Monday, June 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இன்னொரு தனியார் பஸ் மோதி மாணவி பலி: பேருந்தை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்

 

சேலம் அம்மாபேட்டை அருகே இன்று மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய 3-ம் வகுப்பு மாணவி மீது தனியார் பஸ் மோதியது. இதில் அம் மாணவி சம்பவ இடத்திலே யே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி மக்கள் பஸ்சை அடித்து நொறுக்கினர்.
 
மேலும் சேலம்-ஆத்தூர் நெடு ஞ்சாலையில் சாலை மறியலி லும் ஈடுபட்டார்கள். இதனால் அங்கு நீண்டநேரம் போ க்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று அவர்களை சமாதா னப்படுத்தினர்.
 
இதுபற்றி பொதுமக்கள் கூறுகையில், ‘அடிக்கடி இப்பகுதியில் விபத் துகள் நடைபெறுகின்றன. இதைத் தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இறந்த மாணவியின் குடும்பத்திற்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும். இனியாவது இதுபோன்ற விபத்துகள் நடைபெறாமல் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். 
 
malaimalar

 
 
 
 

Leave a Reply