Monday, January 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இணையத்தில் தேடியதை தேடுகிறோம் என்று நினைவூட்டும் அனோடோரி இணையம்

நாம் பார்த்ததை மறந்து விடுகிறோம்.அதனால் இணையத்தில் தேடி யதையே தேடிக்கொண்டிருக்கிறோம் என்று இடித்து சொல்கிறது அனோடோரி இணையதளம். இடி த்து சொல்வதோடு நின்று விடாம ல் இதற்கான தீர்வையும் வழங்கு கிறது.

அனோடோரி வழங்கும் தீர்வு பார் த்த இணையபக்கங்களை குறித்து வைத்து கொள்ளும் புக்மார்கிங் சேவை.

புக்மார்கிங் சேவைகளுக்கு குறைவு இல்லை என்றாலும் அனோ டோரி கொஞ்சம் வித்தியாசமானது.வழக்கமான புக்மார் கிம்ங் சேவைகளை விட மேம்பட் டது என்று அனோ டோரி தன்னை பற்றி வர் ணித்து கொள்கிறது.

அதாவது வளர்ந்து விட்ட புக்மார்கிங் சேவை என்று பெருமை பட்டு கொள்கிற து.

அனோடோரி அப்படி என்ன செய்கிறது என்றால் புக்மார்க் செய்ய விரும்பும் இணையதளத்தை அடிகோடிட்டு அதற்கான விளக்க குறிப் புகளோடு சேமித்து வைத்து கொள்ள உதவுகிறது.

நாளிதழ் அல்லது புத்தகங்களில் ஒரு விஷய‌த்தை படிக்கும் போது பின்னர் தேவை என்றால் அதில் முக் கிய பகுதியை அடிக்கோட்டி வைத்து கொள்வோம் அல்லவா அதே போலவே அனோடோரியில் எந்த இணையதளத்திலும் அதன் முக்கிய பகுதிகளை மஞ் சள் வண் ணத்தில் அடிக்கோடிட்டு கொள்ளலாம்.

தேவைப்பட்டால் அவற்றின் அருகே அந்த பக்கத்திற்கான விளக்க குறிப்புகளையும் எழுதி வைக்கலாம்.

புக்மார்கிங் செய்வதே ஏற்கனவே பார்த்த இணையதளம் எது என்ப தை மறந்துவிடாமல் இருப்பதற்காக தா னே.ஆனால் இணைய தளங்களை புக்மார்க் செய்துவிட்டு பின்னர் அவ ற் றை மீண்டும் பார்க்கும்போது அவ ற்றை ஏன் குறித்து வைத்தோம் என்று தெரியாமல் குழம்பி தவிக் கும் அனுபவமும் பல முறை நேரலாம் அல்லவா?

இந்த குழப்பத்தை தவிர்க்கும் வகையில் தான் அந்த தளங்களில் நம்மை கவர்ந்தவை எவை என்றும் அந்த தளத்தை குறித்து வைத்தது ஏன் என்றும் குறிப்பெழுதி வைக்கும்போது மீண்டும் அந் த தளத்தை பார்க்கும் போதே இந்த குறிப்பு கள் வழகாட்டியாக விளங்கும்.

இணையதளங்கள்மீது இப்படி அடிக்கோடி டுவது மிகவும் சுலபம். இந்த தளத்திஒல் உறுப்பினராகி புக்மார்கிங் டூல்பாரை நமது பிரவுசரில் இணைத்து கொண்டால் போது ம், அதன்பிறகு எப்போது தேவையோ அப்போது புக்மார்கிங் பட்ட னை கிளிக் செய்தால் போதும் அடிக் கோடிடுவதற்கான வசதியும் குறிப்பெழுதும் வசதியும் திரையில் தோன்றுகிறது.

இப்படி எத்தனை தளங்களை வேண் டுமானாலும் குறிப்புகளோடு சேமித் து கொள்ளலாம்.இந்த தளங்களின் பட்டியலை எப்போடு வேண்டுமானா லும் பார்க்கலாம் என்பதோடு இவற் றை நண்பர்களோடு பகிர்ந்து கொள் ளவும் செய்யலாம்.

ஆக நாம் பார்த்து ரசித்த தளங்களை நண்பர்களும் அவற்றின் விள க்க குறிப்புகளோடு காணலாம் என்பதோ டு நாமும் மற்றவர்களின் சேமிப்பு பட்டியலை பார்த்து சுவாரஸ்ய‌மான இணையதளங்களை தெரிந்து கொள்ளலாம்.

டிவிட்டரில் இருப்பது போல சக உறுப்பினர்களை பின் தொடர‌வும் செய்யலாம்.அந்த வகையில் சமூக வலைப்பின்னல் தன்மை கொ ண்டதாகவும் இந்த புக்மார்கிம்ங் சேவை விளங்குகிறது.

சக உறுப்பினர்கள் சேமித்து வைத் துள்ள தளங்களையும் உலா வர லாம்.குறிப்பிட்ட வகை தளங்கள் உள்ளதா என்று தேடிப்பார்க்கும் வசதியும் உள்ளது.

அஷோக் நாயர் என்னும் இந்தியரு ம் டிரேவிஸ் ஹார்ட்மேன் என்னு ம் அமெரிக்கரும் இணைந்து இந்த சேவையை உருவாக்கியு ள்ளனர்.

இந்த சேவைக்காக ஒரு வலைப்பதிவு பகுதியும் வைத்திருக்கின்றன ர்.அதில் ஒரு பதிவில் சோர்ஸ் அம்னிஷியா என்னும் பதத்தை பயன் படுத்தியுள்ளனர்.அதாவது இனையத்தில் எந்த தகவலை எந்த தளத் தில் பார்த்தோம் என்பதை மறந்து விட்டு திண்டாடுவது.அந்த இணை ய மறதியில் இருந்து விடுவிக்க தான் இந்த புக்மார்கிங் சேவை !

இணையதள முகவரி: http://annotary.com/

{ { { இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம் } } }
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.
உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: