தேவையான பொருட்கள் :
காளான் – 500 கிராம்
வெங்காயம் – 2
குடைமிளகாய் – 1
வெங்காயத்தாழ் – 1
பச்சை மிளகாய் – 4-6
இஞ்சிபூண்டு விழுது –2-3 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் –2-3 டேபிள் ஸ்பூன்
கார்ன் ஃப்ளார் – 1 டேபிள் ஸ்பூன்
வினிகர் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – 1/2 கப்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை :
முதலில் காளானை நன்கு சுத்தமா க கழுவி, சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பிறகு வெங் காயம், பச்சை மிளகாய், குடை மிளகாய், வெங்காயத் தாழ் போன் றவற்றை நறுக்கிக் கொள்ளவும்.
பின் வெங்காயத்தை மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும். மே லும் அத்துடன் இஞ்சிபூண்டு விழு தையும் சேர்த்து அரைத்துக் கொள் ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் எண் ணெய் விட்டு சூடேற்றவும். பின் அதில் அரைத்த வெங்காய கலவை யை சேர்த்து வதக்கவும்.
பிறகு அதில் நறுக்கிய குடைமிளகாய், பச்சை மிளகாய், மிளகாய்த் தூள் மற்றும் உப்பு சேர்த்து 2-3 நிமிடம் வதக்கவும்.
பின் அதனுடன் வினிகர் மற்று ம் சோயா சாஸை ஊற்றி கிள றவும். இனிப்புச் சுவை வேண் டுமென்றால், அதோடு தக்கா ளி சாஸை ஊற்றி 1 நிமிடம் கிளறவும்.
பிறகு கார்ன் ஃப்ளாரை தண் ணீரில் கரைத்து அதில் ஊற்றி, கெட்டி யான கிரேவி போல் வரும் வரை நன்கு கொதிக்க வைக்கவும். பின் அதில் நறுக்கிய காளான் துண்டுகளை போட்டு, நன்கு கிளறி கிரேவியானது காளானில் இறங் கும் வரை 1-2 நிமிடம் வேக வைக்கவும்.
இப்போது சுவையான, அருமையான காளான் சில்லி ரெடி!!! இதன் மேல் நறுக்கிய வெங்காயத் தாழை தூவி பரிமாறலாம்.
அருமை