Saturday, November 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

"வெற்றி என்பது என் கையில் இல்லை!" – நடிகை ஸ்ருதிஹாசன்

 

தமிழில் ‘7 ஆம் அறிவு’, ‘3’ படங்களிலும் தெலுங்கில் ‘பலுபு’ என்ற படத்தில் தற்போது நடித்து வரும் நடிகை ஸ்ருதிஹாசன் இவர் நடிகர் கமலஹாசனின் மூத்த மகள் ஆவார். தற்போது பிரபுதேவா இயக்கவிருக்கும் இந்திப் படத்துக்கும் கதா நாய கியாக இவரே ஒப்பந்தமாகியு ள்ளார். இதுகுறித்து நடிகை ஸ்ருதிஹாசனிடம் கேட்ட‍ போது . . . 

“நடிகையானது எனது அதிர்ஷ்டம். ஆனால் சினிமாவில் வெற்றி என்பது என் கையில் இல்லை. ஒரு கதாபாத்திரத்தில் எப்படி நடிக்க வேண்டும் என்று யோசிப்பதும் அதை திறமையாக செய்து முடிப்பது மே நடிகர்கள் வேலை.

அதேவேளை மிகுதியான நடிப்பை வெளிப் படுத்தினாலும் நன்றாக இருக்காது. எந்த அளவு நடிக்க வேண்டுமோ அந்த அளவோ டு நடிக்கிறேன். சித்தார்த்-திரிஷா ஜோடி யாக நடித்து தெலுங்கில் வெற்றி பெற்ற ‘நுவ் ஒஸ்தா னன்டே நே நொத்தன் டானா’ படத்தை பிரபுதேவா இந்தியில் ரீமேக் செய் கிறார். இதில் திரிஷா வேடத்தில் நான் நடிக் கிறேன். இது எனக்கு திரில்லிங் ஆக உள்ளது. ஒவ்வொரு படத்தையும் என் முதல் படமாக நினைத்தே நடிக்க ஆரம்பிக் கிறேன். சிறந்த நடிகை என்பதை நிரூபிக்க கிடைத்த அரிய வாய்ப்பாக பிரபுதேவா படத் தை கருதுகிறேன்”. இவ்வாறு ஸ்ருதி கூறி னார்.

 

Leave a Reply