ஒரு முஸ்லீம் சகோதரர் இன்னொரு முஸ்லிம் சகோதரரை சந்திக் கும் போது, அவருக்கு ஸலாம் உரைக்கவேண்டும்.
ஒரு முஸ்லீம் சகோதரர் இன்னொரு முஸ்லிம் சகோதரரை விருந் துக்கு அழைக்கும் போது அவ்வழைப்பை ஏற்று, அதன் படி சென்று அவரை சிறப்பிக்க வேண் டும்.
ஒரு முஸ்லீம் சகோதரர் இன்னொரு முஸ்லிம் சகோதரர் நலம் பல நாட (அறிவுரை கூறுதல்) வேண்டும் மேலும் அவர் விரும்பும்போது அவருக்கு இவர் நலம் நாடி அவரது வாழ்க்கை தரம் உயர்த்த உதவ வேண்டும்.
ஒரு முஸ்லிம்
சகோதரருக்கு தும்மல் வந்து “அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே உரியன) என்று அவர் கூறினால், அதற்கு இன்னொரு முஸ்லீம் சகோதரர் பதில் கூறவேண்டும்.
ஒரு முஸ்லீம் சகோதரர் நோயுற்று விட்டால் அவரை இன்னொரு முஸ்லிம் சகோதரர் நலம் விசாரிக்க வேண்டும்
ஒரு முஸ்லீம் சகோதரர் இறந்து விட்டால் அவருடை ய ஜனாஸாவுடன் செல்வது தான் அவருக்கு இவர் மீதுள்ள உரிமைகளாகும். அதாவது, அவருக்கு இன் னொரு முஸ்லிம் சகோதரர் ஆற்ற வேண்டிய முக்கிய கடமை யாகும்
இந்த ஆறுகடமைகளையும் ஒருவருக்குகொருவர் அனுசரித்துக் கொள்ள வேண்டும் என்ற உறுதியை இந்த நோன்பு காலத்தில் எடுக்க வேண்டும் என்று “அல்லாஹ்வின் தூதரான நபிகள் நாயகம்” கூறியுள்ளார்.