Sunday, March 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அன்புடன் அந்தரங்கம் (13/08): உன், "லெஸ்பியன்' ஆசைகள், கணவனின் தாம்பத்யத்தை செல்லாக் காசாய் பார்க்கின்றன.

அன்புள்ள அம்மா—

எனக்குத் திருமணமாகி, மூன்று ஆண்டுகள் ஆகின்றன. இரண்டு வயதில், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. நானும், அவரும் ஒரே வயதினர். 15 வருடமாக காதலித் து, திருமணம் செய்துகொண் டோம். நாங்கள் இருவரும், ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள்; உறவின ரும் கூட. 

என் குடும்பம், வசதியான கூட்டு க் குடும்பம். எனக்கு விவரம் தெ ரிந்த நாளிலிருந்து, பண்ணையி ல் வேலை பார்த்த, ஒரு பாட்டியி டம் தான் வளர்ந்தேன். தாயின் அரவணைப்பே அறியாத வள்.

எனக்கு ஐந்து வயது இருக்கும் போது, பாட்டி இறந்து விட்டார். அதன் பின், மிகவும் தனிமை படுத்தப்பட் டேன்.

அப்போதுதான், என் பக்கத்து வீட்டு அக்காள், வயது 16 இருக்கும். என்னை, ஒரு தாயைப் போல அரவணைத்து, பார்த்துக் கொண்டாள். சாப்பிடுவது, குளிப்பது, தூங்குவது என்று, 24 மணி நேரமும், அவள் வீட்டில்தான். இரவு தூங்கும்போது, என்னை, அவள் மார்போடு அணைத்துக் கொள்வாள்.

அவளிடம் நான் மிகவும் சந்தோஷமாக இருந்தேன். சில மாதங்களி ல், அவள் திருமணமாகி சென்று விட்டாள்.

அதன்பின், பள்ளியில் சேர்க்கப்பட்டேன். படிப்பிலும் சரி, விளையாட் டிலும் சரி, நான் தான் முதல் மாணவி.

நான், எட்டாம் வகுப்பு படிக்கும்போது தான், என் கணவர், என்னை விரும்புவதாக கூறினார். குடும்பச் சூழ்நிலை காரணமாக, படிப்பை, 8ம் வகுப்போடு நிறுத்தி விட்டு, ஒரு வட்டிக் கடையில் வேலைக்குச் சேர்ந்தார்.

இச்சூழ்நிலையில்தான், அவருடைய அம்மா என்னை அழைத்து, “அவனுக்கு நல்ல வழிகாட்டியாக இருக்க வேண்டியது, உன் பொறுப் பு…’ என்றார். அன்றிலிருந்து, அவர் எழுதிய கடிதம், நான் எழுதிய கடிதம் என்று அனைத்திற்கும், போஸ்ட்மேன் அவரின் அம்மா தான்.

நான் கல்லூரி வாழ்க்கைக்குள் நுழையும்வரை, எங்கள் காதல் கண் ணியமாக இருந்தது. இதற்கிடையில், விவசாயம் மெல்ல, மெல்ல சரிந்தது; என் குடும்பமும் நலிந்தது. என் கணவரின் குடும்பம் மெல் ல, மெல்ல மேடேறியது. அவர் தனியாக கடை போட்டார். வேலை க்கு ஆட்கள், வீட்டில் வசதிகள் என பெருகின.

என் மாமியாரின் பேச்சிலும், நடத்தையிலும் மாற்றம் தெரிந்தது. நான் நினைத்தது போலவே, அவரின் அம்மா என்னை அழைத்து, “என் மகனை மறந்துவிட்டு, படித்து, உன் குடும்பத்தை காப்பாற்ற பார்…’ என்றார்.

நானும், என் மாமியாரின் மீதுள்ள கோபத்தில், அவரை வெறுத்தேன். அவர், என்னைச் சுற்றி சுற்றி வந்த போதெல்லாம் அலட்சியப்படுத்தி னேன். 

வீட்டில் இருந்தபடியே என்னால் முடிந்த வேலைக்குச்சென்று, எம். ஏ., எம்.பில்., படித் தேன். ஒரு பள்ளியில், நல்ல வேலையில் சேர்ந் தேன். நாங்கள் பிரிந்து, மூன்று ஆண்டுகள் ஓடின.

திடீரென்று ஒரு நாள் வந்து, மணிக்கணக்கில் பேசினார்; அனைத் தையும் மவுனமாகக் கேட்டேன். “உனக்கு சாமர்த்தியமிருந்தால், பெரியவர்கள் சம்மதத்தோடு, என்னை திருமணம் செய்…’ எனக்கூறி விட்டு சென்றேன். படாதபாடுபட்டு, ஒரு வழியாக என் திருமணம் நடந்தது. 

திருமணத்திற்கு முன், அவர் வெளியூரில் கடை வைத்திருந்ததால், நாங்கள் அங்கு குடியேறினோம். மிகவும் அன்பாக இருந்தார். வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்வார். வாரம் இருமுறை சினிமா, கேட்டதெல்லாம் மறுக்காமல் வாங்கித் தருவார். அடிக்கடி, “என் னைப் போல பிரியமானவன் யாருமே இல்லை…’ என்று கூறுவார். “என்னைப் போல நீயும் என்மேல் அன்பாக இருக்கிறாயா?’ என்பார்.

எனக்கென்று, ஒரு மொபைல் போன் வாங்கித் தந்தார். ஆனால், அந் த நம்பரை என் பெற்றோருக்கோ, என் தோழிகளுக்கோ, என் சகோ தர சகோதரியருக்கோ தரக் டாது என்றும், அவர்களுடன் பேச விரு ம்பினால், அவர் மொபைல் போனிலிருந்து, அவர்முன்தான் பேச வேண்டும் என்றார்.

நானும் ஆரம்பத்தில் அதை பெரிதாக நினைக்கவில்லை. தேவை இல்லாமல் என் அப்பா, அம்மா, சித்தி, சித்தப்பா இவர்களைப் பற்றி, தப்பாக பேசுவார். அதற்கு நான் கோபப்பட்டால், “என்னைவிட உனக் கு அவர்கள் மேல்தான் பிரியம் அதிகம். நான் இவ்வளவு செய்கிறே ன்; உனக்கு என்னை பிடிக்கவில்லை…’ என்று சண்டை போடுவார்.

நாளுக்கு நாள் அவரது கவனிப்பும் அதிகமானது, சைகோ போன்ற எண்ணமும் அதிக மானது. வார்த்தையால் என் உள்ளத்தை குத்தி கிழித்துவிட்டு, என் உடலோடு உறவாடிய அவருடன், என்னால் முழு மனதோடு வாழ முடியவில்லை.

நாட்கள் ஓடின. எனக்கு குழந்தை பிறந்தது. அம்மா வீட்டிற்குச் சென் றோம். இவர் என்னிடம் தினமும் இருமுறை போன் செய்து, “குழந் தை எப்படி உள்ளது என்று கட்டாயமாக எனக்குத் தெரியப்படுத்து…’ என்றார்.

நானோ, “இங்கு டவர் (கிராமம் என்பதால்) சரியாக கிடைக்காது. மாடிக்குச் சென்றால்தான் பேச முடியும். உங்களுக்கே நன்றாகத் தெரியும். இந்த சூழ்நிலையில் என்னால் எப்படி மாடி ஏற முடியும்…’ என்று சொன்னதுதான் தாமதம்… “என்கூட பேசப்பிடிக்கலைன்னு, சொ ல்ல வேண்டியதுதானே…’ என கத்தினார்.

என் அம்மாவோ, “நான் போன் பண்ணி பேசுறேன்…’ என்றார். அதற்கு அவர், “நான் உங்க பொண்ணுக்குத்தான் புருஷன்…’ என்று சொன்ன தை கேட்டு அதிர்ந்தோம். நானும் எவ்வளவோ பொறுமையாகப் பேசி னேன். என் மாமியார் வந்தார். என்ன பிரச்னை என்று கேட்டார். நடந்ததைச் சொன்னோம். அவரும்தான் இருந்தார்.

டக்கென்று, “எந்திரிடா… தலை தலையா அடிச்சிக்கிட்டேன். இந்தப் பொண்ணு வேணாம்ன்னு கேட்டியாடா…’ என்றார். எனக்கு கண்ணீர் ஆறாய் பெருகியது. “ச்சே என்னடா திருமண வாழ்க்கை…’ என்று எண்ணினேன்.

“தயவுசெய்து, உங்க ஒட்டும் வேணாம்; உறவும் வேணாம். உண்மை யில் நீ மனிதனாய் இருந்தால், உன் மனசாட்சியை தொட்டுக் கேட்டு ப்பார். என் கண் முன்னாடி நிற்காதே வெளியே போ…’ என்றேன். ஒரு மாதம் வரை யார் யார் மூலமோ, முயற்சி செய்து பார்த் தார். நான் பிடி கொடுக்கவில்லை.

அவரே நேரடியாக வந்து, தன் தவறுக்காக, என் குடும்பத்தார் அனை வரிடமும் மன்னிப்புக் கேட்டார். “பொண்டாட்டியை எப்போதும் என் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்…’ என்று என் அம்மா சொன்னதால்தான், இவ்வாறு நடந்து கொண்டேன். என்னை மன்னி த்து விடு…’ என்று என் காலில் விழுந்தார்.

அதன்பின் தான், என் மாமியாரின் திருவிளையாடல் தெரிந்தது. இரு ப்பினும், அவரை நான் வெறுக்கவில்லை. அதன்பின், எங்கள் வாழ்க் கையில் எந்த சண்டையும் இல்லை. மிகவும் சந்தோஷமாக இருக் கிறேன். அப்புறம் என்ன பிரச்னை என்று கேட்கிறீர்களா? இருக்கிற து அம்மா!

என் கணவருடன் செக்ஸ் வைத்துக் கொள்ளும்போது, எனக்கு திரு ப்தி கிடைக்கவில்லை. “இரவு நேரம் ஏன் தான் வருகிறதோ!’ என்று நினைக்க தோன்றுகிறது. அதற்காக, வேறு எந்த ஆண் மகனோடும், எனக்கு பழக்கமில்லை; ஏன் கனவிலும் நான் நினைத்ததில்லை.

என் எண்ணம் முழுவதும், பெண்கள்மீது தான் உள்ளது. இதை வெளி யே சொல்ல கேவலமாக உள்ளது. என் கணவரிடம் சொல்லலாம் என்றால், பயமாக உள்ளது. எங்காவது வெளியே சென்றால், அங்கு அழகான பெண்கள் யாரையாவது பார்த்தால், அவர்கள் நினைப்பாக வே உள்ளது.

இதற்குக் காரணம், என் கடந்த கால வாழ்க்கையா அல்லது என்னுள் ஆண்மைத் தன்மை ஏதேனும் வளர்கிறதா அல்லது என் கணவர் மீது, எனக்கு உண்டான வெறுப்பா?

எதுவென்று தெரியாமல் தவிக்கிறேன் அம்மா.

மனமாறிய கணவரோடும், அழகான குழந்தையோடும், பல்லாண்டு வாழ விரும்பு கிறேன். எனக்கு வழிகாட்டுங்கள் அம்மா.

— இப்படிக்கு, அன்பு மகள்.
அன்புள்ள மகளுக்கு—

உன் கடிதத்தை வைத்தே, உன் குணாதிசயத்தை அறிய முடிகிறது மகளே. நீ அழகாய் இல்லை என்ற தாழ்வு மனப்பான்மை, விவரம் தெரிந்த நாளிலிருந்தே, உன்னிடம் நிறைந்திருக்கிறது. அதே சமயம், தான் பணக்கார விவசாயக் குடும்பத்தை சேர்த்தவள், அதிகம் படித்த வள் என்ற உயர்வு மனப்பான்மையும், உன்னிடம் இருக்கிறது.

நீ ஒரு, “லெஸ்பியனாய்’ வளர, உன் குடும்பச் சூழலும், உன் இளமை பருவமும் காரணங்களாய் இருந்திருக்கின்றன. மேம்போக்காய் காதலித்த வனையே கைப்பிடித்ததில், உனக்கு பெரிய திருப்தி இல் லை. கணவனின் நடத்தையிலும், வார்த்தையிலும் தவறுகள் கண்டு பிடித்து மகிழ்கிறாய். உன், “லெஸ்பியன்’ ஆசைகள், கணவனின் தாம்பத்யத்தை செல்லாக் காசாய் பார்க்கின்றன.

உன் பிரச்னைக்கான தீர்வை, இனி பார்ப்போம் மகளே…

எனக்குத் தெரிந்து, பல, “லெஸ்பியன்’ பெண்கள், தாம்பத்ய வாழ்க் கைக்கு திரும்பி, தத்தம் கணவருடன் சிறப்பான வாழ்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

குடிப்பழக்கத்தை, ஆண்மகன் சிறிது சிறிதாய் மறப்பது போல, நீயும், “லெஸ்பியன்’ எண்ணத்தை சிறிது சிறிதாய் மழுங்கடி. லட்சக்கணக் கான பெண்களின் திருமண வாழ்க்கையை விட மேன்மையானது, உன் திருமண வாழ்க்கை. அதற்காக திருப்தி படு; சந்தோஷப்படு.

உன் கணவனை, 15 ஆண்டு காதலித்து மணந்திருக்கிறாய். திருமண த்திற்கு முன், நீங்களிருவரும் உறவினர்கள். நீயும், உன் கணவரும் சம வயதினர். அவனுக்காக நீ, எவ்வளவோ விட்டுக் கொடுக்கலாம். கணவன் மீதும், மகன் மீதும் நேசத்தை அதிகரி; “லெஸ்பியன்’ எண் ணம் காணாமல் போய் விடும்.

அழகான பெண்களை பார்த்தால், அவர்களின் அழகுக்கேற்ற கணவ னை, இறைவன் பரிசளிக்கட்டும் என, பிரார்த்தனைசெய். மனமாறி ய கணவரோடும், அழகான குழந்தையோடும், நீ பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் மகளே!

—என்றென்றும்  தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.
(தினமலர் வாரமலர் நாளிதழுக்கு நன்றி)
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
விதை2விருட்சம் வரவேற்கிறது.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

%d bloggers like this: