Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பள்ளி போக்குவரத்தில் ஓட்டைகள் பல: ஸ்ருதி சொல்லும் சேதி

அதிக குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்கள்… கவனக் குறைவான பெற்றோர் … அதி வேகமாக செல்லும் பள்ளி வாக னங்கள்… புத்தக சுமையுடன் சிரம ப்பட்டு நெரிசலில் மாண வர்கள் ஏறிக்கொண்டி ருக்கும்போ தே, வேக மெடுக்கும் பஸ்க ள்…

பாதுகாப்பில்லாத ரோட்டோர சாக்கடை குழிகள், ஆழ்குழாய் கிணறுகள்…இப்படி பள்ளிக் குழந்தைகளை பலி வாங்க காத்திருக்கும் அபாயங்களை தடுக்க, அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக் க வேண்டும் என்பதே, சென்னை மாணவி ஸ்ருதி விட்டுச்சென்றுள் ள சேதி.

ஸ்ருதியின் மரணத்தையும் மற்றொரு மர ணமாக கருதாமல், அரசு சுதாரித்தால் மட்டுமே, பள்ளிக் குழந்தைகள் தொடர்ந் து பலியாவதை தடுக்கமுடியும். சென் னையில் இரண்டாம் வகுப்பு பள்ளி மாண வி, பள்ளி வாகனத்தில் இருந்த துவாரம் வழியாக தவறி விழுந்து உயிரிழந்த சம்ப வம், பொதுமக்களை கடும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியு ள்ளது.

அரசு நடைமுறைகளில் உள்ள ஓட்டைக ளை சரி செய்ய, ஒவ்வொரு முறையும் ஏதுமறியாத குழந்தைகள் பலி கடா ஆவது தொடர்ந்து வருகிறது. ஒரு இழப்பு ஏற்பட்ட பிறகே விழித்துக் கொள்கின்றனர் அதிகாரிகள். வாகனங்களை கையாள்வோர் பின்பற்ற வே ண்டிய விதிமுறைகள் ஏற்க னவே இருக்கின்றன.

இருக்கையில் அமர்ந்தபடி, “தாள்களில்&’ மட்டுமே கவ னமாக இருக்கும் அதிகாரிக ளால், விதிமுறைகளும், வெறும் தாள்களில் மட்டுமே உறங்குகின் றன. 

ஏற்கனவே உள்ள விதிமுறைகளை, அதிகாரிகள் முழுமையாக அமல்படுத்தினாலே போதும் என்பதே, பெற்றோரின் கருத்தாக உள்ள து. மூட்டைகளை அடுக்குவது போல், குழந்தைகளை திணித் து, ஆட்டோக்கள் பல தினமும் ரோட்டில் செல்கின்றன.

மோட்டார் ஆய்வாளர்கள், போ க்குவரத்து போலீசார் கண்களி ல் இவை தென்பட்டாலும் எந்த நடவடிக்கையும் எடுப்பது கிடை யாது. இன்று ஸ்ருதி எனும் சிறுமி, பள்ளி போக்குவரத்து விதி முறைகளில் உள்ள ஓட்டைகளை சுட்டிக்காட்டவே வண்டியின் துவாரம் வழியாக விழுந்து தனது உயிரை தியாகம் செய்துள்ளாள்.

* பள்ளிக்கு சொந்தமான வாக னங்களில் மட்டுமே, குழந்தை களை ஏற்ற அனுமதிக்க வேண் டும்.

* ஒப்பந்த அடிப்படையில் தனி யார் வாகனங்களை பயன்படுத் துவதை தவிர்க்க வேண்டும்.

* ஒவ்வொரு பள்ளியிலும் மாற்று ஓட்டுனர் தயாராக பணியில் இரு க்க வேண்டும்.

* அதிக குழந்தைககளை ஏற்றிச் செல்லும் ஆட்டோ ஓட்டுனரின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.

* அரசு பஸ்களில் மாணவர் கள் ஏறுவதையும், இறங்குவ தையும் உறுதி செய்த பின் னரே, நடத்துனர் பஸ்சில் ஏற வேண்டும்.

* நகரின் மத்தியில் உள்ள பள்ளிகளில் துவங்கும் நேரம், முடியும் நேரத்தை அரை மணி நேரம் முன்பின் மாற்றியமைக்க வேண்டும்.

* பள்ளிக் குழந்தைகளுக்கென பஸ் இயக்கும் திட்டத்தை, அரசு உட னடியாக அமல்படுத்த வேண்டும். 

– dinamalar

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar