Thursday, October 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உடலுக்கு சாக்லேட் நல்லதே!

10கிராம்கள் வரை சாக்லேட்டுகள் எடுத்துக் கொள்வது உடலின் ரத்த சுழற்சியை மேம்பாடடையச் செய்கிறது என்று ஐரோப்பிய உணவுப்பாதுகாப்பு ஆணை யம் அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளது.

பாரி காலேபாட் என்ற நிறுவனம் உலகின் மிக ப்பெரிய சாக்லேட் உற்பத்தியாளர்களாவர். இந் த நிறுவனம்தான் உணவுப்பொருள் தயாரிப்பு நிறுவனங்களான நெஸ்லே, மற்றும் ஹெர்ஷே ஆகிய வற்றிற்கு கோகோ மற்றும் சாக்கலேட் பொருட்களை சப்ளை செய்து வருகிறது.

இந்த நிறுவனம் ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையத்திடம் அளித்துள்ள சான்றில் 10 கிராம் டார்க் சாக்லேட் டுகளை எடுத்துக் கொள்வதாக் ரத்த ஓட்டம் சீரடைகிறது என்று லேப் ரிப்போர்ட்டை அளித்துள்ளது.

இந்த நிறுவனங்கள் தங்கள் உணவுப் பொருள் தயாரிப்பு பெக்குகளின் மேல் உரிமை கோரும் மருத்துவ குறிப்புகள் உண்மைதான் நம்பலாம் என்று ஐரோப் பிய உணவுப்பாதுகாப்பு ஆணையம் அதி கார பூர்வமாக அறிவித்துள்ளது.

முதன் முதலாக இத்தகைய மருத்துவ கோரலுக்கு ஐரோப்பிய உணவுப் பாதுகா ப்பு ஆணையம் அங்கீகாரம் அளித்துள் ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்! இது அவ்வளவு சுலபமல்ல. நம் நாடுகளி ல் லஞ்சம் கொடுத்தால் கிடைத்து விடும் அங்கு அது நடக்காது.

மரபான சாக்கலேட் தயாரிப்பு முறைகளில் ரத்த ஓட்டத்தை சீரடைய ச் செய்யும் பிளாவனால்கள் சிதைக்கப்படும், ஆனால் தங்கள் தயாரிப்பு முறைகளில் இது பாதுகாக்கப்படுவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமீப காலங்களில் அதிகாரபூ ர்வ விஞ்ஞான ஆய்வுகளிலு ம் சாக்லேட் சாப்பிடுவதால் ஆரோக்கியகேடு ஒன்றுமில் லை என்று கூறப்பட்டுள்ள தோடு, சில அதிகாரபூர்வ ஆய் வுகளில் சாக்கலேட்டுகளின் மருத்துவ பயன்களும் கூறப்பட்டு அது அங்கீகரிக்கப்பட்டும் உள்ளது.

2500 மனுக்கள் தங்களது மரு த்துவக் கோரல்களுக்காக ஐரோப்பிய யூனியனில் அளிக் கப்படுகிறது என்றால் 200 மனுக்களே ஏற்கப்படு கின்றன.

எனவே எந்த வித பயமும் இல் லாமல் சாக்கலேட் சாப்பிடலா ம் என்கிறது ஐரோப்பிய உணவு ப்பாதுகாப்பு ஆணையம்!

{ { { இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம் } } }
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.
உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: