Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ரெயில் விபத்தில் உடல் கருகி பலியான "புதுமண தம்பதி"

 

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள நந்தி கிராமத்தை ச் சேர்ந்தவர் வெங்கடரமணா (24). இவருக்கும் ஆந்திர மாநிலம் அனிமலபேடு கிராமத்தைச் சேர்ந்த பவானி என்ற பெண்ணுக்கும் 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. 

எம்.சி.ஏ. பட்டதாரியான ரமணா சென்னையில் போர்டு கார் நிறுவன த்தில் வேலை பார்த்து வந்தார். பல்லவியும் எம்.சி. ஏ. படித்துள்ளார். இவரும் வேலைக்கு முயற்சி செய்து வந்தார். 

திருமணத்துக்கு பிறகு பல்லவி அவரது குடும்ப வழக்கப்படி சில மாதங்க ள் அவரது சொந்த ஊரில் பெற்றோருடன் தங்கி இரு ந்தார். சில தினங்களுக்கு முன்பு வெங்கடரமணா ஆந்திரா சென்றார். 2 நாட்களுக்குமுன்பு சொந்த ஊருக்கு மனைவியுடன் சென்ற வெங்கட ரமணாவுக்கும், அவரது மனைவி பல்லவிக்கும் குடும்ப வழக்கப்படி சடங்குகள் நடந்தன. 

இதில் புதுமண தம்பதியர் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர். அவர் கள் குடும்பம் நடத்துவதற்காக சென்னையில் ஒரு வீடு பார்த்து இருந்தனர். இதில் குடியேறுவதற்காக புதுமண தம்பதியர் நேற்று முன் தினம் ஊரில் இருந்து புறப்பட்டனர். 

விஜயவாடாவில் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறிய புதுமண தம்பதியரை குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் வழியனுப்பி வைத்தனர். எஸ்-11 பெட்டியில் வெங்கடரமணா-பல்லவி இவர்களுடன் மாமியா ரும் இதே பெட்டியில் பயணம் செய்தார். 

காலையில் சென்னை வந்து புதிய வீட்டில் தனியாக குடும்பம் நடத் தும் மகிழ்ச்சியில் ரெயிலில் பணம் செய்த புதுமண தம்பதி உள்பட 3 பேரையும் எமன் தீ வடிவத்தில் வந்து எரித்து சாம்பலாக்கி விட்டான். 

ரெயில் தீ விபத்தில் வெங்கடரமணா-பல்லவி புதுமண தம்பதியினர் உயிர் இழந்தது குடும்பத்தினரையும், நண்பர்களையும் தீராத சோகத் தில் ஆழ்த்தி உள்ளது.

news in malaimalar

 

2 Comments

  • இவர்கள்….ஆத்மாசாந்தியாக கடவுளிடம் ப்ராத்தி க்கின்றேன் —-ஓம்சாந்தி…சாந்தி…சாந்தி.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: