Sunday, October 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ரத்தசோகை நோயின் அறிகுறிகளும் தீர்வுகளும்

சத்தான உணவு சாப்பிடாவர்களுக்குதான் அதிகளவில் ரத்த சோகை வரும். குறிப்பிட்ட நோயினால் அதிகம் பாதிக்கப்படுவோர், அறுவை சிகிச்சைக்கு பின் சிலர், வயதான வர்கள் போன்றவர்களுக்கு ரத்த சோகை வர வாய்ப்பு உண்டு. இத னால்தான் டாக்டர்கள் இவர்களை சத்துணவு சாப்பிடும்படி அறிவுறுத் துவர்.

காய்கறி, பழங்கள், முட்டை, மீன் போன்ற சத்தான உணவுகளை சாப் பிட்டால் தான் வைட்டமின், கனிம சத்துக்கள் கிடைக்கும். அப்படி இருந்தால் ரத்த சோகையே வராது. எந்த ஒரு கோளாறு இருப்பதையும் வெளித்தோற்றத்தில் காட்டிக் கொடுத்து விடும். ஆனால் பலரும் அதை கண்டுகொள்வதே இல் லை.

ரத்த சோகைக்கும் அப்படி பல அறி குறிகள் உள்ளன. அடிக்கடி சோர் ந்துபடுப்பர். எந்த வேலையும் செய் ய மனது வராது. அப்படியே செய்ய முயற்சி செய்தாலும் உடல் உழை க்காது, பசி எடுக்கும். ஆனால் சாப் பிடவும் பிடிக்காது. நடக்க பிடிக்கு ம், ஆனால் மூச்சு வாங்கும், நாடித் துடிப்பு படபடக்கும். யாருடனும் பேச பிடிக்கும். ஆனால் எரிச்சல் வரும். கண்களை சுற்றி கரு வளை யம் ஏற்படும். நகங்கள் வெண் மை படியும்.

வேறு அறிகுறிகள்…

சிலர் திடீரென சாப்பிடு வர். கேட்டால் விளக்க ம் சொல்லத் தெரியா து. சிலர் ஐஸ் கட்டிகளை வாயில் போட்டு மெல் லுவர். கொஞ்சம்கூட கவலைப்படமாட்டார். அதுபோல, புண்ணாக்கு போன்ற கால் நடை தீவனங்கள் உள்பட மனிதர்களின் உணவு அல் லாத உணவுகளை சாப்பிடுவதில் விருப்பம் இருக்கும். இவற்றை அடிக்கடி சாப்பிட்டா ல், அவர்களை டாக்டரிடம் காட்டுவதே நல்லது. அவர்களுக்கு கண் டிப்பாக ரத்தசோகை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: