ஆகஸ்டு 2012 (இந்த) மாத உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம்
கடந்த சில ஆண்டுகளாக. . . தமிழக த்தில் வேல் மாநிலத்தவரின் எண் ணிக்கைக் கூடிவருகிறது. கட்டிட வேலை . . . அலுவலங்களில் காவல் வேலை . . . துணிக்கடை, உணவகங் கள், பெரிய பெரிய வணிக அங்காடி கள் இப்படி எல்லா இடங்களிலும் அஸ்ஸாம், பீகார், குஜராத், நேபாள ம் போன்ற பகுதிகளைச் சார்ந்தவர்க ளை நாம் அதிகமாகக் காண்கிறோ ம்.
அப்படியானால், தமிழனுக்கு இங்கே வேலையே இல்லையா? அல்லது இந்த வேலைகளுக்கு தமிழனுக் குத் தகுதியில்லையா? என்று கேட்கத் தோன்றுகிறது.
தமிழன் என்று சொல்லடா. . . தலை நிமிர்ந்து நில்லடா? தமிழன் என் றொரு இனமுண்டு . . தனியே அவனுக்கோர் குண முண்டு . .. தன்மானமுள்ளவன் தமிழன் . . . தமிழனின் உழைப்புக்கு ஈடு ண்டோ . . இந்த வரிகளைப்படி க்கும்போது தமிழர்களாகிய நம் நாடி நரம்புகளில் புத்துணர் வு ஏற்பட்ட காலம் ஒன்றுண்டு.
ஆனால் இன்று . . தமிழன் எங் கே? அவன் தன்மானம் எங்கே? அவனின் சலியாத உழைப்பு எங்கே? என்று தேட வேண்டியுள்ளது. காரணம் அவன் தனது வாழ்க்கையை சாராயக் கடைக்கு அடமான ம் வைத்து விட்டான். 200 ரூபாய் கூலியில் 100 ரூபாய் சரக்குக்கு? என்று ஒதுக்கீடு கொள்கையில் வாழ்கிறான் தமிழன் . . . எழுந்து வா . . தமிழினமே எழுந்து வா . . . என்று இப்போதெல்லாம் தமிழ னை சாராய க்கடை வாசலில்தா ன் தட்டி எழுப்ப வேண்டியிருக்கி றது.
ஆண்டுதோறும் குடியின் மூலம் தமிழக அரசுக்கு கிடைக்கும் வரு வாய் பல மடங்கு கூடிவருகிறது என்றால் நம் தமிழன் தன் வாழ்க் கையைத் தொலைத்துக் கொண் டிருக்கிறான் என்றுதானே அர்த் தம் மக்களின் குடியைக் கெடுத்து கிடைக்கும் வருவாயில் நடைபெ றும் ஆட்சிதான் குடியாட்சி என்ற அவப்பெயர் தமிழகத்திற்குத் தேவைதானா? தமிழன் தண்ணியக்கத் தான் லாயக்கு என்ற மாற்றா ரின் விமர்சனமும் தேவைதானா?
தமிழக முதல்வர் புரட்சித் தலைவி எதையும் மாற்றும் சாதனையாள ர், மதுவின் வருவாய் இல்லாமலே, மறுமலர்ச்சி பெற்றுள்ள குஜராத்தின் மோடி மஸ்தான் வித்தையை தமிழக முதல்வரும் உடனடியாக கற்றுத்தெ ளிய வேண்டும், .தேற வேண்டும்.
மயக்கத்திலிருக்கும் தமிழனை மீண் டும் தெளிவுபடுத்த வேண்டும். அப்படி செய்தால், புரட்சித்தலைவி உண்மை யான தமிழினத் தலைவியாக காந்தி யின் கனவை மெய்ப்பித்த கர்ம வீர ராக போற்றப்படுவார்.
உரத்த சிந்தனையுடன் உடனடியாய் செயல்பட்டு உலகளவில் தமிழ னின் நிலையை உயர்த்த முதல்ரவை வேண்டுகிறோம்.