Wednesday, April 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ம‌ணம் வீசும் மணவாழ்க்கைக்கு . . .

திருமணத்திற்கு முன்பு அடிக்கடி கூறும் ஐ லவ் யூ” என்ற வார்த்தை திருமணத்திற்குப்பின் காணாமல் போய் விடக்கூடாது. வார்த்தை யால் கூறுவதைவிட உ ண்மையா ன அன்பை செயல்கள்மூலம் புரிய வைக்கவேண்டும். உங்களின் அன்பை முழுமையாக உணர வை க்கவும் முயற்சிக்கவேண்டும். திருமணத்திற்குப் பின்னரும் தம்ப தியரிடையே காதல் இருந்தால் மட்டுமே மண வாழ்க்கை மகிழ்ச்சிக ரமனதாக இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள். ம‌ணம் வீசும் மண வாழ்க்கைக்கு அவர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.

கணவரிடம் ஆயிரம் முறை “ஐ லவ் யூ” சொல்லுவதை விட அதி காலையில்கொடுக்கும் முத்தம் அன்பை உணர்த்திவிடும். ஆழ மான பார்வை. அன்பான ஸ்பரிச ம் என உங்களின் காதலை அவ் வப்போது உணர்த்துங்கள். அன் பான தொடுகையினால் உங்க ளின் இதயத்தை புரிய வைக்க லாம்.

காலையில் குளித்து, சட்டை போடும் போது நீங்கள் சென்று அந்த பட்டனை போடலாம். இதனால் ரொமான்ஸ் அதிகரிக்கும். சாப் பிட வரும்போது அவர்களுக்கு பிடித்த உணவை செய்து வைத்து அவர்களை மகிழ்விப்பதன்மூலம் அன்பை வெளிப்படுத்தலாம். மே லும் அலுவலகம் செல்லும்போது பையை எடுத்துக்கொடுக்கும் சா க்கில் சின்னதாய் முத்தமிட்டு அனுப்பலா ம். அவர்களுக்கு மதிய உணவு கொடுத் து அனுப்பும் டிபன் பாக்சில், காகிதத்தில் இத யம் வரைந்து அதில் ஐ.லவ்.யூ எழுதி அனு ப்பலாம்.

கணவர் வேலைக்கோ, வெளியூருக்கோ சென்றிருந்தால், ஒரு நாளைக்கு இருமு றை போன்செய்து விசாரித்து கொண்டிரு ப்பதன் மூலம் நீங்கள் அவர்களையே நினைத்துக் கொண்டிருப்பதாக உணர்த்த லாம். மேலும் அப்படி பேசும்போது நீங்கள் எந்த அளவிற்கு அவரை மிஸ் செய்கிறீர் கள் என்பதை கொஞ்சலாக தெரிவியுங்க ள். அதற்காக அடிக்கடி போன்செய்து அவர் களை கோபப்படுத்தி விடாதீ ர்கள்.

மனதிற்குப் பிடித்த உணவு டென்சனை குறைக்கும் எனவே அலுவ லகப் பணியினால் டென்சனாக வரும்போது, அவர்களை மகிழ்விக் கு ம் வகையில் அவர்களுக்கு மிகவும் பிடித்த டிஷ் செய்து தரலாம். வரும்போதே ஏதாவ து குறைசொல்லி டென்ச னை அதிகரிக்காமல் அன்பா ன செயல்களால் அரவணைப் பாய் செயல்பட்டு டென்சனை குறைக்கலாம். இவ்வாறு செ ய்வதன் மூலம் உங்கள வரின் டென்சன் ஓடியே போய் விடு ம். அப்புறம் என் உன் விழி கண்டு நான் என்னை மறந்தேன் என்று கவிதை பாட ஆரம்பித்துவிடுவார்.

இரவு நேரத்தில் ரொமான்ஸ் மூடினை அதிகரிக்க கிச்சனில் பழங்க ளால், அதுவும் அவர்களுக்கு பிடித்த பழங்களா ல் “ஐ லவ் யூ” என்று அடுக்கி வைத்து விடுங்க ள். பின் அவர்களை கூப்பிட்டு கிச்சனில் இருந் து ஏதேனும் எடுத்து வரச்சொல்லி அனுப்பி, அவர்கள் பார்க்குமாறு செய்து பாருங்கள், அப் போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்கா து.

இருவரும் முதலில் பார்த்த அந்நாளை நினை வில் வைத்து, அந்த நாளன்று அவர்களை முத லில் பார்த்தபோது என்னென்ன சாப்பிட்டீர்க ளோ அதை சமைத்து அவர்களுக்கு அந்நாளை நினைவுபடுத் தலாம். இல்லாவிட்டால் அந்நா ளன்று இருவரும்சேர்ந்து எங்கு சென்றீர்களோ அந்த இடத்திற்கு அழைத்து சென்று நினைவு கூறலாம். இதுபோன்ற
செயல்களால் குடும்ப வாழ்வில் விரிசல் ஏற்பட வழியே இல்லை என் கின்றனர் நிபுணர்கள்.

{ { இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம் } } }
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.
உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்.

One Comment

Leave a Reply