Monday, January 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

எம்.ஜி.ஆர்-ஐ மட்ட‍ம் தட்டும் "போலி எம்.ஜி.ஆர்."

தமிழ் சினிமாவின் நிரந்தர சூப்பர் ஸ்டார் எப்போதுமே எம்.ஜி.ஆர் தான். தமிழ் சினிமாவின் முதல் ரியல் ஹீரோவும், கடைசி ரியல் ஹீரோவும் அவர் தான். சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்விலும் ஹீரோவாக வலம் வந்தவர் . அவர் மறைந்து பல ஆண்டுகள் ஆகி விட்ட நிலையிலும் இன்றைக்கும் லட்ச க்கணக்கான மக்களின் வீட்டு பூஜை அறையில் தெய்வங்களோடு தெய்வமா க இருப்பவர். அவரின் ஒவ்வொரு அசை வும், ஒவ்வொரு சொல்லும் அவரது ரசிக ர்களுக்கு அத்துபடி. இன்றைக்கும் அவ ரைப்போல தொப்பி அணிந்து கொண்டு, அவரைப்போல கண்ணாடி அணிந்து கொண்டு, அவரைப்போல மேனரிசத் தோ டு வாழ்பவர்கள் நிறையவே இருக்கிறார்கள். அவர் இறந்துவிட் டதைகூட நம்பாத முதியவர்கள் இப்போதும் உண்டு. அப்படிப்பட்ட எம்.ஜி.ஆரின் பெயரும், அவர து வாழ்க்கை ஸ்டைலும் இன் றைக்கு பலபேரை வாழ வை த்துக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் அவர் புகழ் பா டுவதாக நினைத்துக் கொண் டு அவரையே கேலிக் கூத்தா க்குகிற நிகழ்வும் நடந்து கொ ண்டிருக்கிறது. அதில் ஒன்று தான் வாலிபன் சுற்றும் உலக ம் என்ற பெயரில் தயா ராகி உள்ள படம்.

சினிமாவில் அதிக தொழில்நுட்பம் வளராத காலகட்டத்தில் சிங்கப் பூர், மலேசியா நாடுகளுக்கு சென்று எம்.ஜி.ஆர் தயாரித்து நடித்த

எம்.ஜி.ஆர். வேடத்தில் சிவா

படம் உலகம் சுற்றும் வாலிபன். இன் றைக்கு வெளிவரும் பிரமாண்ட பொழு துபோக்கு படங்களுக்கு அதுதான் பிள் ளையார் சுழி போட்ட படம். இப்போ தும் தமிழ்நாட்டில் எந்த தியேட்டரில் போட் டாலும் ஒருவாரம் கலெக்ஷனை அள்ளி க் கொடுக்கிற படம். அந்தப் படம் எத்த னை இடையூறு  களை சந்தித்து வெளி வந்தது. அது எத்தனை பெரிய வெற்றி பெற்றது என்பது அக்காலத்திய மக்களு க்கு நன்றாக வே தெரியும். ஒரு ஜனரஞ்சக சினிமா எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அதனை பாடமாகவே வைக்கலாம். அப்படிப்ப ட்ட அற்புத மான படத்தை உல்டா செய்து இந்தப் படத்தை எடுத்திரு க்கிறார்கள்.

எம்.ஜி.ஆர் சிவா என்பவர் எம்.ஜி.ஆர் தோற்றத்தில் நடித் திருக்கிறார். தாடி வைத்தவ ன் எல்லாம் தாகூர் ஆகிவிட முடியுமா? மொட்டை அடித்து கண்ணாடி போட்டவன் எல் லாம் காந்தி ஆகிவிட முடியு மா? தொப்பி வைத்து கூலிங் கிளாஸ் போட்டவன் எல்லாம் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியுமா. அப்படி த்தான் முயற்சித்திருக்கிறார் சிவா. எம். ஜி. ஆர் வேடமிட்டு மேடை யில் ஆடட்டும் பாடட்டும், அதனால் சிறு வருமானம் கிடைத்து பிழை த்துக் கொள்ளட்டும். ஆனால் அவரையே கேலிப்பொருளாக்கி ஒரு திரைப்படம் எடுத்திருப்ப தை எப்படி சகித்துக் கொள்வா ன் எம்.ஜி.ஆர் ரசிகன்.

வாலிபன் சுற்றும் உலகம் படத் தில் சிவா எம்.ஜி.ஆர் போலவே நடக்கிறர். அவர் பல படங்களில் செய்த ஸ்டைலை இவர் ஒரே படத்தில் செய்கிறார். டூயட்டில் எம்.ஜி.ஆர் போலவே ஆடுகிறார். எம்.ஜி.ஆரி ன் ஒவ்வொரு அசைவு ம் ஒரு ஸ்டைல் அதைப் பார்த்து பார்த்து ரசி த்து வாழ்ந்தவன் அவரது ரசிகன். ஆனால் இந்தப் படத்தில் அதையே ஒரு வரைமுறையின்றி செய்து எம்.ஜி. ஆரின் ஸ்டைல், மேனரிசங் களை கொச் சைப் படுத்தி யிருக்கிறார்கள்.

கதையும் உலகம் சுற்றும் வாலிபன் படத் தின் உல்டாதான். தொற்று நோய்களை குணப்படுத்தும் ஒரு மருந்தை கண்டு பிடி க்கிறார் ஒரு வர். வில்லன் கூட்டம் அந்த மருந்தின் ரகசியத்தை அழிக்க நினைக்கி றது. இதனால் வில்லன்கள் நடத்தும் தாக் குதலில் குடும்பம் பிரிகிறது. ஒரு மகன் தாயுடனும், இன்னொரு மகன் வேலைக் காரனுடனும், மகள் தந்தையுடனும் செல் கிறார்கள். பிற்காலத்தில் மூவரும் எப்படி இணைகிறார்கள் என்பதுதான் கதை.

news in dinamalar

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: