குழந்தையும் தெய்வமும் என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற அற்புதப் பாடல் இது. ஏ.வி.எம். தயாரிப்பில், கிருஷ்ணன் மற்றும் பஞ்சு இயக் கத்தில் 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதில் நம்ம தென்னாட்டு ஜேம்ஸ் பாண்டு ஜெய் சங்கர், நடிகை ஜமுனா, நாகேஷ், மேஜர் சுந்தர்ராஜன், வரலஷ்மி, குட்டி பத்மினி (இரு வேடங்களில்) மற்றும் பலர் நடித்துள்ளனர். மெல்லிசை மன் னர் விஸ்வநாதன் அவர்கள் இசைய மைத் துள்ளார்.
நான் நன்றி சொல்வேன் . . . என்று பாடலில் வரும் வரிகள் அனைத்தும் காதல் மற்றும் காமம் கலந்த வரிகளாக அதுவும் இலை மறை காயாக புகுத்தப்பட்டு இசையமைக்கப்பட்டிருக்கும்.
“ஒரு சித்திரத்தில் இதழ் செம்பவளம் அதன் புன்னகையும் சேர்ந்து மின்னிவிழும் செவ்விதழ் பூத்த அழகு நெஞ்சம் உருகட்டுமே! ஒவ் வொரு நாளும் தலைவன் மயங்கு ட்டுமே! பருகும் அந்த நேரத்தில் கண் மயங்கும் சுகம் பெருகும் அந்த வேளையில் பெண் மயங்கும்” என்ற வரிகள் வரும்.
இந்த வரிகளில் உள்ள ஒவ் வொரு வார்த்தைக்கும் என்ன பொருள் என்று பார்ப்போம்
ஒரு சித்திரத்தில் . .
பருவ மங்கையான அவள் தன து இளமை ததும்பும் அழகிய உடலை சித்திரமாக சித்திரித்து
இதழ் செம்பவளம் அதன் புன்னகையும்
அந்த இளமையுடன் தனது இதழ் சிந்தும் புன்னை கையை குறிப்பி ட்டும்
செவ்விதழ் பூத்த அழகு நெஞ்சம் உருகட்டுமே!
தனது இதழ் சிந்தும் புன்னகையை காணும் தனது காதலன் நெஞ்சம் உருகுவதாகவும்,
ஒவ்வொரு நாளும் தலைவன் மயங்கட்டுமே!
ஒவ்வொரு நாளும் தனது இதழ் தரும் சுகத்தை பருகிட துடிக்கும் தலைவன், அதில் மயங்கி தன்னை மறாவாமல் தன்னை சுற்றி வருவதாகவும்,
பருகும் அந்த நேரத்தில் கண் மயங்கும்
தனது காதலன் தனது இதழ்க ளை சுவைக்கும் காட்சியை காணும் அவளது கண்கள், நாணத்தால் உருவாகும் மயக்க த்தால் மூடிக் கொள்வதாகவும்,
சுகம் பெருகும் அந்த வேளை யில் பெண் மயங்கும்
தலைவனின் இதழ்கள், தனது இதழ்களை சுவைத்தும், அவனது கரங்கள் தனது இளமை பொங்கும் உடலில் மன்மத லீலைகள் புரி யும்போது, ஒரு வித சுகம் தனது உடல் முழுவதும் பரவவேண்டும் என்று தனது எண்ணத்தை சொல்லி, எவ்வளவு வசதியுடன் வாழ் ந்திருந்தாலும் இதுபோன்ற ஒரு உணர்வு தனக்கு ஏற்பட்டதில்லை என்றே முடித்திருப்பார்.
விதை2விருட்சம்
விதை2விருட்சம்
விதை2விருட்சம்