கண்ணதாசன்… காலத்தின் கைகளில் அதிர்ந்துகொண்டே இருக்கு ம் கவிதை வீணை, எவ்வளவோ பேர் பருகியும் தீராத சந்த மது கோப்பை, தேய்பிறை காணா தேன் தமிழ் நிலவு, கவியரச ருக்கு காலமெல்லாம் காதல் மேல் உறவு.
மகரந்தச் சொற்களில் கவி பாடிய தென்றல், மரண தேவ ன் மார்பில் ஏறி விளையாடிய குழந்தை.
வார்த்தைகளில் மட்டுமில்லா மல் வாழ்க்கையிலும் காட் டாறாய் பொங்கிப் பிரவகித் தவர். நான் நிரந்தரமானவன். அழிவதில் லை என செருக்காய் சிரித்த சிறுகூடல்பட்டிச் சிங்கம். வாழ்வே தடா லடியான தனி சினிமா… கவிஞரின் வாழ்விலிருந்து இங்கே கொஞ் சம்…
* கண்ணதாசனுக்கு 3 மனைவிகள். 15 பிள்ளைகள். அவர் வீடு முழு க்க எப்போதும் குழந்தைக ளால் நிறைந்திருக்கும். குழந் தைகளின் பெயர்கள் சமயங் களில் அவருக்கு மறந்துவிடு மாம்.என்னடா இது… எவனு க்கு என்ன பேர் வெச்சோம் னே நினைப்பில்லாம மறந்து போகுது. பேசாம எல்லாத்து க்கும் 1, 2, 3&ன்னு நம்பரை எழுதி மாட்டிட வேண்டியது தான் என்பாராம் சிரித்துக் கொண்டே.
* ஒருமுறை சிங்கப்பூருக்குச் சென்றிருந்தபோது ஷாப்பிங் போயிரு க்கிறார். �குழந்தைகளுக்கு டிரெஸ் எடுங்களேன்� என நண்பர்கள் சொல்ல, இவரும் ரொம்பவும் ஆர்வமாக விதவிதமான வண்ணங்க ளில் ஆடைகளை அள்ளியிருக்கிறார். அருகில் இருந்த நண்பர் பிரமி ப்பாக, உங்க எல்லாக் குழந்தைகளோட டிரெஸ் சைஸ�ம் உங்களு க்குத் தெரியுமா? என்று கேட்க, �எவனுக்குத் தெரியும்? எங்க வீட்ல தான் எல்லா சைஸ்லேயும் குழந் தைங்க இருக்காங்களே. யாருக்கு எது பொருந்துதோ அதை ப் போட்டுக்க வேண்டியது தான்! என்றாராம் அதிர அதிரச் சிரித்தபடி.
* நேரம் கிடைத்தால், குடு ம்பத்துடன் மொத்தக் குழ ந்தைகளையும் அழைத்து க்கொண்டு சுற்றுலா செல்வாராம். அப்படி ஒரு நாள், எல் லோருடனும் பெங்களூருக்குச் சென்றி ருக்கிறார். அங்கேயிருந்து திடீரென அப்படியே ஊட்டிக்குப் போயிரு க்கிறார்கள். ஊட்டியில் குடும்பத்துடன் இவர் தங்கியிருந்த ஓட்டலி ல் ஓர் ஊழியர், யாரோ ஒருவரிடம், ஸாரி சார். ரூம் எல்லாமே ஃபுல். ஏதோ ஸ்கூல் லேருந்து டூர் வந்திருக்காங்க. என்று சொன்னதைக் கேட்டுக் கொந் தளித்திருக்கிறது கவியரசர் குடும்பம். கவிஞரோ சிரித்தபடியே, விடு விடு, அவன் சரியாத் தான் சொல்றான். நான் ஒரு ஸ்கூலையே தானே பெத்திருக்கேன்� என்றா ராம்.
* முதல் மனைவி பொன்னழகியுடன் முதலிரவு. அவர் கிராமத்துப் பெண்மணி. வீட்டில் பார்த்து வைத்த கல்யாணம். பால் சொம்புடன் வந்த மனைவியை உட்காரவைத்து, நீ எப்படி நடந்துக்கணும் தெரியு மா.. என்று தன் குடும்பத்தைப் பற்றி, நண்பர்கள், தொழில் என எல்லாம் பேசியிருக்கி றார். பொன்னழகி எல்லாவற்றுக்கும் தலையை ஆட்டி ஆட்டிக் கேட்க, சரி தான்… அடக்கமான பொண்ணா அமை ஞ்சுட்டா என்று உற்சாகமாகி விட்டார். காலையில் கண்ணதாசன் வெளியே வர, பொண்ணு நல்லபடியா இருந்தா ளா? அவளுக்குக் காது மட்டும் கொஞ் சம் சரியா கேட்காது. மத்தபடி ரொம்ப நல்ல பொண்ணு� என்று சொல்ல, கவியரசருக்கு அதிர்ச்சி. நேத்து நைட் நான் சொன்னதுக்கெல்லாம் தலை யை ஆட்டி என்னை நம்ப வெச்சுட்டியே டி என மனைவியைக் கிண்டலடித்த கவியரசர், கவிஞன் பாடுவது தமிழ்ப் பாட்டு, வந்த பொண்டாட்டியோ கைநாட்டு என்றா ராம் அழகாக.
* முதல் கல்யாணம் நடந்து கொஞ்ச நாள்தான் ஆகியிருக்கும். கவி ஞரின் அண்ணன் ஏ.எல்.சீனிவாசன் வீடு இருந்த தெருவிலேயே, ஒரு கட்டடத்தில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் டிராமா ட்ரூப் இருந்தது.
அதில் நடிகையாக இருந்த பார்வதியுடன் காதல். இது என்.எஸ். கே& வுக்குத் தெரிய வர, அடேய் கவி ஞா… எனக்கே தண்ணி காட்டிட் டியே! என்று அவரே திருமணம் செய்து வைத்தாராம்!
* கிட்டத்தட்ட ஐம்பதை நெருங் கும் நேரத்தில், மூன்றாவது கல் யாணம். வள்ளியம்மை, கவிஞ ருக்கு ரசிகையாக அறிமுகமான வர். கல்லூரி மாணவியான வள்ளியம்மை, கவிஞருக்கு அடி க்கடி கடிதங்கள் எழுதுவது வழ க்கம். ஒருமுறை அக்கல்லூரி யின் வழியாகப் பயணம் போன கண்ணதாசன், திடீரெனக் கல் லூரிக்குள் நுழைந்து விட் டார். நேராக முதல்வர் அறைக்குப் போனவர், வள்ளியம்மையைக் கூப்பிடுங்க என வரச் சொல்லி பார்த்துப் பேசினார். அந்த இன்ப அதிர்ச்சி அடுத்தடுத்துத் தொடர, கடித வழியிலேயே நட்பு தொடர்ந்து, காதலாக வளர்ந்து, திருமணத் தில் முடிந்திருக்கிறது.
வள்ளியம்மையைக் கல்யாணம் செய்துகொண்டு, அண்ணன் வீட்டு வாசலில் நின்றிருக்கிறார் கவிஞர். அண்ணன் பயங்கரக் கோபமா கி, குழந்தைங்க இருக்கும் போது இந்த வயசுல என்னடா இது?� என டென்ஷனாக, அமைதியாக நின்றிருக்கிறார் கவிஞர். �நீயெல்லாம் திருந் தவே மாட்டே. எப்பிடி யாவது போய்த் தொலை� என அவர் சொன்னதும், அண்ணன் மன்னிச்சுட்டாரு, வா வா வா! என வள்ளிய ம்மையை அழைத்துக் கொண்டு உள்ளே போயி ருக்கிறா ர் கவிஞர்.
* எத்தனை துயரமான பொழுதுகளிலும் தன் சோகம் குழந்தைகளுக் குத் தெரியக் கூடாது என்பதில் கவனமாக இருந்தவர் கவியரசர். அவர் குழந்தைகள் முன் னால் கதறி அழுதது ஒரே ஒரு முறைதான்.
சினிமா தயாரிப்பில் ஈடுபட்டு, பணமெல்லாம் இழந்து நின்ற நேரம். தீபாவளி வந்துவிட்டது. பணத்துக்காக பல இடங்களில் முயற்சி செய்தும் கிடைக்காமல் போகவே, குழந்தை களுக்கு எதுவும் செய்ய முடியாத சூழல். தீபாவளிக்கு முதல் நாள் ஊரே சந்தோஷத்தில் இரு க்க, அறைக்குள் படுத்திரு ந்த கவிஞரிடம் பட்டாசும், புத்தாடைகளும் கேட்டு நின்றிருக் கின்றன குழந் தைகள். அப்படியே அவர்க ளை அணைத்தபடி உடை ந்து போய் அழுதிருக்கி றார் கவிஞர். அன்றைக் கு ஒரு கம்பெனியில் பாட்டு எழுதக் கூப்பிட, அண்ண ன் என்னடா தம்பி என்ன டா அவசரமான உலகத்தி லே, ஆசை கொள்வதில் அர்த் தம் என்னடா காசில்லாதவன் இதயத் திலே� என்று எழுதினார். அந்தப் பாடலுக்காக வாங்கிய பணத்தில் அத்தனை பேருக்கும் புத்தாடைகள் வாங்கினாராம்.
* கல்லக்குடி போராட்டத்தில் கண்ணதாசனைச் சிறையில் அடைத் துவிட்டது போலீஸ். சிறையில் இருந்து வீட்டுக்கு ஒரு கடிதம் எழுதி யிருக்கிறார் கவிஞர். அதில், �இங்கே ஜெயில்ல இருக்க முடியலை. எனக்கு வயிற்றுப் போக் காக இருக்கிறது. இங்கே யே இருந்தா, செத்துப் போ யிருவேன். அதனால், உட னே எனக்கு ஜாமீ னுக்கு ஏற்பாடு பண்ணுங்க� என எழுதிவிட்டு, கடைசியில், எனக்கு வீட்டில் 20 வெள் ளைப் பணியாரம் செய்து அண்ணனிடம் கொடுத்து விடவும். 20 இல்லை யென் றால் 10கூடப் போதும் என எழுதியிருக்கிறார். கவிஞ ருக்கு வெள்ளைப் பணி யா ரமும் காரச் சட்னியும் அவ்வளவு பிடிக்கும்.
* ஒருமுறை சிவாஜி யைப் பார்க்க அவரது இல்லத்துக் குச் சென்றிரு க்கிறார் கவி யரசர். வாடா கவிஞா… என சிவாஜி வாஞ்சையுடன் வர வேற்க, கொஞ்சமும் யோசி க்காமல், சட்டென்று கோபமாகி, என்ன டா நடிகா? எனக் கேட்டிருக் கிறார். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு இருவரும் கொஞ்ச நாள் பேசி க்கொள்ளவில்லை.
* தன் மகன்களில் கலைவாணன் கண்ணதாசனை கவிஞருக்கு ரொம்பவும் பிடிக்கும். என்னப் பத்தி ஒரு பாட்டு எழுதுங்களேன்�- என்று கலைவாணன் கேட்க, அதான் ஏற்கெனவே எழுதிட்டேன டா… ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந் தாயோ? பாட்டை உனக்காகத் தானே எழுதினேன் என்றார் சிரித்துக் கொண்டே. அதைப் பார்த்த மற்ற குழந்தைகள், எங்க ளைப் பற்றி எழுத மாட்டீங் களா? என்று கோபத்துடன் கேட்க, அதுவும் எழுதிட்டே னே. ஒரேயரு ஊரிலே ஒரே யரு ராஜா… ஒரே ஒரு ராணி பெற்றாள் ஒன்பது பிள்ளை. அந்த ஒன்பதிலே ஒன்றுகூட உருப்படியில் லைன்னு வருதுல்ல… அப் பாட்டு உங்களை மனசில் வெச்சு எழுதினது தான் என ச்சிரிக்க வைத்திருக்கிறா ர்.
* கண்ணதாசன் காங்கிர ஸில் இருந்தார். காங்கிர ஸின் அப்போதைய சின்ன ம் காளை மாடு. மயிலை மாங்கொல்லையில் நடந் த தேர்தல் பிரசாரக் கூட்ட த்தில் காளை மாடு சின்னத் தில் வாக்களியு ங்கள். நாடு சுபிட்சமாய் இருக்கும் என்று ஆதரவு கேட்டுப் பேசினார் கண்ண தாசன். மறுநாள் அதே இடத்தில் தி.மு.க. கூட்டம். அதில் பேசிய கலைஞர், நேற்று என் நண்பர் கண்ணதாசன் இங்கே காளை மாட்டுக்கு ஆதரவு கேட்டுப்பேசினார். அவர் பேச்சை க் கேட்டு காளை மாட்டுக்கு வாக் களித்தால் நாடு நன்றாக இருக் காது. அவருக்குத் தெரியாத தல்ல … காளை மாடு கன்று போடாது. அதனால் நாட்டுக் குப் பயனில்லை என்றாராம். தனது தென்றல் பத்திரிகையில் அது பற்றி எழுதிய கண்ணதாசன், நண்பர் கலைஞர் சொல்வது சரிதான். காளை மாடு கன்று போடாது. ஆனால், காளை மாடு இல்லாவிட்டால் பசு என்று மே கன்று போடாது. அதனால் மக்கள் அனைவரும் காளை மாடு. சின்னத்துக்கே வாக்களியுங்கள் என ரிப்பீட் கவுன்டர் கொடுக்க,
அதை கலைஞர் உட்பட அத்த னை பேரும் ரசித்தார்கள்.
*சிவாஜிக்கு அரசியல் தெரியாது என்று கண்ணதாசன் ஒரு மே டையில் பேசிவிட்டார். ராமன் எத்தனை ராமனடி, படப்பிடிப்பி ல் இருந்த சிவாஜிக்குத் தகவல் தெரியப் படுத்தப்பட்டது. படத்தின் இயக்கு நரை அழைத்த சிவாஜி, இதுக்கு சரியான பதில் சொல்ற மாதிரி ஒரு ஸீன் வைக்கணுமே. அதை எப்படி வைக்கலாம்னு கண்ணதாசனிடமே போய்க் கேளுங்க என்று சொல்லி யிருக்கிறார். விஷயம் கண்ண தாசனிடம் செல்ல, சிரித்தாராம். படத்தில் வீர சிவாஜி நாடகத்தை ஒரு காட்சியா வெச்சு க்கலாம் எனச் சொல்லி, அந்த நாடகத்துக் கான வசனத்தை யும் அவரே எழுதிக் கொடுத்தாரா ம். நாடக த்தில், எனக்கா அரசியல் தெரியா து என்று வீர சிவாஜியாக, சிவாஜி பேசிக்கொண்டே வருவது தான் ஓபனிங் ஸீனே!
– நா.இரமேஷ்குமார்
நன்றி : விகடன் – 27-12-06.
நல்லதொரு பகிர்வு… விரும்பிப் படித்தேன்.. நன்றி..