எளியார்க்கு எளியவனாகவே முருகன் கருதப்படுகிறான். அன்பு ஒன்றே அவனை வழிபடுவதற்கு உரிய சடங்கும் மந்திரமும் ஆகும். அருணகிரி நாதப்பெருமான் முருகனைப்பாடும் அன்பைப் பாருங்க ள்:
“இத மொழி பகரினும் பத மொழி பகரினும்ஏழைக்கிரங்கும் பெருமாளே !”
“ஆதிக்கு மைந்தனென்று நீதிக்குள் நின்று அன்பர் ஆபத்தில் அஞ்சல் என்ற பெருமாளே !”
சும்மாவா சொன்னார்கள் ‘வாக்கிற்கு அருணகிரி‘ என்று !
– கோபால் மனோகர்