Friday, November 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

""அத்திக்காய் காய் காய் . . !"" என்ற பாடலும் அதன் சிறப்பும் – வீடியோ

1962 ஆம் ஆண்டு பத்மினி பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த பி. ஆர். பந்தலு இயக்கத்தில் வெளிவந்து சக்கைபோடுபோட்ட‍ ப‌லே பாண்டியா தமிழ்த் திரைப்படத்தில் சிவாஜி கணேசன், எம்.ஆர். ராதா, தேவிகா, பாலாஜி மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத் தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் மூன்று வேடங்களில் தனது நடிப்பு திற னை நிரூபித்து இருப்பார்.

அப்பாவியாக ஒருவேடம், முரட் டு குணமுள்ள‍ ரௌடியாக ஒரு வேடம், சாதுவான விஞ்ஞானி யாக மூன்றாவதாக ஒரு வேடம் இந்த மூன்று வேடங்களில் நடி கர் திலகம் அவர்கள் தகுந்த வித் தியாசங்களோடு நடித்திருப்பா ர்.

இத்திரைப்படத்தில் இடம்பெற்ற‍ ஒரு பாடலே இந்த அத்திக்காய் காய் காய்.. என்ற பாடலாகும். இப்பாடலில் சமையலுக்கு பயன்படும் காய் கள் மற்றும் இதரப் பொருட்களின் பெய ர்களை கவிஞர் பயன்படுத்தி யிருப்பார். கவிஞருக்கு என்ன‍ ஒரு கற்பனை திறன் பாருங்கள். ஒவ்வொரு காயுக்கு ம் ஒவ்வொரு காதல் அர்த்த‍ங்களை சம்பந்தப்படுத்தியிருப்ப‍து நம் அனைவ ரின் புருவங்களையும் உயர்த் தும்.

இப்பாடலில் பயன்படுத்த‍ப்பட்டிருக்கும் காய்களின் பெயர்களை பட்டியலிட்டுள்ளேன். கீழுள்ள‍ பட்டியலில் உள்ள‍ காய்களின் பெயர்க ளையும், கவிஞர் தம் எண்ண‍ ஓட்ட‍தில் உதித்த‍ காய் என்று முடியும் வார்த்தைகளுடன் தொடர்படுத்தியிருப் பார். நீங்களே பாருங்கள் கேளுங்கள் சிறப்பு உணருங்கள்.

அத்திக்காய்
ஆலங்காய்
பாகற்காய்
அவரைக்காய்
கோவைக்காய்
மாதுளங்காய்
ஏலக்காய்
வாழக்காய்
ஜாதிக்காய்
தூதுவிளங்காய்
மிளகாய்
சுரைக்காய்
வெள்ள‍ரிக்காய்
கொற்ற‍வரங்காய்

மேலும் இப்பாடல் காட்சியின் மற்றொரு சிறப்பம்சம் என்ன‍ தெரியு மா?

இப்பாடலின் ஒரு காட்சியில் நடிகர் பாலாஜி அவர்களுடன் நடித்திருக்கும் நடிகை (மன்னிக்க‍வும் அவரது பெயர் தெரியவில்லை). அந்நடிகையின் கண் களில் மின்னொளிபட்டு பிரதிபலிக்கும் , அந்த பிரதி பலிக்கும் ஒளி நம் விழிக ளையே கூசச்செய்யும். அதிக திறனு ள்ள மின்னொளிகளுடன் இப்பாடல் காட்சி படமாக்க‍ப்பட்டிருப்ப‍து கண் கூடாகத் தெரிகிறது.

ந‌மது கண்ணில் யாராவது டார்ச் ஒளி அடித்தால் , நம் கண்கள் கூசும். அதன் காரணமாக நாம் கண்களை மூடிக்கொ ள்வோம் அல்ல‍து கைகளால் அதன் ஒளியை தடுப்போம் அல்லது அங்கிருந்து விலகிச்சென்றுவிடுவோம்.

அக்காலத்தில் அதிக திறனுள்ள‍ மின்னொளிகளுக்கிடையே தங்க ளது கண்கள் கூசினாலும் அதை வெளிக்காட்டாமல், தமது அழகிய விழிகளை மலர்ந்து காட்சிக்குத் தேவையான உணர்ச்சிகளை காட் டி நடித்திருப்பார்.  நடிகர் நடிகைக ள் நடித்திருப்ப‍து எவ்வ‍ள
வு பெரிய விஷயம்.

ஆகையால், அக்கால நடிகர் நடி கைகளை மனதார பாராட்டி ஒரு சபாஷ் போடுவோம்.

 

 

விதை2விருட்சம்
விதை2விருட்சம்
விதை2விருட்சம்

One Comment

Leave a Reply