Friday, December 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

குழந்தை பெற்ற பெண்களுக்கு . . .

கர்ப்பமாக இருக்கும்போது உணவில் காட்டும் அக்கறையை குழந் தை பெற்றபின்னர் பெரும்பாலான தாய்மார்கள் காட்டுவதில்லை. அதற் குக் காரணம் அக்கறையின்மை என்ப தை விட நேரமின்மை என்றே கூறலா ம். புது அம்மாக்களுக்கு உறங்குவதற் குக்கூட நேர மிருக்காது அந்த அளவி ற்கு குட்டிப்பாப்பாவின் வருகை பிஸி யாக் கிவிடும்.
 
குழந்தை பெற்ற பெண்களுக்கு என்ன தான் நேரமில்லை என்றாலும் தங்க ளின் நலனின் கொஞ்சமாவது அக்க றை செலுத்தினால்தான் தொடர்ந்து ஆரோக்கியமாக நடமாடமுடியும் என்று என்று அறிவு றுத்துகின்றன ர் நிபுணர்கள். அம்மாக்கள் சாப்பிட வேண்டியவைகளை பட்டியலிட் டுள்ளனர் மகப்பேறு மருத்துவர்கள் படியுங்களேன்.

பிரசவத்தின் போது ஏற்படும் ரத்த இழப்பை ஈடுசெய்வதற்கும் தாய்ப் பால் சுரப்பதற்கும் நல்ல சத்தான உணவுகளை அதிக அளவில் உண வில் சேர்த்து கொள்ள வேண்டும். புரதம், இரும்பு சத்து மற்றும் வைட் டமின் நிறைந்த உணவுப் பொருள் களை உண்ண வேண்டும். அது தாய்க்கும் சேய்க்கும் ஆரோக்கிய த்தை தரும். உடலில் நீர்ச்சத்து குறைந்தால் தாய்ப்பால் சுரப்பதில் சிக்கல் வரும் எனவே அதிகம் தண் ணீர் அருந்துங்கள். அவ்வப்போது வெதுவெதுப்பான நீர் அருந் துவது ஜீரணத்திற்கு நல்லது.

தாய்மார்கள் உண்ணும் உணவில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டு அது ஜீர ணம் ஏற்படாமல் இருந்தால் அந்த உணவுக்களை தவிர்த்து விடுங்கள். அப்பொழுது குழந்தைக்கு தாய்ப்பால் தரவேண்டாம் என்பது மருத்துவர் கள் அறிவுரை.

வைட்டமின் சத்து நிறைந்த காரட், பீட்ரூட், சேனைக்கிழங்கு போன்ற தாய்க்கு அவசியம். அதேபோல் நார்ச் சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளவேண்டும்.

வெந்தயம், வெந்தையக்கீரையை உணவில் எடுத்துக் கொள்ளுங்க ள். இது தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்கும். அதேபோல் கால்சிய ம் சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளவேண்டும். முந்தி ரி, பாதாம் போன்ற உலர் பருப்பு களை உட்கொள்வது தாய்பால் உற்பத்தியை அதிகரிக்கும். புர தச்சத்து நிறைந்த முட்டை, பீன் ஸ் ஆகியவைகளை தின சரி உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

உணவில் சிறிதளவு நெய் சேர்த்துக்கொள்வது பழுதடைந்த தசை யை புதுப்பிக்கும். மாலை நேரத் தில் பசிக்கும் பொழுது எண்ணெய் பலகாரங்களை சாப்பிடுவதை தவிர்த்து பழங்களை கட் செய்து வைத்துக்கொண்டு சாப்பிடலாம் இதனால் தேவையான ஊட்டச்சத் துக்கள் கிடைக்கும்.

பெரிய வெள்ளைப்பூண்டு பத்துபல் உரித்து அதை நன்றாக நல்லெண் ணெயில் வதக்கி அத்துடன் நாட்டுவெல்லம் சேர்த்து சாப்பிட பச்சை உடம்புக்குத் தேவையான இரும்புச்சத்து கிடைக்கும். குழந்தைக்குத் தேவையான தாய்ப்பால் கி டைக்கும்.

பிள்ளைப்பெற்றவர்கள் கார சார உணவை தவிர்த்து விடு ங்கள். அதற்குபதிலாக மிள கு த்தூள் போட்டு சமைக்க லாம். ஏனெனில் அது தான் கருப்பைக்கு ஏற்றது. அதே போல் காபி, டீ, போன்ற பானங்களை தவிர்த்துவிடுங்கள். அப்பொழுதுதான் பழைய உடம் பை திரும்ப பெறமுடியும்.

இரவில் சரியாக தூங்க முடியா தவர்கள் பகலில் நன்றாக தூங்கி ஓய்வு எடுக்கலாம். சரியான அள விற்கு ஓய்வு எடுப்பதோடு கடு மையான வேலைகள் தவிர்க்க வேண்டும் சில மாதங்களுக்கு தவிர்க்க வேண்டும்.

பிரசவத்திற்கு பின் உடலை சரியாக பராமரிப்பதில்லை. இதனால் அவர்களின் உடல் பல உபாதைகளை சந்திக்க நேரிடுகிறது. பிரசவத் திற்கு பின் அடிவயிற்றில் துணி சுற்றி கட்டாதவர்க ளுக்கும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றவர் களும் பெல்ட் போடாதவர் களுக்கும் வயிற்றில் சதை அதிகமாக காணப்படும். 

இவர்கள் சின்ன வெங்காய த்தை பசுநெய்யில் வதக்கி நன்கு மெழுகு போல் அரைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை என தினமும் இருவேளை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் அடிவயிறு சதை குறைந்து உடல் அழகாகும்.

{ { { இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம் } } }
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.
உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: