காவியத்தலைவி என்ற திரைப்படத்தில் சௌகார் ஜானகி அவர்கள் தாயாகவும், மகளாகவும் இரு வேட ங்ளில் நடித்து அனைவரது பாராட் டை பெற்றிருப்பார்.
தாயாராக வரும் சௌகார் ஜானகி ஓரு வித நாட்டியக்காரி, இவரது கணவராக எம்.ஆர். வாசு அவர்கள் வரு வார். இவர் குடிப்பழக்கம், சூதாட்டம் தான் இவரது முழு நேர தொழிலாகும். தனது கணவ னால் தனது மகளின் வாழ்க்கை சீரழிக் கப்பட்டு விடுமோ என்ற பயந்த சௌகார் ஜானகி அவர்கள் தன்னுடன் படித்த நீண்ட கால நண்பரான ஜெமினி கணேசனிடம் கொடுத்து, தான் தான் தாய் என்பதை மறைத்து வளர்க்கச்சொல்வார்.
ஜெமினிகணேசன் அவர்களும் அவ்வாறே அப்பெண்குழந்தை எடுத் து வளர்த்து, வழக்கறிஞர் பட்டப்படிப்பு படிக்க வைத்தார். அவளும் படித்து முடித்தார். அவ ளோடு படித்த ஆண் தோழரை தான் மணக்க விருப்பதாக ஜெமினியிடம் சொல்ல அதற்கு ஜெமினியும் சௌகார் ஜானகியி ன் சம்மதத்துடன் சம்மதிப்பார்.
சௌகார் ஜானகியின் மகளான இன்னொரு சௌகார் ஜானகி, விழா ஒன்றில், தனது தாயாரை நினைத்து பாடல் ஒன்றை பாடுகிறார். அப் பாடல் ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு என்று தொடங்கு ம் பாடல் ஆகும். இப்பாடலில் தனது தாயாரை நினைத்து பாடு வதாக காட்சி அமைக்கப்பட்டி ருக்கும், இந்த பாடலை மாடியி ல் மறைந்து இருந்து கேட்ட இவளது அம்மாவாகிய சௌகா ர் ஜானகி, உணர்ச்சி வயப்பட்டு,
“கண்ணா சுகமா!, கிருஷ்ணா சுகமா!, கண்மனி சுகமா சொல் என்றேன்!”. என்று பாடிடுவார். இவ் வரிகளை பாடி முடித்த பின் தான் உணர்ச்சிவசப்பட்டதை அறிந்து பாதியிலேயே நிறுத்திவிடுவார். இந்த வரிகளைகேட்ட மகளான சின்ன சௌகார் ஜானகி, யார் பாடு வது என்று ஜெமினியிடம் கேட்க, அதற்கு ஜெமினோ ரேடி யோவில் பாடல் ஒலிப்பதாக சொல்லி சமாளித்து அதை அணைக்க முற்பட, மகளோ அதை அணைக்க வேண்டாம் என்று தடுத்து, அந்த பாடலை கேட்க ஆவலாகிறாள்.
பாடலும் தொடர்கிறது, இப்படா லின் முடிவில் மகளை பாடல் வந்த திசை நோக்கி அவளது கால்கள் செல்ல, எங்களே தன்னை தனது மகள் பார்த்து விடுவார் என்ற அச்ச த்தோடு தாயாரான சௌகார் ஜானகி, மறைவிடம் தேடி ஓடும்போது, அவளது தலையில் சூட்டப்பட்டி ருக்கும் மலர் கீழே விழுந்திடும். அம்மலரை மகள் கையில் கிடைப்பதாக அமைக்கப்பட்ட காட்சியை பார்வையாளர்களா ன நாம் பார்க்கும்போது, எங்கே அந்த மகள் தனது தாயாரை பார் த்து விடுவாளோ என்ற அச்சமு ம், இத்தருணத்திலாவது தாயும் மகளும் ஒன்று சேர மாட்டார் களா என்ற ஏக்கமும் ஒரு சேர நம் எல்லோர் மனங்களிலும் தோன்றி ஒரு வித பாதிப்பை ஏற்படுத்து ம் இந்த பாடல் உண்மையிலேயே சூப்பர் ஹிட் பாடலே! காலத்தால் அழிக்க முடியாத பாடலே ஆகும். இதோ அந்த பாடலை நீங்கள் கேளுங்கள் (விதை2விருட்சம்).
விதை2விருட்சம்
விதை2விருட்சம்
விதை2விருட்சம்