Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கவியரசர் கண்ணதாசனின் 'ஸ்ரீ கிருஷ்ண அந்தாதி'

கவியரசர் கண்ணதாசனின் கிருஷ்ண பக்தி தமிழுலகம் அறிந்தது! அவர் ‘ஸ்ரீ கிருஷ்ண அந்தாதி’ என்று 100 பாடல்களை படைத்திருக்கி றார். ‘கண்ணதாசன்’ இலக்கிய இதழில் தொடராக வெளி வந்தது. அற்புதமான கவிதைகள்! தமிழ்ச் சுவையும், பக்திச்சுவையும் ஒன் றை ஒன்று விஞ்சும்! கவிஞரின் அமர படைப்பு களில் இதுவும் ஒன்று. ”ஸ்ரீகிருஷ்ண அந்தாதி ‘யில் இருந்து இரண்டு பாடல்கள்..:கவியரசு அவர்களுக்கு நன்றியோடு !

“நாடுவதில் மிகத்தேவை 
நம்பிக்கை, வைராக்கியம்,
நல்ல பக்தி; 
தேடுவதில் மிகத்தேவை 
திட சித்தம், தேர்ந்த மனம் 
சிறந்த ஞானம்;
பாடுவதில் மிகத்தேவை 
ஊனுருக, உடலுருகப் 
பாடும் பாவம்;
கூடுவதில் மனைவியினும் 
கண்ணனோடு குழைவாகக் 
கூடு வீரே ! ( 77 )
கூடு வெறும் கூடாகிக் 
கொள்ளியிலே வீழ்ந்து விடும்; 
கொண்ட கோலம் 
காடு வரை வாராது;
கனல் தனையும் வெல்லாது;
கரைந்து போகும்!
ஆடுவதும் பாடுவதும் 
அறுபதிலோ இருபதிலோ
அடங்கிப் போகும் !
வாடுவதில் பயனில்லை;
‘சிக்’கென்று மாதவனை 
வளைப்பீர் நீரே ! (78 )
தேடியேனும் படிக்க வேண்டாமா நண்பர்களே.. ஸ்ரீ கிருஷ்ண அந்தாதியை !!
கோபால் மனோகர்

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: