நாடக மற்றும் சினிமா நடிகராக இருக்கும் உங்களை எம்.எல்.ஏ. வாக்கி பெரிய அளவில் முக்கியத்துவம் தந்த ஜெயலலிதாவிற்கு துரோகம் செய்துவிட்டுப் போனவர் என்று உங்களை குற்றம்சாட் டும் அ.தி.மு.க.வினர், காங்கிரஸ் கட்சிக்காவது அவர் உண்மை யானவராக இருக்க வேண் டும் என்கிறார்களே?

அ.தி.மு.க.வில் சேரவேண்டும் என்று நான் முயற்சிக்கவில்லை. வீட்டுக்கு வாருங்கள் என்று ஜெயலலிதா என்னை அழைத்தார். அவ ரை சந்தித்தேன். கட்சியில் சேர்ந்து பணி செய்யுங்கள் என்றார். ஏற்று க்கொண்டேன். அப்போது, ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா? என்று ஜெயலலிதா கேட்ட போது,’ “ஒரு தலைமையி ன்கீழ் வேலை செய்வதை த்தான் நான் விரும்புகி றேன். ஆனால் அ.தி.மு. க.விற்கு ரெண்டு தலை மை இருக்கிறதாக சொல் லுகிறார்கள். அதான் யோ சனை. மற்ற படி ஒன்றுமி ல்லை மேடம் ‘’என்றேன். “அதெல்லாம் தப்பான நியூஸ். அதப்பத்தியெல் லாம் யோசிக்காதீங்க. எதுவாக இருந்தாலும் நீங்க என்னிடமே பேச லாம். வேறு யாரிடமும் பேசத் தேவை யி ல்லை’ என்றார் ஜெயலலிதா. அத ன் படிதான் நான் நடந்து கொண்டேன். அது சிலரு க்குப் பிடிக்கவில்லை.

தேர்தல் செலவுக்காக பணம் கொடுத்து அனுப்பியிருந்தார்கள். தேர் தல் முடிந்ததும் அந்த பணத்துக்கான கணக்கையும் கூடுதலாக நான் செலவு செய்த 3 லட்சத்துக்குமான கணக்கையும் ஆதாரங்களுடன் ஜெயலலிதாவிடம் தந்தேன். அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தார் அவர். காரணம், தேர்தல் செலவிற்காக அவர் கொடுத்தனுப்பிய தொகைக்கும் எனக்கு தரப்பட்ட தொகைக்கும் நிறைய வித்தியாசம் இருந்தது. உடனே சம்பந்தப்பட்டவர்களிடம் கோபப்பட்டார் ஜெய லலிதா. அன்றையிலிருந்து அ.தி.மு.க.வின் ரெண்டாவது தலைமை க்கு நான் எதிரியாகிப் போனேன். அவர்கள் செய்த சதியால்தான் நான் அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டேனே தவிர… துரோகம் செய்ததற்காக அல்ல. எந்த மாதிரி துரோகம் செய்தேன் என்பதை அ.தி.மு.க.வினரை பட்டியலிடச் சொல்லுங்களேன். பார்ப்போம்.

* அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட உங்களை அரவணைத்து, பாது காத்து, எல்லாவகையான முக்கியத்துவமும் தி.மு.க. தந்தது. நீங்க ளும் அதனை ஏற்றுக்கொண்டீர்கள். ஆனால் தி.மு.க.வில் உங்களு க்காக நீங்கள் ராஜ்யசபா சீட் கேட்க… அதனை தி.மு.க.மறுத்தது. அந்த கோபம்தான் சமீபகாலமாக நீங்கள் தி.மு.க.மீது கசப்பாக இரு ப்பதற்கும் தற்போது காங்கிரஸில் இணைய முயற்சிப்பதற்கும் காரணங்களாக இருக்கின்றன என்கிறார்கள். ஆக உங்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அரசியல் செய்வதுதான் ஆரோக்கியமா னது என்று நினைக்கிறீர்களா?

நான் எம்.எல்.ஏ.வாக இருக்கிறேன். சட்டமன்றத்திலும் வெளியேயும் என்னை பாதுகாக்கும் பொறுப்பு தமிழக அரசுக்கு உண்டு. அ.தி.மு.க. விலிருந்து கொள்ளையடித்துவிட்டோ, கொலைப்பழி ஏற்றுக்கொ ண்டோ நான் வரவில்லையே…. என்னை தமிழக அரசு அரவணை ப்பதற்கு? இல்லை… ஊழல் புகார்களோடு நான் அங்கிருந்து நீக்கப் பட்டேனா? அதுவும் கிடையாதே. அ.தி.மு.க.விலிருந்த போதே அரசி யல் நாகரீகத்தை கடைப் பிடித்தேன். அதாவது தி.மு.க.வை சட்ட மன்றத்தில் பாராட்டினேன். தயாநிதிமாறனின் விழாவில் கலந்து கொண்டேன். உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்த துரைமுருகனை சந்தித்து நலம் விசாரித்தேன். இந்த மாதிரி அரசியல் நாகரீகத்தை கடைப் பிடித்ததால் மட்டும்தான் நான் நீக்க ப்பட்டேன். என்னுடைய அரசியல் நாகரீகம் தி.மு.க.விற்கு பிடித்தது. என்னை நண்பராக முதல்வர் கலைஞரும் துணைமுதல்வர் ஸ்டா லினும் ஏற்றுக்கொண்டார்கள். அந்த நட்பிற்காகத்தான் சட்டமன்ற த்தில் தி.மு.க.வை ஆதரித்தேன். மேலவையை ஆதரித்து ஓட்டும் போட்டேன். இன் றைக்கும் நான் நட்பாகத்தான் இருக்கி றேன். ஆக, இதில் என்னை அரவணைப்பதற்கு என்ன இருக்கிறது என்று தெரி யவில்லை.

அதேபோல ராஜ்யசபா சீட் கேட்டேன் என்பது தவறானது. நான் எம் .பி. சீட் கேட்டால் எனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். ஆனால் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதை தி.மு.க.வே விரும்பவில்லை. அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று சட்டமன்றத்தில் பதவி ஏற்றுக்கொண்டபோது அந்த விழாவி ற்கு நானும் போயிருந்தேன். பதவி ஏற்பு முடிந்ததும் எல்லோரும் பேசிக்கொண்டே வெளியே வந்தபோது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துடலாம்னு இருக்கேன்’என்று நான் சொல்ல… அப்போ ஒரு மூத்த அமைச்சர்,’ “சேகர் அப்படி எதுவும் செய்துடாதீ ங்க. மீண்டும் ஒரு இடைத் தேர்தலை எங்களால சமாளிக்க முடி யாது. யாரு பணம் செலவு பண்றது?’ன்னு சொன்னார். அப்படிப்பட்ட நிலையிருக்க நான் எப்படி எம்.பி.சீட் கேட்பேன்?

* காங்கிரஸில் இணைய விரும்புகிற நீங்கள் பா.ஜ.க. முதல்வர் நரேந்திரமோடியை சிலாகித்துப் புகழ்ந்து எழுதி யிருக்கிறீர்களே?

நரேந்திரமோடிக்கு நான் நல்ல நண்பன். அந்த வகையில் அவரை பற்றி, அவரது ஆட்சியை பற்றி உண்மையை எழுதியிருக் கிறேன் அவ்வளவுதான். இதில் என்ன தப்பு? நரேந்திர மோடியை நான் சந்தி த்தது, அவர் எனக்கு புத்தகம் பரிசு தந்தது எல்லாத்தையும் ராகுல் காந்தியிடம் பகிர்ந்துகொண்டி ருக்கிறேன். அரசியலில் இது போன் று இயல்பான நட்புகள் அவசியம் என்றார் அப்போது ராகுல்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: