* நீங்கள் நகையை வாங்கும்முன், தங்கம் &, வெள்ளியின் அன்றை ய மதிப்பீடு எவ்வளவு அதாவது ஒரு கிராம் தங்கம் என்ன
விலை, ஒரு கிராம் வெள்ளி என்ன விலை என்பதை தெரிந்து கொண்டு வாங் க செல்லுங்கள்
* நகையை வாங்கும்முன் எந்த கடையில் நகை வாங்கப் போகி றோம் என்பதை தேர்வுசெய்தபின் கடைக்கு செல்லு ங்கள்.
*நீங்கள் நகைகளை நல்ல தரமான கடைகளில் வாங்குங்கள். தெருவோரம் உள்ள புதுப்புது கடைகளில் தரம் குறைந்த நகைகளை அவர்கள் விற்பவர் இதுபோன்ற கடைக ளில் வாங்கிவிட்டு பின் வருந்துவதில் பயனேதுமி ல்லை
* என்ன விலையில் நகை வாங்கப்போ கிறீர்கள் என்ற தெளிவான முடிவு எடுத் த பின் செல்லுங்கள்.
* நீங்கள் வாங்கப்போகும் நகை ஹால் மார்க் முத்திரையிட்டபோ ட்ட நகையா என்று கவனிக்க வேண்டும்
*உங்களிடமுள்ள பழைய நகைகளை விற்று புதிய நகைகளை வாங்குவதாக இருந்தால், நீங்கள் விற்கும் நகைகளில் கல் வைத்த நகைகள் ஏதாவது இருந்தால், அந்நகை ளி ல் உள்ள கற்களை நீக்கிவிட்டு அந்நகையை எடை போட்டு, அதற்கேற்ற விலையில் புதிய நகைகளை வாங்கலாம்.
* நீங்கள் வாங்கப்போகும் நகைக்கான செய்கூலி எவ்வளவு சதவீத ம், சேதாரம் எவ்வளவு சதவீதம் கணக்கிடப்பட்டுள்ளது என்பதில் தெரிந்து கொண்டு வாங்கலாம்.
* நீங்கள் வாங்கும் நகைக்கு சரியான ரசிது கொடுக்கப்படுகிறதா என்பதை ஒரு முறை க்கு பலமுறை சரிபார்த்துக்கொள்ளவே ண்டும்.
* நீங்கள் வாங்கும் நகையை நீங்களோ அல்லது உங்கள் அன்புக் குரியவர்கள் அணிவதற்காகவா அல்லது தங்கத்தின்மீது முதலீடு செய்ய இருக்கிறீர்கள் என்பதில் நீங்கள் முடிவெடுத்து அதற்கேற்ப நகையை வாங்க வேண்டும். உதாரணமா க தங்கத்தின் முதலீடு செய்வதாக இருந்தால் தங்க நாணயமாக வாங்குவதே சாலச்சிறந்தது
* நீங்கள் வாங்கும் நகைகள் எந்த வகையினைச் சேர்ந்த்து என்ற தகவலைகேட்டு தெரிந்து கொ ண்டு அத்தகவல், நீங்கள் வாங்கும் ரசீதில் குறிக் கப்பட்டுள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். கே.டி.எம். வகை நகைகள் தனியாகத் தயாரிக்க ப்படுபவை.
* நீங்கள் நகைகளை வாங்கிய அக்கணமே உங்களை கைபேசியில் அந்நகையைப் புகைப்படம் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்
* நகைகளை “இன்ஷுர்” செய்வது மிக மிக முக்கியமான ஒன்று. இன்ஷுர் என்பது ஏதாவது ஆபத்துக்கு உதவும் என்பதால், இது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகு ம்.
* நீங்கள் வாங்கிய நகைகளைச் சரியாகப் பராமரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
* ஒப்பனை மற்றும் அலங்காரங்களை முடித் துவிட்டு நகைகளை அணிந்து கொள்ளுங்க ள். நகைகளை அணிந்தபின் இவற்றைப்பூசிக் கொண்டால், நகைகள்
பொலிவிழந்து மங்கி ய நிலையில் தோற்ற மளிக்கும்.
* நீங்கள் அணிந்த நகைகளைக் கழற்றியபின் வெல்வெட் துணியி னை பயன்படுத்தி மூடி வைப்பது நல்லது. அப்படியே வெறும் டப்பாக் களில் போட்டு மூடி வைத்தால் கீறல்கள் விழுந்து பொலிவிழந்து காணப்படும்.
* உங்களிடம் உள்ள ஒவ்வொரு நகையையும் தனித்தனி டப்பாக்களி ல் வெல்வெட் துணியுடன் போட்டு மூடி வைத் தால், என்றென்றும் புத்தம் புதிதாக ஜொலிக்கு ம்.
* எப்போதும் அந்நகையை அணிந்து கொள்வ தாக இருந்தால் அந்நகையை வாரந்தோறும் சுத்தப்படுத்தி. மைல்டு ஷாம்புவில், மென்மை யான பிரஷ் ஷைத்தோய்த்து கவனமாக நகைகளைத் தேய்த்துக் கழுவினால், நகைகள் என்றென்றும் உங்களை பார்த்து புன்னகை பூ உதிர்த்துக்கொண்டே இருக்கும்.
(பல்வேறு இணையங்களில் இருந்து தொகுக்கப்பட்டது)