Tuesday, June 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

"வெண்ணிற ஆடை என்பது அமங்கலச்சொல்" – வெண்ணிற ஆடை நிர்மலா

 

வெண்ணிற ஆடை மூலம் திரைக்கு அறிமுகமான நிர்மலா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் 200-க்கும் மேற் பட்ட படங்களில் நடித்தார். நிர்மலா வின் சொந்த ஊர் கும்ப கோணம். தந்தை பாலகிருஷ்ணன், தாயார் ருக் மணி.
 
பாலகிருஷ்ணன், தஞ்சை நீதிமன்ற த்தில் ‘ஜுரி’யாகப் பணிபுரிந்தவர். வழக்கு விசாரணையை கவனித்து, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண் டனை வழங்கலாமா, விடுதலை செய்யலாமா என்று நீதிபதிக்கு ஆலோசனை வழங்குவோருக்கு ‘ஜுரி ‘ என்று பெயர். செல்வாக்கு மிக்க செல்வந்தர்களை இப்பதவியி ல் நியமிப்பார்கள்.
 
நிர்மலாவின் முன்னோர்கள் செல்வந்தர்கள். ‘அரண்மனைக் குடும் பம்’ என்று பட்டப்பெயர் பெற்றவர்கள். நிர்மலாவி ன் குடும்பத்துக்கு ம், கலைத்துறைக்கும் எந்த சம் பந்தமும் கிடையாது. நிர்மலா சினிமாவில் சேர்ந் தது எதிர்பாராமல் நடந்தது.
 
ஒருநாள் நிர்மலாவின் தந்தை ரெயிலில் பயணம் செய்து கொண்டி ருந்தபோது, தஞ்சை சரஸ்வதி மகாலில் உள்ள ஓலைச்சுவடிகளை ஆராய்வதற் காக மைசூரில் இருந்து வந்து கொண்டிருந்த வாசு தேவாச்சாரியார் என்பவரை சந்தித்தார். அவ ர் பரத நாட்டியம் பற்றி உயர்வாகப்பேசினார். ‘ராஜ ராஜசோழனே தன் மகளுக்கு நாட்டியம் கற்றுக்கொடுத்தார்’ என்று கூறினார்.
 
இதனால், பாலகிருஷ்ணனுக்கு நடனம் மீது ஆர்வம் ஏற்பட்டது. நிர்ம லாவுக்கு நடனம் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்தார். இதை உறவி னர்கள் எதிர்த்தனர். ஆனால், பால கிருஷ்ணன் பின்வாங்கவில்லை. கும்பகோணம் சண்முக சுந்தரம் பிள்ளை என்ற நடனக் கலைஞரி டம் நிர்மலா நடனம் பயில ஏற்பாடு செய்தார்.
 
நிர்மலாவின் 6-வது வயதில் அவரது நடன அரங்கேற்றம், கும்பகோ ணத்தில் நடைபெற்றது. பின்னர், சென்னையில் அவரது நடன நிகழ் ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு கூட்டம் வரவில்லை. இத னால் நிர்மலாவின் தந்தை வருத் தம் அடைந்தார்.
 
‘சினிமாவில் நடித்தால்தான் புகழ் பெறமுடியும். பெரிய கூட்டமும் வரும்’ என்று சபாவைச் சேர்ந்தவர் கள் கூறினார்கள். நிர்மலா, நடன த்தில் நல்ல தேர்ச்சி பெறவேண்டும் என்பதற்காக, அப்போது வைஜய ந்திமாலா நடத்தி வந்த ‘நாட்டியாலயா’ என்ற நடனப்பள்ளியில், நிர்ம லாவை அவர் தந்தை சேர்த்து விட்டார்.
 
பண்டரிபாயை கதாநாயகியாக வைத்து ஒரு சினிமா படம் தயாரிக் கவும் ஏற்பாடு செய்தார். முதல் கட்டமாக ரூ.6 லட்சம் வரை செல வு செய்து, சில ஆயிரம் அடி வரை படத்தை எடுத்தார். ஆனால், ‘படம் எடுக்கக்கூடாது’ என்று அண்ணன் எதிர்த்ததால், மேற்கொண்டு படத் தயாரிப்பைத் தொடராமல் பாதியி ல் கைவிட்டார், பாலகிருஷ்ணன்.
 
இந்த சமயத்தில், முற்றிலும் புதுமுகங்களை வைத்து, ‘வெண்ணிற ஆடை’ என்ற படத்தைத் தயாரிக்க டைரக்டர் ஸ்ரீதர் ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். பொ ருத்தமான புதுமுகங்களை தேடிக்கொண்டி ருந்தார்.
 
பத்திரிகையாளர் நவீனன், வைஜயந்திமாலா வின் நடனப் பள்ளியில் நிர்மலாவைப் பார்த் தார். ‘இவ்வளவு அழகான பெண், சினிமாவி ல் நடித்தால் நிச்சயம் புகழ் பெறுவார்’ என்று எண்ணினார். நிர்மலாவின் தந்தையை சந் தித்து, ‘டைரக்டர் ஸ்ரீதர், புதுமுகங்களை வை த்து ஒரு படம் தயாரிக்கப்போகிறார். நீங்கள் அவரை சந்தியுங்கள். நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும்’ என்று கூறினார்.
 
நிர்மலாவின் தந்தைக்கு, சினிமா என்றால் பிடிக்காது. எனினும், நிர் மலாவின் நடனத் திறமையை வெளிப்படுத்த சினிமா உதவும் என்று எண்ணினார். நிர்மலாவுடன் செ ன்று, ஸ்ரீதரை சந்தித்தார். ‘மேக் கப்’ டெஸ்ட்டில் நிர்மலா வெற்றி பெற்றார். ‘வெண்ணிற ஆடை’யி ல் நிர்மலாவுக்கு வாய்ப்பு கிடை த்தது.
 
1965-ம் ஆண்டு ‘வெண்ணிற ஆடை’ வெளிவந்தது. இப்படத்தி ல் தான் ஜெயலலிதா கதாநாயகி யாக அறிமுகமானார். அவருக்கு அடுத்த முக்கிய வேடம் நிர்மலாவுக்கு.
 
மற்றும் ஸ்ரீகாந்த், மூர்த்தி ஆகியோரும் இப்படத்தின் மூலம்தான் அறி முகமானார்கள். முற்றிலும் புதுமுகங்கள் நடித்த படம், ஸ்ரீதர் டைரக்ட் செய்தபடம் என்பதால் ‘வெண்ணிற ஆடை’பரபரப்பாக ஓடியது. நிர்மலா வுக்கு பல பட வாய்ப்புகள் வந்தன.
 
‘நிர்மலா’ என்ற பெயர் பட உலகில் பலருக்கு இரு ந்ததால், `வெண்ணிற ஆடை’ நிர்மலா என்று குறிப்பிடப்பட்டார்.
 
இதுபற்றி நிர்மலா கூறுகையில், ‘வெண்ணிற ஆடை என்பது அமங்கலச்சொல். அதை உங்கள் பெயருக்கு முன் போடாதீர்கள் என்று பலர் கூறினார்கள். நானும், நிர்மலா என்று மட் டும் குறிப்பிடும்படி பட அதிபர்களிடம் கூறினேன். ஆனால், நிர்மலா என்று மட்டும் குறிப் பிடாமல் எந்த நிர்மலா என்று தெரியாது என்று கூறி, வெண்ணிற ஆடை என்று போட்டார்கள். அதுவே பிரபலமாகி விட்டது’ என்று குறிப்பிட்டார்.
maalaimalar

 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: