Sunday, June 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தம்பதியர்கள் போடும் சண்டை – ஓர் உளவியல் அலசல்

 

சண்டை இல்லாத வீடு என்பது கிடையது. புதிதாய் திருமணமானவர் கள் என்றாலும் சரி நீண்ட நாட்கள் ஆன தம்பதியர் என்றாலும் சரி சண்டை வரு வது சகஜமான ஒன்றுதான். ஆனால் இவர்கள் இருவரு க்குள்ளும் இருக்கும் ஒரே வித்தியாசம் என்னவென்றா ல், அவர்கள் சண்டை போடு ம் காரணங்களே ஆகும். 

அதாவது பழைய தம்பதியர்கள் போடும் சண்டைகளானது சற்று கடு மையாக, பெரிய விஷயங்களாக இருக்கும். ஆனால் புதிதாக திரு மணம் ஆனவர்களுக்கு வரும் சண்டைகளோ சிறு சிறு காரணங் க ளாகவே இருக்கும். அந்த சண் டைகளும் சிறு பிள்ளைத்தனமாக வே இருக்கும். மேலும் அந்த திரு மணமான தொடக்கத்தில் இருவ ரும் ஒருவரை ஒருவர் முழுவதும் புரிந்து கொள்ளாததாலும் வரும் என்றும் அனுபவசாலிகள் கூறுகின்றனர். அதிலும் அவர்கள் சண் டை போடுவதற்கான அந்த சிறு காரணங்கள் என்னவென்றும் அவர் கள் பட்டியலிட்டுள்ளனர்.

திருமணம் ஆன முதலில் இருவரு ம் முதன் முறையாக ஒரே வீட்டி ல் இருப்பதால், இருவருக்கும் வீட் டில் அவர்கள் எவ்வாறு இருப் பார்கள் என்பது பற்றிய பழக்க வழக்கங்கள் எதுவும் தெரியாது. உதாரணமாக, காலையில் லேட் டாக எழுந்திருப்பது, எழுந்ததும் பல்கூட துலக்காமல் பால் குடிப்ப து, குளியலறையில் குளித்துவிட்டு அழுக்குத் துணிகளை அப்படியே போட்டுவிட்டு சுத்தமாக இல்லாமல் இருப்பது போன்றவற்றாலே பெரும்பாலும் சண்டைகளானது வரும். மேலும் அதனை மாற்ற வே ண்டும் என்று நினைத்தாலும், அந் த பழக்கங்கள் மாறாமல் தினமும் ஏதேனும் ஒரு காரணத்திற்காக சண்டைகளா னது வரும்.

திருமணம் ஆகி நீண்ட நாட்கள் பெ ற்றோருடன் இருந்து அவர்களை விட்டு பிரிந்திருப்பதால், அவர்க ளை காண வேண்டும் என்று மனைவி கணவரிடம் கேட்பாள். அவ் வாறு ஒன்று அல்லது இரண்டு முறை கேட்கலாம். ஆனால் அதை யே அடிக்கடி கேட்டால் அதுவே பெரும் சண்டையாகிவிடும்.

மேலும் திருமணத்திற்கு முன் கணவன், அலுவலகத்தில் அதிக வேலை காரண மாக நேரம் கழித்து வந்தால் யாரும் எதும் சொல்ல மாட்டார்கள். அப்போது கேள்வி கேட்க யாரும் இல்லை என்ற சந்தோஷத் தில் அலுவலகத்தில் இருக்கலாம். ஆனா ல் அதுவே திருமணம் ஆன பின்னர் அவ் வாறு லேட்டாக வந்தால் அவ்வளவு தான், வீட்டில் பெரும் பூகம்பமே வெடித்து விடு ம். பிறகு அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்து ஏற்படும் களைப்பைவிட, அவர்க ளை சமாதானப்படுத்த ஏற்படும் களைப்பே பெரும் களைப்பாகிவிடும்.

திருமணத்திற்கு பின், தம்பதியர்கள் தனியாக வீடு எடுத்து தங்கினா ல், தங்கள் வேலைகள் அனைத்தையும் பகிர்ந்து கொள்வார்கள். அவ்வாறு பகிர்ந்துகொள்ளும்போது அந்த வேலையை சரியாக செய்ய வில்லையென்றால், அதற்கும் சண் டைகளானது வரும். அந்த சண்டை களைவிட கூட்டுக்குடும்பத்தில் இரு ந்தால், அப்போது வரும் சண்டைக் கு அளவே இருக்காது. உதாரணமா க, மனைவி அவள் வீட்டில் நிறைய வேலைகளை செய்யாமல் இருந்து, கூட்டுக் குடும்பத்தில் வந்தவுடன் அனைத்து வேலைகளையும் அவ ளே செய்யவேண்டி வந்தால், அப் போது என்ன வரும்? வேறு என்ன சண்டை தான்.

இருவரும் அவர்களது குணங்களை சரியாக புரிந்து கொள்ளாததா ல், கணவன் ஏதோ கிண்டலாக சொல்ல, அந்த வார்த்தை அல்லது கணவன் கூறிய விதம் பிடிக்கா மல் போக, அந்த நேரத்தில் விளை யாட்டாக ஆரம்பிக்கப்போய் விபரீ தம் ஆன கதையாக, அதுவும் ஒரு சண்டையிலேயே போய் முடியும்.

ஆகவே இத்தகைய சண்டைகள் அனைத்தும் ஒரு வகையில் அவர் கள் இருவரும், ஒருவரை ஒருவர் நன்கு புரிவதற்காகவே ஏற்படுகிறது. இதன் மூலமும் அவர்கள் இரு வரும் நன்கு புரிந்து கொண்டு, பிற்காலத்தில் அதனை தவிர்த்து, அவர்களை புரிந்து ஒரு நல்ல வாழ்க்கையை நடத்த உதவும் என்று கூறுகின்றனர்.

{ { { இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம் } } }
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.
உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்.

 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: