
தேனி தமிழ்நாட்டிலேயே முதல் நகராட்சியா க 1987-ல் தேர்ந்தெடுக் கப்பட்டது.
இம்மாவட்டத்திலுள்ள பெரிய குளம் நகரா ட்சி 100 ஆவது ஆண்டு விழா கண்டுள்ளது.
ஆசியாவிலேயே நீளமான குழாய் நீர்மின் நிலையம் சுருளியாறு நீர் மின் நிலையம் தான்.
தமிழ்நாட்டிலேயே பெரிய சந்தை பொள்ளாச் சி, இரண்டாவதாக சந்தை தேனி
இம்மாவட்டத்திலுள்ள உத்தம்பாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் கல்லூரி மைதானம்தான் மதுரை மாவட்டத் திலேயே பெரிய மைதா னமாகும்.
இம்மாவட்டத்திலுள்ள பண்ணைப் புரத்தி ல் பெண்களுக்கெனத் தனி நூலகம் உள் ளது.
இம்மாவட்டத்திலுள்ள இராயப்பன்பட்டி என்னும் ஊருக்கு அருகி லுள்ள சண்மு கா நதி நீர்த்திட்டம் 7.65 கோடி ரூபாய் செலவில் எம். ஜி.ஆரால் துவக்கி வைக்க ப்பட்டதாகும்.
முதலமைச்சராக காமராஜர் இருந்தபோது கட்டப் பட்ட வைகை அணை இன்றும் வலுவாக இருப்பது டன் சிறந்த சுற்றுலா ஸ்தலமாக வும் விளங்குகிறது.
கம்பம் பள்ளத்தாக்கிலுள்ள சுருளி மலை முருக பெருமானின் ஏழாவது படைவீடாகும். முப்பத்து முக் கோடி தேவர்கள் வாழ்ந்ததாக கருதப்படும் மிக உய ர்ந்த புண்ணி ய ஸ்தலமாகும்.
இந்த மாவட்டத்தில் சின்னமனூருக்கு அருகிலுள்ள பூசாரி கவுண் டன் பட்டியில் எலும்பு முறிவு, எலும்பு விலகுதல், சதை பிரண்டது ஆகிய வைகளுக்கு படிக்காத பரம்பரை வைத்தியர்களால் வைத்தி யம் பார்க்கப்படுகிறது.
வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் கோயில் கோபு ரத்தில் நேரு, கமலா, காந்தி, கஸ்தூரி பாய், வல்லபாய் படேல் ஆகியோரின் சிற்பங்கள் உள்ளன• சுருளிமலை அடிவாரத்தில் இந்திரா காந்தி, நேரு ஆகியோ ரின் முழு உருவச்சிலைகள் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டுள்ளன•
இம்மாவட்டத்திலுள்ள பெரியகுளம் மாம்பழத்திற்குப் பெயர் பெற்ற து. அதேபோல் ஏலம், காபி, இலவம்பஞ்சு ஆகியவற்றிற்கு பெயர் பெற்றது. ஆண்டிப்ப ட்டி ஏரியாவிலுள்ள காற்றாடிகள் மூலம் மின்சாரம் எடுக்கப்படுகிறது.
உத்தம்ப்பாளையம் ஸ்ரீகாளத்தீஸ்வரர் கோ யில் காளஹஸ்திக்கு ஈடாகப் போற்றப்படுகி ன்றனது.
ஆண்டிப்பட்டி மாவூத்துவேலப்பர் கோயி ல், சின்னமனூர் ஸ்ரீசிவ காமியம்மன் கோ யில், பெரிய குளம் பால சுப்பிரமணிய சுவாமி கோயில், கோம்பை ஸ்ரீரெங்கநா தர் கோயில், ஜம்புலிபுத்தூர் ஸ்ரீபெருமாள் கோயில், ஸ்ரீ பெருமாள் கோயில் அல்லி நகரம் ஸ்ரீ வீரப்ப அய்யனார் கோயில், பெரிய குளம் ஸ்ரீ கைலாசநாதர் கோயில் ஆகியவை புராதனச் சிறப்பு க்கள் பெற்றக் கோயில்களாகும்.
தொகுப்பு – இரா ரெங்கசாமி (நம் உரத்த சிந்தனை)
ok…..கோயம்புத்தூர் மாவட்ட சிறப்பு சொல்லவும்
very soon