இந்த உலகத்தில் செல்லப்பிராணிகள் இல்லாத வீட்டைப்பார்க்கவே முடியாது. ஏனெனில் அந்த அளவில் அனைவருக்கும் செல்லப் பிரா ணிகள் என்றால் பிடிக்கும். அதிலு ம் இவர்கள் வீட்டில் நாய், பூனை, முயல், கிளி என்று எதுவானாலும் சரி, அவர்கள் வீட்டில் வளர்த்து மகி ழ்வார்கள். மேலும் செல்லப்பிரா ணிகளை வளர்ப்பவர்களுக்கு, எதை வாங்கினால் நம்முடன் எளி தில் அது பழகும், நாம் எவ்வாறு அத னுடன் பழகுவோம் என்பதும் நன்கு தெரியும். கொஞ்ச நாட்களில் அது வீட்டில் உள்ளவர்களுடன் மிகவும் நெருக்கமாகி, வீட்டில் ஒருவராக வே மாறிவிடும். என்னதான் செல்லப்பிராணிகளை விரும்பி வாங் கி, மனதளவில் சந்தோஷமடைகிறோமோ, அதே அளவில் உடலள விலும் நன்மையை அடைய வேண்டும். ஆகவே இவ்வாறு உடல் அளவில் நன்மையை பெற, அந்த செல்லப்பிராணியை எப்படி, எதற் காக சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று கால்நடை
மருத்துவர்கள் கூறுகின்றனர்.
* அலுவலகத்தில் உள்ள அதிக வே லையின் காரணமாக, மன அழுத்தத் துடன் வீட்டிற்கு வருவோம். அப்போது வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணி கள் நம்மை பார்க்கும்போது, ஆசை யோடு தாவிக்குதித்து நம்முடன் விளையாடும். அந்த நேரத்தில் நம் மிடம் விளையாடுவதைப் பார்க்கும் போது, மனஅழுத்தம் குறை ந்து, சற்று நிம்மதியாக இருக்கும். இந்த கட்டத்தில் நம்மை சமாதானப் படுத்துவதில், நம் செல்லப் பிரா ணியை தவிர யாராலும் நமது மன அழுத்தத்தை குறைக்க முடியாது. ஆகவே அத்தகைய நம் செல்லப் பிராணியை நாம் சுத்தமாக வைத் துக் கொள்ளாமல் இருந்தால், அதன்மேல் இருக்கும் கிருமிகள் நம்மைத் தாக்கி உடலில் நோயை ஏற்படுத்தும்.
* காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்யும்போது, நம்முடன் அந்த செல்லப்பிராணிகளையும் அழைத்துக் செல்லலாம். செல்லப் பிரா ணிகளுடன் விளையாட நிறைய விளையாட்டுக்கள் இருக்கின்றன. மேலும் நீங்கள் சோம்பேறியாக இருப்பவராக இருந்தால், நமது வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணியை அழைத்துச் செல்வது மிகவும் நல்லது. ஏனெனில் அதை நாம் வெளியில் அழைத்துச்செல்கிறோம் என்றால் மிகுந்த ஆசையோடு, அங்கம் இங்கும் ஓடி நம்முடன் விளையாடும். மேலும் இதுவே ஒரு நல்ல உட ற்பயிற்சியாக அமை யும்.
* வீட்டில் செல்லப்பிராணிகள் வாங்குகிறோம் என்றால், அதனை நமது நண்பனாகத்தான் நினைப்போம். மேலும் அவை நமக்கு மிக வும் விசுவாசமாக இருக்கும், எந்த நேரத்திலும் துரோகம் வி ளைவிக்காது. என்ன தான் பிரச் சனையை நீங்கள் சந்திக்க நேர் ந்தாலும், யார் உங்களை விட் டுச் சென்றாலும், நாம் ஆசை யாக வளர்க்கும் செல்லப்பிரா ணிகள் நம்மை விட்டுச் செல் லாது. இவற்றில் நாய்கள் தான் மிகவும் சிறந்தது.
* எத்தனை பேர் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து, நீங்கள் சொல்வதை கேட்கிறார்கள்? யாரும் இல்லையா? கவலைப்படவே ண் டாம். எந்த நேரத்திலும் நீங்கள் சொல்வதை மற்றும் நீங்கள் செய்வதை திரும்பி செய்யும் ஒரு உயிர், செல்லப்பிராணிகள் தான். அந்த நேரத்தில் உங்களு க்கு செல்லப்பிராணியைவிட சிறந்த நண்பர் யாராகவும் இரு க்க முடியாது. மேலும் என்ன கஷ்டம் என்றாலும், எந்த இரக சியம் என்றாலும் அதனை யாரி டமாவது சொல்ல வேண்டும் என்று தோன்றினால், அதை நம து செல்லப்பிராணிகளிடம் சொ ல்லலாம். சொல்லப்போனால், இந்த உலகில் யாரை நம்புகிறோ மோ, இல்லையோ, நமது செல்லப்பிராணிகளை நம்பலாம்.
* செல்லப்பிராணிகள் வீட்டில் இருந் தால், நமக்கு வீட்டில் ஒரு பாது காப்பு இருப்பது போல் இருக்கும். செல்லப் பிராணிகள் நமக்கு ஒரு சிறந்த நண் பன் என்று சொல்வதோடு, நமக்கு ஒரு நல்ல பாதுகாப்பையும் தரும். அது நம் முடன் இருக்கும்போது, கெட்ட எண் ணத்துடன் பழகும் எவரையும் விரை வில் காட்டிக் கொடுத்துவிடும்.
{ { இணையங்களில் படித்ததை இதமுடனே பகிர்கிறோம் } } }
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
i like pet animal