Saturday, January 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

எலும்பு தேய்மானத்தை தடுக்கும் திறனுள்ள‍ மருத்துவ‌ உணவுகள்!

 

உடற்பயிற்சியின்மை, உட்கார்ந்த நிலையிலேயே வேலை பார்த்தல், கால்சியம் சத்துக் குறைபாடான உணவு பழக்கம், பாஸ்ட் புட் உண வுகள் சாப்பிடும் பழக்கம் என எலு ம்புத் தேய்வுக்கு பல காரணங்கள் உள்ளன.
 
எலும்புத் தேய்வின் அறிகுறியாக உடலில் வலி ஏற்படுகிறது. எலும் பு வலுவிழக்கும்போது உடல் எடை முழுவதையும் தசைப்பகுதி தாங்குகிறது. இதனால் தசையும் பலவீ னம் அடையும். உடல் சோர்வு, வலி, வீக்கம் ஏற்பட லாம். மூட்டுப் பகு தியில் வீக்கம் உண்டா கும். உடலை அசைப்பதே கடினமாக இருக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைய துவங்கும்.

எலும்பு தேய்மானத்தை தடுக்க 3 விசேட உணவு கள் இங்கு தரப்படு கின்றன.

பொன்னாங்கன்னிக் கீரை கட்லட்:

பொன்னாங்கன்னிக் கீரை இரண்டு கட்டு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி எண்ணெய்யில் வதக்கி கொள்ளவும். பெரிய வெங்காயம் 1, பச்சை மிளகாய் 2, கடலை மாவு 1 டேபிள் ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ் பூன், கரம்மசாலா ஒரு டீஸ்பூன், உப்பு தேவை யான அளவு எடுத்து அவற்றை வாணலியில் எண்ணெய் விட்டு வதக்கவும். பின்னர் கீரையுடன் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து வடை பதத்துக்கு பிசைந்து விரும்பிய வடிவத்தில் தட்டி பிரட் தூளில் உருட்டி தோசைக் கல்லில் வேக வைத்து எடுக்கவும். பொன்னாங் கன்னி கீரையில் கால்சியம் சத்து உள்ளது.

ஓட்ஸ் குருமா:

பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் சோம்பு உள்ளிட்ட மசாலா பொ ருட்கள் 1 டீஸ்பூன் எடுத் து தேங்காய் சேர்த்து அரை த்துக் கொள்ளவு ம். 2 வெங்காயம், தக் காளி, 2 கப் ஓட்ஸ் ஆகி யவற்றை சேர்த்து வதக் கவும். இத்துடன் அரை த்த விழுது, கொத்த மல்லி தூள் சேர்த்து தண்ணீர் விட்டு கொதித்த பின் இறக்கவும். சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம். கால்சியம் சத்து அதிகம் உள்ளது.

பிரட் தோசை:

தோசை மாவு இரண்டு கப் எடுத்துக்கொள்ளவும். அதில் பச்சை ள காய் 2, வெங்காயம் 1, கருவேப்பி லை, கொத்தமல்லி ஆகியவற் றை பொடியாக நறுக்கி மாவில் கலந்து கொள்ளவும். பிரட் துண் டுகளை மாவில் போட்டு தோ சைக்கல்லில் சுட்டு எடுக்கவும். இதில் தேவையான அளவு  கார் போஹைட்ரேட் கிடைக்கிறது.

{ { { இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம் } } }
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.
உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்.

 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: