Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சி.ஏ.(C.A) படித்தால் சாதிக்க‍ முடியுமா?

ஆற்றில் போட்டாலும் அளந்து போடு என்பது பழமொழி மக்க‍ளுக்கு விவரம் தெரிந்த நாள்முதல் கணக்கிடு தல் முறை பழக்க‍த்திற்கு வந்துள்ள‍து என்பதை பல்வேறு சான்றுகள்மூலம் அறிகிறோம். இம் முறையே பல்வேறு முறைகளில் அறிவியல் வளர்ச்சி யோடு பரிணாம வளர்ச்சிப் பெற்றுள்ள‍து. அவ் வாறு பெற்ற‍ வளர்ச்சியின் ஒரு பகுதியே தணிக்கை செய்தல் (Auditing) ஆகும். தற்போது CPT, PCC, IPCC (CA Final) ஆகிய நிலைகளை முடித்தால் Charter ed Accountant ஆகலாம். குறைந்த கட் ட‍ணம் அதிக செலவின்மை, தம்முடைய விருப்ப‍மான நேரத்தில் படித்து முன்னேற வாய்ப்பு உள்ள‍ கல்வி ஆகும்.

சமூகத்தில் அதிக மதிப்புள்ள‍ தொழிற்கல்வி ‘CA Course’ என்பதை தெளிவாக உணர்ந்து கொள் ள‍வும். சமீபத்திய நாளிதழ் தகவல் தகவல் என்ன‍வென் றால், தமிழகத்தில் B.E. மற் றும் B.Tech. பாடப்பிரிவுகள் கொண்ட 507 பொறியியல் கல்லூரிகள் உள்ள‍ன• இதில் மத்திய அரசு ஒதுக்கீடு போக 1,73,599 இடங்களை கல்ந்தாய்வு மூலம் நிரப் ப‍ப்படும் என்பதாகும். மத்திய அரசு கல்வி நிறுவனம் மற்றும் மற்ற‍ மாநில கல்வி நிறுவனங்கள் தவிர, தமிழகத்தில் மட்டுமுள்ள‍ பொறி யியல் கல்விக்கான எண்ணிக் கை இந்த வருடத்திற்கு மட்டும் 1,73,599 ஆகும். ஆனால் CA Journal (July 2012)-ல் 15-06-2012 அன் றைய கணக்கின்படி CA முடித் து உறுப்பினர் ஆனவ ர்கள் (01-04-1950முதல் 15-06-2012 வரை) 196748பேர் என்ற தகவல் வெளியிட்டுள்ள‍தை அனைவரும் ஆழ்ந்து யோசிக் க‍வும். தற்போது வளர்ந்து வரு ம் பொருளாதார வளர்ச்சியில் மேலும் நவீன கணிணி முறையில் கணக்கிடுதல் நடைபெறும்மு றை அதிகரிப்ப‍தாலும் MNC நிறுவனங்கள் அதிகம் பெருகுவதாலும், இனி CA படிப்பை முடித்த‍வர்களுக்கு நல்ல‍ எதிர்காலம் இருக்கும் என உறுதியாக நம்பலாம்.

– கல்வி டுடே

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: