புதுப் படங்களில் பழைய பாடல்கள் ரீமிக்ஸ் செய்யப்பட்டு வருகின் றன. தொட்டால் பூ மலரும், பொன்மகள் வந்தாள், வெத்தலையை போட்டேண்டி, என்னம்மா கண் ணு சவுக்கியமா, ஆசை நூறு வகை போ ன்ற பல பாடல்கள் ரீமிக்ஸ் செய்யப் பட்டு உள்ளன. இதற்கு இசையமைப் பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் கண்ட னம் தெரிவித்தார். சென்னையில் நேற் று அவர் நிருபர்களுக்கு அளித்த பேட் டி விவரம் வருமா று:-
கேள்வி: பழைய பாடல்கள் ரீமிக்ஸ் செய்யப்படுவது பற்றி என்ன நினைக் கிறீர்கள்?
பதில்: பழைய பாடல்களை ரீமிக்ஸ் செய்வது தப்பான காரியம். அதை பண்ண தைரியம் வேண்டும். ரீ மிக்ஸ் என்றால் கற்பழிப்பு என்று அர்த்தம். எல்லோருக்கும் திறமை இருக்கிறது. புதுசா பண்ணுங்க. சொந்த கற்பனையை பயன்படுத்து ங்க. ரீமிக்ஸ் பண்ண வேண்டாம். ரீமிக்ஸ் என்பது சிலநேரம் தப்பாக போய்விடும். அவரவர் கற்ப னையில் நல்லது செய்யுங்கள்.
கேள்வி: எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி போன்றோரின் பாடல்களுக்கு இ
சையமைத்தது பற்றி…
பதில்: நான் எம்ஜிஆர். சிவாஜி, ரஜி னிக்கு பாடல்களை உருவாக்கவி ல்லை. படத்தின் கேரக்டர்களுக்கு என்ன மெட்டு தேவையோ அதை போட்டு கொடுத்தேன். பொருத்த மான பாடல் வரிகளையும் அதில் சேர்த்தேன்.
கேள்வி: பழைய பாடல்களைபோ ல் கருத்துள்ள பாடல்கள் இப்போது வருவது இல்லையே?
பதில்: அந்த காலத்து பாடல்களை போல் இப்போதும் போட முடியும்.
ஆனால் நிர்ப்பந்தப்படுத்தி இப்போது பாட்டு வாங்குவதால் அதுபோல் வருவதில்லை.
கேள்வி:இசை வல்லுனர்களை ஒரே இடத்தில் திரட்டி நேரடியாக இசையமைப்பது இப்போது இல்லை யே?
ப: வசதி வரவர அசதிதான் அதற்கு காரணம். முன்பு உழைத்தோம். இப் போது மிஷின் வந்துவிட்டது. மிஷி னே பாட்டு வேலைகளையெல்லாம் செய்கிறது. மிஷினை வைத்து பாட்டுபோட எனக்கு தெரியாது.
இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்.
– malaimalar