Friday, March 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களுக்கான‌ போக்குவரத்து புதிய விதிகள்

சமீப காலமாக தமிழகத்தில் ஏற்படும் விபத்துக்களில், பள்ளி மற்றும் கல் லூரி வாகனங்களே அதிகம், முடிச்சூ ரில் பள்ளிப் பேரூந்தில் இருந்த ஓட் டை வழியாக ஓடும் பேரூந்தில் இருந் து கீழே விழுந்து அதே பேரூந்தின் சக்க‍ரத்தில் நசுங்கி இறந்தாள். அதே போல் வேலூர் மாவட்ட‍த்திலும், வாகனத்திற்குமுன்பாக சிறுமி இருப் ப‍து தெரியாமலேயே ஓட்டுநர் வாகன த்தை இயக்கியபோது அந்த வாகனத் தின் சக்க‍ரத்தால் சிறுமி நசுக்க‍ப்பட்டு உயிரிந்தார். இதுபோன்ற தொடரும் விபத்துக்களை கட்டுப்படுத்த‍வும், பள்ளி, கல்லூரிகளுக்கான போக் குவரத்து விதிகளைவகுப்பது குறித்தும் சென்னை போக்கு வரத்து துறை அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. போக்குவரத் து துறை ஆணையர் பிரபாகரரா வ் தலைமையில் நடை பெற்ற இந்த ஆய்வுக்கூட்டத்தில் பள்ளி க்கல்வி மற்றும் உயர் கல்வித் துறை அதிகாரிகள் பங்கேற்றன ர். இக்கூட்டத்தில் பள்ளி, கல்லூ ரிகளுக்கான புதிய போக்குவரத் து விதிமுறைகள் அடங்கிய அறிக்கை இறுதி செய்யப்பட்டு, அது பற்றி விவாதிக்கப்பட்டது. இந்த அறிக்கை அரசிடம் நாளை சமர் ப்பிக்கப்படும் எனத் தெரிகிறது.

செய்தி – விதை2விருட்சம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: