தமிழ், தெலுங்கு கன்னடம், மலையாளம் போன்ற தென்னிந்திய மொழி படங்களில் சாதனை படைத்துவரும் நடிகர்- நடிகைகளுக்கு ஐதராபாத்தில் ‘சந்தோஷம்’ என்ற உயரிய விருதுகள் வழங்கும் விழா நடைபெற்ற து. இந்நிகழ்ச்சியில் சிறந்த நடிகைக்கான விருது களை நடிகைகள் நயன் தாரா, திரிஷா, தமன்னா ஆகிய மூவரும் தட்டிச்சென் றனர்..
நயன்தாரா
நயன்தாரா தெலுங்கில் சீதை வேடத்தில் நடித்து, வெற்றிகரமாக ஓடிக் கொ ண்டிருக்கும் ‘ஸ்ரீராமராஜ்ஜியம்’ படம் தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு திரைக்கு வந்து பெரு வெற்றி யும் பெற்றது. இத்திரைப்படம் இந்தி மொழியிலும் டப் ஆகி வருகிற து. இதில் நடித்ததற்காக நயன்தாராவுக்கு ஏற்கனவே நிறைய விருது கள் கிடைத்தபோதிலும் தற்போது பிரபல விருதான ‘சந்தோஷம்’ விருதினையும் விழாவில் பங்கேற்ற நம்ம உலக நாயகன் கமல ஹாசனிடமிருந்து பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திரிஷா
இதுவரை 48 படங்களில் நடித்துள்ள திரிஷா தற்போது 3 படங்கள் கைவசம் வைத்துள்ளார். தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார் மேலும் 10 ஆண்டு கால மாக தொடர்ச்சியாக திரையுலகில் காலூன்றி சாதனை படைத்ததற்காக நடிகை திரிஷாவை கௌரவிக்கும் வகையில் இந்த விருது நம்ம உலக நாயகன் கமல்ஹாசன் கரங்களாலேயே வழங்கப்பட்டது.
தமன்னா
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ள தமன்னாவும் சிறந்த நடிகைக்கான விருதினை பெற்றுள்ளார்
விருதுகள் பெற்ற மூன்று நடிகைகளும் ஒருவரு க்கொருவர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித் தவாறு, போட்டோவுக்கும் மூவரும் சேர்ந்தே போஸ் கொடுத்தனர். சிறந்த நடிகருக்கான விரு தினை தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா பெற்றா ர்.