Tuesday, June 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண்களுக்கு உபயோகமான உடற்பயிற்சிகள்

 

பெண்களை காலம் காலமாக பூ, ரோஜா, பட்டு, மெல்லினம், மென் மை, தங்கம் என்று மிக மிக மெல்லி தாக வர்ணித்தே வைத்திருந்து விட் டார்கள். அதனாலேயே என்னவோ பெண்களுக்கு, ஆண்களுக்கு நிகரா க பணிபுரியும் வாய்ப்பினை வழங் காமலேயே ஆணுலகம் பத்திரமாக பார்த்து கொண்டது. இதற்கு அடிப்ப டையில் உடம்பு ரிதியாக ஒரு காரணம் இருப்பதாகவும் உலகத்தின ர் நம்பியும் வந்தனர்.
 
பெண்கள் உடல் ரிதியில் உறுதி இல் லாதவர்கள் என்பதுதான் அந்த நம்பிக்கை. பெண்களில் பலரும் கூட அப்படித்தான் பொய்யாக நம்பிக்கொண்டிருந்தனர். ஆனால் உண் மையில் பெண் ஆணைவிட உடலில் உறுதிகொண்டவள், ஒரு குழந் தையையே பெற்றெடுக்கும் உட ல் வலிமையை பெற்றவள் பெண், அதற்கேற்ப அவளின் உடல் உறுப்பு கள், இடுப்பு எலும்புகள் எல்லாம் அமையப் பெற்றிருக் கிறது என்பதே உண்மை.

இந்த உண்மை உணர்ந்த பல பெ ண்கள் இன்று ஆணிற்கு நிகரான பல பணிகளை நிகழ்த்துகின்றனர். இன்னும் அவர்கள் உறுதிபெற உட ற்பயிற்சி கை கொடுக்கும். ஏரோபி க்ஸ் என்கிற உடற்பயிற்சிகள் இன் று நவீனமாக நடைமுறையில் உள் ளது.

இன்றையபெண்கள் ஏரோபிக்ஸ் உடற்பயிற்சியை விரும்பிசெய்கின் றனர். அதற்கு காரணம் ஏரோபிக்ஸ் பயிற்சியால் உடல் எடைவெகு விரைவில் குறைவதால்தான். மேலும் இந்த பயிற்சியில் உடல் வலி இருப்பதில்லை. இந்த ஏரோபிக்ஸ் பயிற்சியால் உறுதி யான உடம்பினை மிக விரை வில் பெறலாம்.

இதில் உள்ள மைனஸ் பாயிண் ட் என்னவெனில் இதனை நவீன உடற்பயிற்சி கூடங்களில் போ ய்தான் பயிற்சி பெறவேண்டும். இல்லை யெனில் வசதி வாய்ப்புகள் இருந்தால் வீட்டில் வாங்கி பயன்படுத்தலாம். உடற்பயிற்சிக்கு என்றே வடிவமைக்கப்பட்டிருக்கு ம் சைக்கிள் ஓட்டுவது, வேகமாக நடத்தல், மெதுவாக ஓடுதல் டிரெ ல்மில் (டு) ரோலிங் மெஷின், ஸ்டெப்பர் போன்ற பயிற்சி கள் தான் ஏரோபிக்ஸ் பயிற்சி களாகும்.

இதனை தொடர்ந்து பெண்க ள் மேற்கொண்டால் உடம்பி னை எளிதாக உறுதியாக்கிக் கொள்ளலாம். ஏரோபிக்ஸில் உள்ள ஒவ்வொரு பயிற்சியும் எளிமையாகவும், சுலபமாகவும் மேற்கொள்ளும் வகையில் அமை க்கப்பட்டுள்ளது. இந்த ஏரோபிக்ஸ் பயிற்சிகள் உடலுக்கும், மனதிற் கும் வலிமையையும், புத்துணர்ச்சியையும் தரக்கூடியது.

{ { { இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம் } } }
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.
உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்.

 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: