கர்நாடக சங்கீதம், பரதநாட்டியம் இரண்டிலுமே, 90 சதவீதம் எம்.பி. ஏ., பட்டதாரிகள் பலர் உள்ளனர். இளம் பாடகி அம்ருதா முரளியும் இந்த வகையைச்சேர்ந்தவர். இது மட்டுமின்றி தலை சிறந்த வயலின் கலைஞரும் கூட. அம்ருதா முரளி அண் மையில் மயிலை ஸ்ரீ தியாக ராஜ வித்வத் சமாஜ வளாகத் தில் பாடியது, சிறப்பாக இரு ந்தது. அம்ருதா முரளியின் இசை அணுகுமுறை குறிப் பாக ராக ஆலா பனைகளில் நல்ல தேர்ச்சி பெற்று, அவர் பாடும் முறை அலட்டிக் கொள்ளாமல் பட்டு போன்று வழுக்கும் மிருதுத் தன்மை யுடைய குரல், சுருதி சுத்தம் இவை எல்லாமே இவருக்கு கூடுதல் சிறப்புகள்.
இந்நிகழ்ச்சியில், ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுடைய உயர்வான பொருள் அமைந்த தெரதீயக ராதா (கௌளி பந்து – ஆதி) கீர்த்தனை யே அருமையான துவக்கம். திருமலை வேங்கடரமண சுவாமியிடம் தன் மனதிலிருக்கும் பொறாமையென்ற திரையை விலக்கக்கூடா தா என்று முறையிடும் ஒப்பற்ற பாடல் இது. இதை அம்ருதா மிக நயமாகப் பாடினார். இதைத் தொடர்ந்து, “ஹரிகாம்போதி’யில் மை சூர் சதாசிவ ராவ் இயற்றிய சாகேத் நகர கீர்த்தனை படுசுகமாக நிரவல் ஸ்வரங்களை பளிச்சென்று பாடியதும் பலேயென்று பாராட் டலாம்.
நிகழ்ச்சியில் அம்ருதா கையாண்ட கல்யாணி பிரதான கரஹர ப்ரியா ராகங்கள் இரண்டுமே அவருடைய உயர்வான கற்பனைகள் சிறகு விரிக்க சுகமாகவே அமைந்திருந்தது. பிரதானமாக கையா ண்ட ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுடைய நடசி நடசி (ஆதி) கீர்த்தனை யும் இதன் நிரவல் ஸ்வர குறைப்பு மோகரா கோர்வைகள் முத்தா ய்ப்பு பாராட்டும் வகையில் இருந்தன.
ஸ்ரீ சதாசிவ பிரும்மேந்திரருடைய, புகழ்பெற்ற பாடலான “பிபரே ராம ரசம் (யமுன் கல்யாணி) (ஆதி) மற்றும் நிறைவாகப் பாடிய தஞ்சா வூர் கல்யாணராமன் இயற்றிய சிந்துபைரவி தில்லானா எல்லாமே சுருதி சுத்தமாக மன நிறைவை அளித்தன.
பக்கவாத்தியமாக மீரா சிவராமகிருஷ்ணன் வயலின் வாசிப்பு சில இடங்களில் “ஓ கோ’ வென்று இருந்தது. பல இடங்களில் தொடர்ச்சி சரியாக இல்லை. மிகச் சிறந்த வயலின் விதூஷி அவர் என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும். சில கச்சேரிகள் இப்படி அமைவது உண்டு .
தஞ்சாவூர் பிரவீண் குமார் மிருதங்கம், நிகழ்ச்சியில், சிறந்த அனுசர ணையுடன் கணீரென்று நாதம் வாசிப்பு நல்ல நயமாக இருந்தது. தனி ஆவர்த்தனத்தில் நிறைய நடைகளை ஆர்வத்துடன் வாசித்துக் காட்டியது ரசிக்க வைத்தது.
– மாளவிகா (தினமலர்)