”சென்னை சர்வதேச ஃபேஷன் வார விழா” சென்னையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(29.07.12) அன்று நடந்தது. மாடலிங் துறையைச் சேர்ந்த பலரும் பங்கேற்ற இவ்விழாவில் சினேகா, பிரச ன்னா, கார்த்திகா நாயர், அஜ் மல், மகத், லட்சுமிராய் ஆகிய திரை நட்சத்திரங்களும் கலந் துகொண்டனர். கடந்த ஆண் டு நடைபெற்ற இதே விழா வின்போது சினேகாவும் பிரச ன்னாவும் இதேபோல ஜோடி யாக கலந்து கொண்டனர். ஆனால் அவர்கள் இருவரும் காதலர்கள் என்பது அவர்கள் மட்டுமே அறிந்த ரகசியமாக இருந்தது. ஆடி மாதம் என்பதால், புது மணத் தம்பதிகளான சினேகாவும்-பிரசன்னாவும் தற்காலிக பிரிவு ஏற்பட்
டிருகிறது.
இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த சினேகா கேள்வி ஒன்றி ற்கு அளித்த பதில்
கேள்வி: “சென்ற வருடமும் நீங்கள் பிரசன் னாவுடன் ஜோடியாக நடந்து வந்தீர்கள். இப்போது கணவன் மனைவியாக நடந்து வரும் போது எவ்வாறு உணர்கிறீர்கள்?”
ஸ்நேகா: போன வருஷம் நாங்க இந்த நிக ழ்ச்சியில் நடந்து வரும் போது காதலிச்சி கிட்டு இருந்ததே யாருக்கும் தெரியாது. போன வருஷம் காதலர்கள்; இந்த வருஷ ம் கணவன் மனைவியா நடந்து வர்றோம்.
கேள்வி: “பிரசன்னாவோட மனைவியா எப்படி உணர்கிறீர்கள்?”
ஸ்நேகா: பிரசன்னாவோட மனைவியா இருக்க எனக்கு விருப்பமில் லை. பிரசன் னாவோட மனைவியா இருக்குறத விட, காதலியா இருக்கதான் ஆசைப்படுகிறே ன்.
கேள்வி: “கார்த்தி நடிக்கும் ‘பிரியாணி’ படத்துல நீங்க ரெண்டு பேரும் ஜோடி யா சிறப்பு தோற்றத்துல நடிக்கிறதா பேசி க்கிறாங்க ளே?”
ஸ்நேகா: அதுபற்றி இன்னும் முடிவாக ல. பேசிகிட்டு இருக்கோம். முடிவு எடுத் தது ம் கண்டிப்பா சொல்றேன்.