Saturday, October 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

"நான் வாய்ப்பு கேட்டு அலையவும் இல்லை, நான் யாரையும் காதலிக்க‍வுமில்லை" – நடிகை ஹன்சிகா

 

அசின், திரிஷா, இலியானா, தமன்னா, காஜல் அகர்வால் போன்ற நடி கைகள் இந்திப் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுவதோடு அதற்கா ன முயற்சியில் இறங்கியும் வாய்ப்பு தேடி அலையவும் செய்கின்றனர். அதில் சிறிதள வு வெற்றியும் சில நடிகைகள் அடைந்துள் ள‍னர்.

ஆனால் ஹன்சிகாவோ இந்தியில் நடிக்க விரும்பாமல் தென்னிந் திய படங்களில் மட்டுமே நடிக்க அதிக ஆர்வம் காட்டுவதா க வந்த செய்தியை தொடர்ந்து அவர் அளி த்த‍ பதில்

தமிழ், தெலுங்கு திரையுலகில் நான் நல்ல தொரு இடத்தில் இருக்கி றேன். இங்கு நான் பிசியாக நடிக்கவும் செய்கிறேன். இந்திப் படங்க ளில் நடிக்க எனக்கு ஆர்வம் இல்லை. இந்தியில் ரூ.7 லட்சத்திலி ருந்து சுமார் ரூ.20 லட்சம் வரை சம்பளம் துரவார்கள் ஆனால் தமிழ், தெலு ங்கு உள்ளிட்ட‍ தென்னிந்திய திரைப்படங்களில் அதைவிட அதிக தொகை சம்பளமாக தருகிறார்கள் அதோடு மட்டுமின்றி நல்ல நல்ல‍ கதாபாத்திரங்களிலும் நடிக்க முடிகிறது.

இதே இந்தித்திரைப்படங்களில் நடி கைகளுக்கு குறைவான சீன்களே கொடுக்கிறார்கள் மேலும் அங்கு எல்லாப் பெருமைகளும் நடிகர்களு க்குத்தான் போய் சேருகிறது. நடிகை களுக்கு எதுவும் கிடைப்பது இல்லை . தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வரும் எனக்கு மரியாதை தரு கிறார்கள். நல்ல நல்ல‍ கதாபாத்திரங் களில் நடிக்க வாய்ப்பும் தருகிறார்கள்.
.
மேலும் பெரிய நடிகர்களான விஜய், தனுஷ், ஜெயம் ரவி, அல்லு அர்ஜுன், நாக சைதன்யா போன்றவ‌ர்களுடன் நடிக்கவும் வாயப்பு கிடைக்கிறது. நான் சல்மான்கா னிடம் வாய்ப்பு கேட்டு அலைவதாக வும் நான் காதலிப்ப‍தாக வந்த செய்திகள் அனைத்தும் பொய். நான் அவரிடம் வாய்ப்பு கேட்கவுமில்லை. நான் யாரையும் காதலி க்கவும் இல்லை. இவ்வாறு ஹன்சிகா கூறினார்.

 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: