தற்போது தமிழ் சினிமாவில் ஒன்றுக்கும் மேற்பட்ட கதாநாயகிகள் நடிப்பது வாடிக்கையாகி விட்டது. அந்த வரிசையில் விக்ரம் நடிப்பி ல் உருவாகியுள்ள தாண்டவம் படத்தில் அனுஷ்கா, எமிஜாக் ஸன், லட்சுமி ராய் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் 2 கதாநாயகிகள் நடித்த போதும் ‘தாண்டவம்’ படத்தில் நடிப்பது ஏன்? என்பது குறித்து லட்சுமி ராய் கூறும் போது, எனக்கு ‘தாண்டவம்’ படத்தின் திரைக்கதை மிகவும் பிடித்திருந்தது.
நல்ல படம் எதுவாக இருந்தாலும் அதில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். இதில் பிளஸ், மைனஸ் பார்ப்பதில்லை. என்னால் முடிந்த அளவு உழைக்கிறேன். அதன்பி றகு என்ன வருகிறேதா அதை ஏற்றுக் கொள்கிறேன்.
பணம் சம்பாதிக்கவும், பேர் வாங்கவும் தான் சினிமாவுக்கு வந்தேன். நண்பர்க ளை உருவாக்கிக்கொள்வதற்காக நான் திரையுலகுக்கு வரவில்லை. திரையுல கில் எல்லா நடிகைகளையும் எனக்கு தெரியும். நட்பு என்பது நெருங்கி பழகும் போதுதான் உருவாகிறது. இதுவரை நான் யாரையும் காதலிக்கவில்லை. காதல் செய்வதற்கு நேரமும் இல்லை. இவ்வாறு அவர்கூறினார். (malaimalar)