Sunday, October 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பிளாட் (மனை) வாங்குவதற்கு போகும் முன் நீங்கள் கவனத்தில் கொள்ள‍ வேண்டியது.

ண்மைக் காலமாக நகரங் களை ஒட்டியுள்ள பகுதிக ளில் புதுப்புது லே-அவுட்கள் தின மும் முளைக்கின்றன. ஆயிரக் கணக்கில் போடப்படும் இந்த பிளாட்களை எப்படியாவது விற்றுவிட வேண்டும் என் பதில் குறியாக இருக்கின் றன ரியல் எஸ்டேட் நிறுவன ங்கள். டிவி துணை நடிகைகளை வை த்து இடத்தின் அருமை பெரு மைகளை எடுத்துச் சொல்வதில் தொடங்கி, ‘ஃப்ரீ சைட் விசிட்’ என பல வகையிலும் விளம்பரம் செய்கின்றன. இந்த இடங்களை நீங்க ள் வாங்கப்போனால் என்னென்ன விஷயங்களில் உஷாராக இருக்க வேண்டும்? ஏற்கெனவே போய் வந்தவர்களின் அனுபவங்களிலிருந் து இதை நன்றாகவே தெரிந்து கொள்ளலாம். சுவாரஸ்யமான அந்த அனுபவங்களின் தொகுப்பு இனி:
 
சொல்வது ஒன்று, காட்டுவது வேறு..!
 

அரை கிரவுண்ட் மனை 40,000 ரூபாய் என விளம்பரம் செய்வார் கள். விலை குறைவாய் இருக்கி றதே என நீங்கள் போனால், மாட் டிக்கொள்வீர்கள். சென்னை மயி லாப்பூரை சேர்ந்த கண்ணப்பனி ன் அனுபவம் இது.

”வந்தவாசி அருகே அரை கிரவு ண்ட் மனை 40,000 ரூபாய் என டிவி-யில் விளம்பரம் பார்த்தேன். ஒரு லட்ச ரூபாயில் இரண்டு மனை  வாங்கிப் போடலாம் என்று நினைத்து மனையைப் பார்க்கப் போனேன். அங்கு போ னவுடன், ’40 ஆயிரம் ரூபாய் பிளாட்கள் எல்லாமே வித்துடு ச்சு. நான்கு பிளாட் தான் மிச்சம் இருக்கு’ என்று லே-அவுட்டின் கடைசியில் ஒரு இடத்தைக் காட் டினார்கள். அது எங்களுக்கு பிடி க்கவில்லை என்ப தைத் தெரிந் துகொண்டவுடன்,  ”இதை விட நல்ல இடம் அதோ அங்க இரு க்கு! ஆனா, அரை கிரவுண்டு ஒரு லட்ச ரூபாய்” என்றார்கள். ‘அரை கிரவுண்டு 40 ஆயிரம் ரூபாய்ன்னுதானே சொல்லி கூட்டிக்கிட்டு வந்தீங்க’ன்னு கேட்டால், ”அதைத்தான் காட்டினோமே! உங்களுக்கு வேணுமின்னா அந்த இடத் தையே வாங்கிக்கிங்க!” என்றார்கள். அவர்களின் மார்க்கெட்டிங் தந்திரத் தைப் புரிந்துகொண்ட நான் இடமே வேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்” என்றார் கண்ணப்பன்.

பத்திரச் செலவு இலவசம்..!
 

‘இன்றிலிருந்து ஐந்து நாட்களுக்குள் முழுப் பணம் கட்டினால் பத்திரப் பதிவு செலவு இலவசம்’ என சில ரியல் எஸ்டேட் நிறுவன  ங்கள் பளிச்சென விளம்பரம் செய்கின் றன. இந்த பத்திரச் செலவு பெரும்பாலும் 5,000 ரூபாயாகத்தான் இருக்கும். இந்த உண்மை தெரியாத சிலர், சொற்ப பணத் துக்கு ஆசைப்பட்டு, அதைவிட பல மடங் கு பணத்தை இழக்கிறார்கள். பத்திரச் செலவு இலவசம் என யாராவது சொன் னால், முதலில் எவ்வளவு என்பதை தெரிந்துகொள்வது நல்ல து. தற் போது 25 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான இடங்களுக்கு பத்திரம் பதியத் தேவை இல்லை என்று சொல்லி இருக்கிறது அரசாங்கம். 1.5 – 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள (உண்மையில்) இடங்களுக்கு இது மாதிரியான சலுகைகளைத் தந்தால் மட்டுமே அவற்றை பரிசீலனை செய்யலாம்.

 
இலவசங்கள் மூலம் இழுப்பு..!
 
மந்தமாக இருக்கும் பிளாட்களின் விற்பனையை பரபரப்பாக்கவே இந்த இலவச இழுப்பு! அண்மையில் நண்பர் ஒருவர் இரண்டு லட்ச ரூபாய் தந
்து ஒரு மனை வாங்கினார். அவர் வாங்கிய பிறகு அந்த இடத்தை யாருமே வாங்கவில் லையாம். ஆனால், ஒரு பிளாட் வாங்கி னால் ஒரு ஸ்கூட்டி இல வசம்! இடத்தின் விலை 2.5 லட்ச ரூபாய்! என சமீபத்தில் அறிவிக்க, சில நாட்களி லேயே அத்தனை இடங்களும் விற்றுத் தீர்ந்ததாம். இடத்தின் விலை அநியாயத் துக்கு ஏற்றிவிட்டுத்தான் இப்படி இலவச ங்களைத் தருகிறார்கள் என்பது தெரி யாத சில அப்பாவிகள் லட்சக் கணக்கில் பணத்தை இழக்கிறார்கள்.
 
பெண்கள் சென்டிமென்ட்..!
 

இன்னும் சில நிறுவனங்கள் பெண்கள் பெயரில் பத்திரப் பதிவு செய் தால், தங்க நாணயம், பட்டுப் புடவை என்கின்றன. இரண்டு அல்லது மூன்று லட்ச ரூபாய் மனைக்கு இரண்டாயிரம், மூவாயிரம் ரூபாய் பட்டுப் புட வையை கூடுதலாக தருவதில் லே-அவுட் போட்டவர்களுக்கு எந்த நஷ்டமும் வராது. இந்த தந்திரம் தெரியாத பெண்கள், அந்த இடத்தை வாங்கியே தீர வேண்டும் என ஆண்களை டார்ச்சர் செய்வதுதான் கொடுமை!

சிப்காட் வருது!
 

ஏதாவது ஒரு பகுதியில் சிப்காட் வருவதாக அரசு அறிவித்தால் அந்த அறிவிப்பை பயன்படுத்தியே இடங்க ளை விற்றுவிடத் துடிக்கின்றன சில ரியல் எஸ்டேட் நிறுவனங்கள். அரசு அறிவித்த சிப்காட் பேட்டை பத்து, பதி னைந்து கி.மீ. தூரத்திற்கு அப்பால் இருக்க, இதோ, இங்கதான் வருது! ரொம்ப பக்கத்துலதான் இருக்க என்று சொல்லியே இடத்தை விற்றுவிடுகி றார்கள். தப்பித்தவறி ஏதாவது ஒரு தொழிற் சாலை இருக்கும்பட்சத்தில், அதையும்  சிப் காட் லிஸ்ட்டில் சேர்த்துச் சொல்லிவிடுகிறார்கள். ஒரு இடத்தில் 400 அடி சாலை வருகிறது, சிப்காட் வருகிறது என்று சொன்னால், அதெல்லாம் உண் மையா என்று தீர விசாரித்து, உறுதிசெய்து கொள்ளாமல் அட்வான் ஸ் பணத்தை அவசரப்பட்டு தராதீர்கள்.

இருக்கு..! இல்லை..!

  
பல இடங்களில் கார்னர் பிளாட்களை ஏஜென்டுகள் அல்லது புர மோட்டர்கள் அல்லது அவர்க ளுக்கு வேண்டப்பட்டவர்கள் வேண்டுமென்றே புக் செய்து விடுகிறார்கள். நீங்கள் அந்த இடத்தைக் கேட்டால், ஆபீஸி ல் கேட்டு சொல்கிறேன் என் பார்கள். பிறகு, சார், நீங்க அதிர்ஷ்டசாலி! நீங்க கேட்ட இடமே கிடைச்சுடுச்சு! என்று கொஞ்சம் இழுத்தடித்துவிட்டு தருவார்கள். செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி இடம் விற் கும் முயற்சிதான் இது என்பது தெரியாமல், கார்னர் பிளாட் கிடைச் சுடுச்சு என்று சந்தோஷமாக இடத்தை வாங்கிக்கொண்டு போகிற நல்லவர் களும் பலர் உண்டு. 

பிரமாண்டத்தைப் பார்த்து ஏமாறாதீர்கள்..!
 
hollow block

லே-அவுட் ஆரம்பத்தில் அரண்மனை தோற்றத்தில் நுழைவுவாயில் இருக் கும். உள்ளே பிளாட்களை பிரித்துக் காட்டும் கற்கள் ஒழுங்காக நட்டு வை த்திருப்பார்கள். ரோடுகூட அருமையா கப் போட்டிருப்பார்கள். சில இடங்களி ல் குழந்தைகள் விளையாடுவதற்கா ன பூங்கா கூட அமைத்திருப்பார்கள். லே-அவுட்டின் ஆரம்பத்தில் ஹாலோ பிளாக் மூலம் ஒரே ஒரு கட்டடத் தைக் கட்டும் வேலை நடந்து கொண்டிருக் கும். இதை எல்லாம் பார்த்து, நீங்கள் வாயைப் பிளந்தால், ஏமாறப்போகிறீர் கள் என்று அர்த்தம்! காரணம், இவையெல்லாம் பிளாட்கள் விற்றுத் தீர்ந்து முடிகிற வரைதான் இருக்கும்! எல்லா பிளாட்களும் விற்று விட்டால், ஹாலோ பிளாக் வீட்டை அப்படியே பிடுங்கிக் கொ ண்டு போய், புதிதாக பிளாட் போட்டிருக்கும் வேறு லே-அவுட்டில் கொண் டு போய் வைத்து விடு வார்கள், ஜாக்கிரதை!

பஞ்சாயத்து அப்ரூவலா, உஷார்..!
 
காய்கறியைக் கூறுபோட்டு விற்கிற மாதிரி இடத்தை துண்டாக்கி விற்பதுதான்           பஞ்சாயத்து மனை அப்ரூவல் என்றாகிவிட்டது. இதற்கு முன் பஞ்சாயத்து பகுதியில் லே-அவுட் போட வேண்டும் என்றால் சம்பந்தப் பட்ட பஞ்சாயத்துத் தலைவர், இந்த இட த்தைப் பிரித்து லே-அவுட் போட ஆட்சே பனை இல்லை என எழுதித் தர வேண் டும். இப்போது அந்த விதிமுறை இல் லை என்பதால் பெரும்பாலான பஞ்சா யத்து லே-அவுட்களில் பஞ்சாயத்து தலைவரின் அனுமதி இல்லாம லே லே-அவுட் போடப்படுகின்றன. பஞ்சாயத்து கூட்டத்தில் தீர்மான ம் போட்டு லே-அவுட் போட அனுமதி கொடுக்கவில்லை அல்லது சம்பந்தப்பட்ட லே-அவுட்டில் சாலைகள் பஞ்சாய த்திடம் ஒப்படைக் கப்படவில்லை எனில் பிற்காலத்தில் வீடுகட்டும்போது சிக்கல்தான்!
 
சாப்பாட்டுக்கு காசு கொடு!
 

இடம் பார்க்க அழைத்துச் செல்ல வாகன வசதியை ஏற்பாடு செய்கி ன்றன சில நிறுவனங்கள். இப்படி அழை த்துச் செல்லப்படுகிறவர்கள், இடத்தைப் பார்த்துவிட்டு, எதுவும் வாங்கவில்லை எனில், ஆளுக்கு 50 ரூபாய் அல்லது 100 ரூபாய் தரவேண்டும் என்கின்றன. இன் னும் சில நிறுவனங்கள், வண்டிச்செல வு, மதிய சாப்பாடு, சாயந்திரம் டிபன், டீ செலவுக்கு 300 ரூபாய் முதல் 500 ரூபாய் தரவேண்டும் என்று கேட் கிறார்களாம். அண்மையில் தாம்பரத்திலிருந்து திண்டிவனத்திற்குச் சென்ற நண்பர் ஒருவர் இப்படி 500 ரூபாய் அழுது விட்டு வந்தாராம்.

 போலீஸில் புகார் செய்தால்..?
 

தகிடுதத்தம் செய்யும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மீது புகார் தர காவல் நிலையத்திற்குச்சென்றால், அதை வாங்க மறுக்கிறார்களாம் போலீஸ்காரர்க ள். ”அது நல்ல நிறுவனமாச்சே! 25 வருஷமா ஒரு புகார் வந்ததில்லையே!” என்று நம்மிட ம் சொல்லிவிட்டு, சம்பந்தப்பட்ட நிறுவனத் தின் அதிபருடன் பேசி, பிரச்னையை சுமூக மாக முடிக்கிற மாதிரி முடித்து, காசு பார்த்து விடுகிறார்களாம்! ரியல் எஸ்டே நிறுவனங் களுக்கும் லோக்கல் போலீஸுக்கும் பிஸின ஸ் உறவு இருப்பதே இதற்கு காரணம் என்கிறார்கள்! ஆக, இடம் வாங்கும் விஷயத்தில் உஷாராக இருந்தால் நஷ்டப் படாமல் தப்பிக் கலாம் என்பது மட்டும் உண்மை!

 
வார இதழ் ஒன்றில் வெளியானது

2 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: