Wednesday, October 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அன்புடன் அந்தரங்கம் (05/08): "நமக்கும் இவள் கிடைத்தால், நன் றாக இருக்குமே…'

 

அன்புள்ள அம்மாவுக்கு—

வணக்கம். நான் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன், வயது: 32, ஆண். இன்னும் திருமணம் ஆகவில் லை. நான் பிரபலமான தொழி ல் நுட்பக் கல்லூரியில், விரிவு ரையாளராக பணிபுரிந்து வரு கிறேன்.

என் கல்லூரி தலைமை விரிவு ரையாளர் (எச்.ஓ.டி.,) வயது: 65, பணி நிறைவு பெற்று, என் கல்லூரியில் பணிபுரிந்து வரு கிறார். பெண் சபல புத்தி உள்ள வர் என்பதை, அவர்முன்பு பணி புரிந்த கல்லூரியின் மூலம் தெரிந்து கொண்டேன்.

என் பிரச்னை என்ன வென்றா ல், எங்கள் கல்லூரிக்கு புதிதா க, 26 வயதுள்ள பெண் (திருமணமாகவில்லை) ஒருவர் விரிவுரை யாளராக, பணியில் சேர்ந்து, அனைவரிடமும் நன்கு பழகினார். புதி தாக வந்த பெண்ணிற்கு, சரியாக பாடம் நடத்த தெரியவில்லை என்பதை, எச்.ஓ.டி., அறிந்து கொண்டார்.

ஒரு நாள், என் சக விரிவுரையாளரும், அந்த பெண்ணும் சேர்ந்து சினிமாவுக்குச் சென்று உள்ளனர். மேலும் சில நாட்கள் கழித்து, தனி யார் விடுதிக்குச் சென்றதை, என் நண்பர்கள் மூலம் தெரிந்து கொண் டேன். பின் கல்லூரியில் பயிலும் மாணவனின் வீட்டிற்கு, அந்த பெண்ணும், சகப்பணியாளரும் (திருமணமானவர்) போய், ஒருநாள் முழுவதும் உல்லாசமாக பொழுதைப் போக்கினர். இதைத் தெரிந்து கொண்ட வீட்டுக்காரர், வீட்டைக் காலி செய்து கொள்ளும்படி கூறி உள்ளார். இந்த விவகாரம், அவரது மனைவிக்கும் தெரிந்தமையால், உடனே வீட்டை காலி செய்து உள்ளனர்.

இதெல்லாவற்றையும் மாணவன் மூலம் தெரிந்து கொண்ட எச்.ஓ. டி., அந்த பெண்ணை வற்புறுத்தி, தன் ஆசை க்கு இணங்க வைத்துள்ளார். ஏனெனில், கல் லூரியில் இந்த பெண் (நடுத்தரக் குடும்பத்தை சார்ந்தவள்) சரி இல்லை என, எச்.ஓ.டி., சொ ன்னால் வேலை போய் விடும். இதைப்பயன் படுத்தி எச்.ஓ.டி., அந்த பெண்ணை, தன் இச் சை க்கு அடிமைப்படுத்தினார்.

பின், ஒரு நாள் கல்லூரியில் மாதிரித் தேர்வு நடைபெற்றுக் கொண் டிருந்த போது, நான் தண்ணீர் தாகம் காரணமாக, என் அறைக்குச் செல்லும் போது, அங்கு எச்.ஓ.டியும், அந்த பெண்ணும் நெருக்கமாக இருப்பதை பார்த்தேன். நான் பார்ப்பதை, அவர்களும் பார்த்து விட்ட னர்.

நான் எதுவும் தெரியாததுபோல் இருந்துவிட்டேன். சில நாட்கள் கழி த்து, அந்த பெண் தனியாக இருக்கும்போது அறிவுரை கூறினேன். இதனால், அவள் என் மீது நல்ல மதிப்பும், மரியாதையும் வைத்தாள்.

ஒரு நாள், என் சக விரிவுரையாளர், வெளியே செல்லக் கூப்பிட்டும் அவள் வரவில்லை, மற்றொரு நாள் எச்.ஓ.டியும் கூப்பிட்டு இருக்கி றார், அவள் செல்ல மறுத்து விட்டாள். இதனால், கோபமுற்ற இரண் டு பேரும், என்னை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கில் இருந்துள் ளனர் என்பதை சில மாதங்க ள் கழித்து தெரிந்து கொண் டேன்.

ஒரு நாள் எச்.ஓ.டி., என்னிடம் வந்து, “என் போனில் சார்ஜ் இ ல்லை, ஆகவே உன் போனை க் கொடு, ஒரு போன் பண்ணி க்கிறேன்…’ என்றார், நானும் கொடுத்து விட்டேன். பின் பத்து நிமிடங்கள் கழித்து கொடுத்தார். நான் போனை வாங்கி வைத் துக் கொண்டேன். பிறகு தான் தெரிந்தது, அவர் ஏன் மொபைலை வாங்கினார் என்று. என் உறவினர்களின் போன் நம்பரை எடுத்திருக் கிறார்.

இந்நிலையில், எனக்கு பெண் பார்க்கும் படலம் நடந்து கொண்டிரு க்கிறது. இதில் பெண்ணின் உறவினர் ஒருவர், என்னைப் பற்றி விசா ரிக்க எச்.ஓ.டி., யை அணுகி உள்ளார்.

அவர் என்னையும், அந்த பெண்ணையும் சேர்த்து தப்பாக கூறி உள் ளார். இதனால், அந்த இடம் தடைப்பட்டது.

மேலும், எனக்கு பெண் பார்க்கும் தரகரிடமும், தெரு மக்களிடமும் சென்று என்னை தவறாகத் திரித்து கூறி உள்ளார். இதனால், எனக்கு மிகவும் கவலையாக இருக்கிறது. கல்லூரி துணைத் தலைவரிடம் சொன்னால் நம்ப மறுக்கிறார். இப்போது, அந்த பெண்ணும், எச்.ஓ. டி., என்ன செய்யச் சொன்னாலும் செய்கிறார். மேலும், எனக்கு அப் பெண், தொடர்ந்து காதல் மற்றும் இரட்டை அர்த்த எஸ்.எம்.எஸ்., அனுப்பிக் கொண்டிருக்கிறாள்.

எனக்கு மிகவும் பயமாக உள்ளது. ஏனெனில் பதினைந்து வருட தோ ழியும், என்னைத் தப்பாக புரிந்து கொண்டாள். ஒரு நல்ல நண்பனாக மற்றும் அண்ணனாக, நான் சொன்ன அறிவுரையைக் கேட்டவள், இன்று எனக்கு எதிராக மாறி விட்டாள் என்பதை நினைக்கும் போது, மிகவும் வருத்தமாக உள்ளது. மேலும், எனக்கு கல்யாணம் நடை பெறாமல் போய் விடுமோ என்ற எண்ணம் என்னை நிலை தடுமாறச் செய்கிறது.

நடத்தைக் கெட்டவள், என் மனைவியாகி விடுவாளோ, என்ற எண் ணமும் ஏற்படுகிறது. நித்தம், நித்தம் தூக்கம் வராமல் அழுது கொ ண்டிருக்கிறேன். தப்பு செய்தவர்கள் நிம்மதியாக இருக்கின்றனர். நீங்கள் தான் நல்ல பதிலும், தைரியமான வார்த்தைகளும் சொல்லி, என் மனநிலையை மாற்றுவீர்களாக! மேலும், வேறு கல்லூரிக்கு பணி மாற்றம் செய்து கொள்ளலாமா என்ற மனநிலையில் இருக் கிறேன்.

— தக்க பதிலை எதிர்பார்க்கும்
தங்கள் மகன்.

அன்புள்ள மகனுக்கு—

நீ திருமண வாழ்க்கையிலும், ஆசிரியப் பணியிலும் ஒரு சேர கால் ஊன்ற முடியாத, 32 வயது முதிர் கண்ணன். “நாம் இன்னும் பிரம்மச் சாரியாகவே இருக்க, எல்லாவற்றையும் ஆண்டு அனுபவித்து முடி த்த துறைத்தலைவர் கிழவன், பெண்கள் விஷயத்தில் சக்கைப்போ டு போடுகிறானே…’ என்ற பொறாமை உணர்வு, உன்னுள் சுனாமி யாய் சுழன்றடிக்கிறது.

முந்தைய பணியில், துறைத் தலைவர் செய்த காதல் லீலைகளை மோப்பம் பிடித்திருக்கிறாய். உன்னுடன் பணிபுரியும் சக விரிவுரை யாளரும், துறைத் தலைவரும், புதிதாய் பணிக்கு சேர்ந்த பெண் விரி வுரையாளரை, தங்கள் தகாத ஆசைக்கு இணங்க செய்ததை உளவ றிந்திருக்கிறாய்.

எல்லாவற்றுக்கும் மேலாக, “இந்த இரு திருட்டுப் பூனைகளுடன் பழகாதே’ என, அந்த பெண்ணுக்கு அபாய எச்சரிக்கை வேறு விடுத்தி ருக்கிறாய். விளைவு, இரு வில்லன்களையும், ஒரு வில்லியையும் சம்பாதித்திருக்கிறாய்.

துறைத் தலைவர் உன் கைபேசி எண்களை திருடி, உனக்கு பார்க்கப் படும் வரன்களை நரித்தனமாய் கெடுத்து வருகிறார். பார்க்கும் வேலை பறிபோய் விடுமோ, ஒரு நடத்தை கெட்டவள் மனைவியாய் அமைந்து விடுவாளோ என்ற பய உணர்வுகள், உன் தூக்கத்தை கெடுக்கின்றன.

உண்மையைச் சொல்… ஒரு நல்ல நண்பனாக மற்றும் உன் உடன் பிறவா அண்ணனாகவா, அந்த பெண் விரிவுரையாளருக்கு அறிவு ரைகள் வழங்கினாய்? இல்லவே இல்லை. அப்பெண்ணிடம் உனக்கு ரகசிய ஈர்ப்பு இருந்திருக்கிறது. “நமக்கும் இவள் கிடைத்தால், நன் றாக இருக்குமே…’ என, உன் சபல மனம், நப்பாசை பட்டிருக்கிறது. நீ சிறுவயதிலிருந்து இப்படி தான் இருந்திருக்கிறாய். இதனால், உன் டீனேஜிலிருந்து பல பிரச்னைகளை சந்தித்து வந்திருக்கிறாய்.

“அய்யய்யோ… அப்படியெல்லாம் இல்லை யம்மா… நான் எங்கு அநீதி நடந்தாலும், அதை எதிர்த்து குரல் கொடுக்கும் விசில் ப்ளோயர்’ என்கிறாயா? ஒரு நல்ல விசில் ப்ளோயர், தன் செயலால் நேரும் எதிர் விளைவுகளை கண்டு புலம்ப மாட்டான். போர்க்களத்தில் ஒப் பாரி தேவையா கண்ணா?

மொத்தத்தில், நீ பிறர் தவறுகள் செய்வதை பார்த்து ஏங்கும் ஜீவன். இப்போது ஆப்பை அசைத்து, வால் மாட்டிக் கொண்ட குரங்காய் பரிதவிக்கிறாய். “தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்பர் மகனே… மேற் சொன்ன உன் பிரச்னைக்கு, அடிப்படைக் காரணம், உன் மாரல் போலீஸ் மனோபாவம் தான்.

பணியிடங்களில் ஆயிரம் ஆண் – பெண் உறவு அத்துமீறல்கள், அரங் கேறிக் கொண்டே தான் இருக்கும். அதை நேரடியாக தடுக்க முயன் றால், நமக்கு தான் சேதாரங்கள் ஏற்படும். அதனால், அந்த அத்து மீற ல்களை மனதால் மட்டும் வெறுத்து தண்டித்து விட்டு, நாம் அதனில் ஈடுபடாமல் ஒதுங்கி நிற்க வேண்டும்.

நம் ஆசிரியப் பணியை இன்னும் எவ்வளவு சிறப்பாக செய்து, கல் லூரி நிர்வாகத்தின் அங்கீகாரத்தையும், மாணவர்களின் நன் மதிப் பையும் பெறலாம் என, நீ யோசிப்பது நல்லது. துறைத் தலைவரின் அந்தரங்கத்திற்குள் நீ மூக்கை நீட்டியது, அர்த்த பொருத்த மில்லாத வேலை.

வழக்கமாய் கிடைக்கும் திருட்டுச் சுகம், உன்னால் தடைபட்டால், உன் வேலையை தொலைத்துக் கட்டவும் அல்லது ஆள் வைத்து உன் னை கொல்லவும் கூட, அந்த துறைத் தலைவர் கிழவன் முயற்சிக் கக் கூடும்.

ஒரு நேர்மையான அப்பாவிப் பெண்ணை, துறைத் தலைவர் வழி கெடுக்கப் பார்த்து, நீ குறுக்கே புகுந்து தடுத்திருந்தாய் எனில், அதில் ஒரு நியாயம் இருந்திருக்கும்.

இனி, நீ என்ன செய்ய வேண்டும் தெரியுமா மகனே…

இதே சம்பளத்தில், புதிய பணியிடம் கிடைத்தால், நைச்சியமாக மாறி விடு. உனக்கு வரன் பார்க்கும் விஷயத்தை எல்லாம், துறை மக்களிடம் உளறும் ஓட்டை வாயனாக இராதே. உனக்கும், நிர்வாக த்துக்கும் இடையேயான இரட்டை வழி தகவல் தொடர்பை மேம்படு த்திக்கொள். சிறுவயதிலிருந்தே அறிமுகமான உறவுக்காரப் பெண் ணை மணந்து கொள். இனி எப்போதும், ஆண் – பெண் உறவு அத்து மீறல்களில் தலையிட்டு, குளவிக் கூட்டத்தை கலைக்காதே.

உன் கைபேசி எண்ணை உடனே மாற்று. “நடத்தை கெட்ட பெண் மனைவியாய் அமைந்து விடுவாளோ…’ என்ற, உன் வீண் மனக் குழப்பத்தை கைவிடு. நல்லதே நடக்கும் என, திண்ணமாக நம்பு.

யோகா தியானத்தில் ஈடுபடு. உடலும், மனமும் லேசாகும்; நன்கு தூக்கம் வரும்; அழுகை ஓயும். திருமணத்திற்கு பின், சக பெண் விரி வுரையாளர்களிடம் பேசுவதை குறைத்துக் கொள்.

திருமண வாழ்க்கையிலும், ஆசிரியப் பணியிலும், இரட்டை வெற்றி பெற வாழ்த்துக்கள் மகனே!

—என்றென்றும்  தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.
(தினமலர் வாரமலர் நாளிதழுக்கு நன்றி)
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
விதை2விருட்சம் வரவேற்கிறது.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

2 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: