Friday, November 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கடவுளின் பெயரை கூறி நடக்கும் மூட நம்பிக்கைகளை தடுத்து நிறுத்துவது தானே உண்மையான பகுத்தறிவு?

ஆதித் தமிழன் எந்த ஒரு செயலையும் ” எடுத்தோம், கவிழ்த்தோம் ” என்று செய்ததில்லை, தான்செய்து வைத்துவிட்டு சென்ற ஒவ்வொ ரு விடயத்திற்கு பின்னாலும், “அறிவி யல், மருத்துவம், விஞ்ஞானம், என்ற எண்ணற்ற விடயங்கள் அதனுடன் விட்டுச் சென்றிருக்கிறான்.
ஆனால் அதனுடன் சேர்த்து அவன் செய்துவிட்டு சென்ற மிகப்பெரிய தவறு, அந்த ஒவ்வொன்றிற்கும் பின் னால் “கடவுள்” பெயரைசொல்லிவி ட்டு சென்றதுதான்,ஒருவேளை அவ ன் கடவுள் பெயரை கூறினாலா வது பயந்து கொண்டு அந்த விடயங்க ளை கடைபிடிப்பார்கள் என்றதொ லைநோக்கு பார்வையாககூட இருந்திருக்கலாம், ஆனால் பாவம் அவனுக்கு தெரியாது, வரும் சந்ததியினர், கவர்ச்சி நடிகைக் கெல் லாம் கோயில் எழுப்பி,தான் பெரிதாக நினைத்த கடவுளையே கூட இழிவுபடுத்துவர் என்று. இன்றைக் கு பகுத்தறிவு என்ற பெயரில், நம் முன்னோர்களின் பல அறிய கண் டுபிடுப்புகளை நாளுக்குநாள் நாம் அழித்துக் கொண்டு வருகிறோம் என்று தான் கூறவேண்டும், கோ விலுக்கு செல்ல கூடா, சாமியும் இல்லை, பூதமும் இல்லை, என்ற வாதம் தான் இன்றைய பகுத்தறி வின் வெளிப்பாடாக இருக்கின்ற து. அது உண்மையா, பொய்யா என்பது தனி நபர் விருப்பத்திற்கு உட் பட்டது. ஆனால் நாளடைவில் அந்த விடயம் பலரால், பலவிதமாக திரித்து   இன்று   நம்    அடையாளங்களை  இழக்கும் நிலைக்கு வந்து

விட்டோம் என்பதே உண் மை.கடவுளின் பெயரை கூறி நடக்கும் மூட நம்பிக்கைகளை தடுத்து நிறு த்துவது தானே உண்மையான பகுத் தறிவு?உதாரணத்திற்கு பவுர்ணமி அன்று கிரிவலம் வந்தால் நல்லது, என்பதற்கு பின்னால் கடவுளின் பெ யரை கூறியதால் இன்று நாத்திகர் கள் அதை செய்வது இல்லை, ஆனால் இதற்கு பின்னால் இருக் கும் அறிவியல், முழு நிலவு அன்று நிலாவிலிருந்து வரும் ஒளிக்கதிரில் உள்ள ஒருவித ” பாசிடிவ் என ர்ஜி ” நாம் சுற்றிவரும் மலையின் மீது பட்டு,நம் உடலில் இறங்கினா ல் நல்லது என அதையே தான் இன்று விஞ்ஜானம் கூறு கின்றது.
இன்றைக்கு இருப்பதை போன்று கேளிக்கைகளுக்கு திரை அரங்கு களோ,கல்வி கற்பதற்கு “ஏரிக ளின்” மேல் கல்லூரிகளோ, மருத் துவ மனைகளோ அவர்கள் கட்டி வைக்க வில்லை, இவை அனைத் தும் நடந்தது ஓரே இடத்தில், ஒரு இடத்திற்கு சென்றால் அனைத் தையும் கற்க முடியும் என்றால் ( களவி உட்பட ) அது அன்று கோவில்களாக மட்டுமே இருந்துள்ளது, அது ஒரு பல்கலைக்கழமாகவே இருந்துள்ளது, அதனால் தான் கோ வில் சிற்பங்களில் களவி சம்மந்தப்பட்ட சிற்ப்பங் கள் கூட காண நேர்கின்றது,” கோவில்களில் கேளிக்கைகளுக்கு நாட்டியங் கள் அரங்கேறியு ள்ளது, கல்வி கற்க பாட சாலைகள் அமைக்கப் பட்டது.
சில கோவில்கள் மருத்துவம னைகளாகவும் செயல்பட்டுள்ள து, உதாரணத்திற்கு திருச்சி, திரு வைகுண்டத்தை கூட கூறலாம் அங்கே ஆயிரம் வருடங்களுக் கு முன்னே,வெறும் மூலிகைகளை வைத்து “….” சர்ஜரி வரை நடை பெற்றுள்ளது. இன்றைக்கு இருப்பதை போன்று அன்று அனைவரும் மாடி வீடுகளில் தங்கி இருக்க வாய்ப்பில்லை ஆக பெரு வெள்ளம் வரும்போது, பெரும் பாறைகளால், பெரும் உழைபி ற்கு மத்தியில் உருவான இந்த கோயில்களில் மட்டுமே மக்கள் தஞ்சம் அடை ந்திருக்க கூடும், கோவில் தூண்களில் தான் நம் கலைக ளை வளர்த்துள்ளோம், அங்கே ஒவ்வொரு சிற்பமும் சொல்லு ம்கதைதான், இன்றைய அறிவி யல் கண்டு பிடிப்புகள்.ஆயிரம் வருடங்களுக்கு மேல் நம்முட ம் பயணிக்கும் கோயில் கள் அமைந்திருக்கும் இடம் சாதார மாக தேர்வு செய்து கட்டி இருக்க வாய்புகள் இருக்காது.அந்த இடமா னது பூமத்திய ரேகை கோட்பாடுகளின்படி அறிவியல் அமைப்புகளு டன் மட்டுமே கட்டப்பட்டிருக்கும், இன்றைக்கு இருக்கும் நிலப் பதிவு அலுவலகம் அன்று கிடையாது ,கோவில் கல் வெட்டுகள் முழுவ தும் தான் அது பதியப்பட்டுள்ளது, அந்த கல்வெட்டுகளில் தான் தமிழ னின் வரலாறு புதைந்துள்ள து.
தஞ்சை பெரிய கோயில் கட்டியது ” ராஜ ராஜன் ” என்று ஹார்ட் டிஸ் கிலோ, பென்ட்ரைவிலோ பதியப் படவில்லை, அனைத்தும் கோயில் கல்வெட்டுகள் மூலமே நமக்கு தெரிய வருகின்றது, அப்படி இருக்க பகுத்தறிவின் பெயரில் இப்பேற் பட்ட நம் வரலாற்று சின்னங்களை கொஞ்சம், கொஞ்சமாக அழிப்ப து எந்த விதத்தில் நியாயம்? என்று யோசித்து பாருங்கள் ! வரலாற்று அடையாளங்கள் வேண்டாம், மொழி மட்டும்போதும் என்பவர்கள் ,மரங்கள் வேண்டாம் ஆக்சிஜ ன் மட்டும் போதும் என்று முர ண்பாடான கருத்தை கூறு வதைப் போன்றது என்பதை உணரவேண்டும்.
ஐயாயிரம் வருடத்திற்கு முன் பே தமிழன் சித்த வைத்தியத் தில் கூறிய மஞ்சளுக்கு வெ ளி நாட்டுக்காரன் உரிமை வா ங்கி வைத்துள்ளான் , வீட்டு முற்றத்தில் தமிழன் வளர்த்த வேப்ப மரத்திற்கு வெளி நாட்டுக்காரன் உரிமை வாங்கி வைத்துள்ளான், இன்னும் எதை எல்லாம் தொலை க்கைப்போகிறோம் ? மொழி கலப்பட மாகி விட்டது, உடை மேற்கத்திய உடை, கலப்படம் இல்லாமல் பழமையுடன் காட்சியளிப்பதும், நாம் பழமையானவர் கள் என்று ஆதாரத்துடன் நிரூபிப் பதும், இந்த கோயில்களை வைத்து மட்டுமே என்பதை நாம் எப்போது உணரப்போகி றோம்? அடுத்த தலைமுறைக்கு எதை விட்டுச்செல்ல விருக்கிறோம்?
தொலைத்தது வரை போதும், மீதம் உள் ளவயேனும் காப்பாற்றுவோம் .வரலா ற்று சின்னங்களான நம் கோவில்களை காப்போம்.அந்த சிலைகளில் கூறப்பட் டுள்ள செய்திகளை உலகறிய செய் வோம் !தமிழை அடுத்த நிலைக் கு அழைத்துச் செல்வோம்.!!!

நன்றி: நண்பர் சசிதரன்

One Comment

  • Anonymous

    பகுத்தறிவு தலைப்பில் தாங்கள் பதிவு செய்த தகவல்கள் அனைத்தையும் வேறு வடிவில் யோசித்து இருந்தேன்.அதைத் தாங்கள் கொடுத்து இருக்கிறீர்கள்.இந்தக் கருத்துக்களை எப்படி சொல் வடிவில் தர இயலாததால் எழுத முடியவில்லை.ஆனாலும் தங்களது கருத்துக்களை முழு மனதுடன உடன்படுகிறேன்.
    வாழ்க வளமுடன்.
    SnR.dEvAdAsS.

Leave a Reply