Tuesday, June 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நெருக்கடி நிலை பிரகடனம் – தமிழக அரசு டிஸ்மிஸ்

 

இந்திரா காந்தி அவர்கள் 1975, ஜுலை 1_ந்தேதி நெருக்கடி நிலை யை அமுலுக்கு வந்தபின் தன்னுடைய 20 அம்ச திட்டத் தை அறிவித் தார். விலைவாசியைக் குறைப்பது, நில உச்சவரம் பைக் கொண்டு வருவது, ஏழைகளுக்கு வீட்டுமனை வழங்குவது, குறைந்த வரு மானம் உள்ள வர்களுக்கு வருமான வரிச்சலுகை, பாட ப்புத்தகங் களை குறைந்த விலையில் வழங்குவது முத லிய வை 20 அம்ச திட்டத்தின் முக்கிய அம்சங்களாகும். நெருக்கடி நிலைக்கு ஒப்புதல் அளிக்கும் தீர்மானத் தின்மீது பாராளுமன்றத்தில் ஜுலை 22_ந்தேதி ஓட்டெடுப் பு நடந்தது. நெருக்கடி நிலைக்கு ஆதரவாக 336 ஓட்டுகளும், எதி ராக 59 ஓட்டுகளும் பதிவாயின. “நெருக்கடி நிலைமை”யின் போது சில நன்மை களும், பல தீமைகளும் நடந்தன.

அதிகாரிகள், ஊழியர்கள் சரியான நேரத்துக்கு வேலைக்கு வந்தனர். ஒழுங்காக வேலை பார்த்தனர். வேலை நிறுத்தங்கள், முழு அடைப்புகள் இல் லை. கள்ள மார்க்கெட் ஒழிந்தது. அதே சமயத்தில், சஞ்சய் காந்தி அதிகாரத் தைக் கையில் எடுத்துக் கொண்டு, தன் விருப்பப்படி எல்லாம் உத்தரவு பிறப்பித் தார். பிறப்பு விகிதத்தைக் குறைப்பதற்கா க, வட இந்தியா வில் கட்டாயமாக பலர் கருத்தடை செய்யப்பட்டனர்.

நெருக்கடி நிலை அமுலுக்கு வந்த ஐந்து மாத காலத் திற்குள் 37 லட்சம் பேர் கருத் தடை செய்யப்பட்டனர். கருத்தடைக்கு ஆள் பிடிக் கும்படி ஆசிரியர்கள் கட்டாய ப்படுத்தப்பட்டனர். (நெருக்கடி நிலை யின்போது நடந்த அத்து மீறல் கள் பற்றி அப்போது செய்தி எதுவும் வெளியாகவில்லை. காரணம், அப்போது பத்திரிகைத் தணிக்கை அமுலில் இருந்ததால் அச் செய்தி களை வெளியிட அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். நெருக்கடி நிலை ரத்தான பிறகு இதுபற்றிய செய்தி கள் வெளியாயின). நெருக் கடி நிலையை காமராஜர் எதிர்த்தார்.

திருத்தணியில் நடந்த பொதுக் கூட்டத்தில் நெருக்கடி நிலையை கண்டித்து பகிரங்கமாகப்பேசினா ர். “நெருக்கடி நிலை” அமுலாகி 4 மாதத்தில் (1975 அக்டோபர் 2) காம ராஜர் திடீரென்று காலமானா ர். அப்போது இந்திரா காந்தி விமானத்தில் வந்து காமராஜருக்கு இறு தி அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் கண் கலங்கினார்.

இதற்கிடையே இந்திரா காந்தி தேர்தல் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு பெஞ்ச் தனது இறுதித்தீர்ப்பை வழங் கியது. “ரேபரேலி தொகுதியில் இந் திரா காந்தி வெற்றி பெற்றது செல்லு ம்” என்று 1975 டிசம்பர் 19_ ந்தேதி தீர்ப்பு கூறப்பட்டது. பாராளுமன்றத்தி ன் பதவிக்காலம் 1976 மார்ச்சில் முடிவடைவதாக இருந்தது. பாராளு மன்றத்தின் ஆயுள் காலத்தை நீடித்து, தேர்தலை தள்ளிவைக்க இந்திரா விரும்பினார்.

“தேர்தலை தள்ளி வைக்க வே ண்டாம். இப்போதே நடத்துவது நல்ல து” என்று சில மந்திரிகள் யோசனை கூறினார்கள். அதை இந்திரா ஏற்கவில்லை. “நெருக்கடி நிலை காலவரம்பு இன்றி நீடிக்க வேண் டும்” என்று சஞ்சய் காந்தி வற்புறுத்தினார். அதை ஏற்று பாராளுமன் ற தேர்தலை இந்திரா தள்ளிவைத்தார். அதற்கான தீர்மானம் பாராளு மன்றத்தில் நிறைவேறியது.

நெருக்கடி நிலையின்போது, தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி நடந்து வந்தது. நெருக்கடி நிலையை முதல் அமைச்சர் கருணாநிதி எதிர்த்தார். இதன் காரணமாக கருணாநிதி தலைமையி லான தி.மு.க. அரசு 1976 ஜனவரி மாதம் 31_ந்தேதி டிஸ்மிஸ் செய்யப்பட்டது. மு. க. ஸ்டாலின் உள்பட தி.மு.க. பிரமுகர் கள் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தேர்தல் நடத்த முடி வு நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப் பட்டு 1 ஆண்டு கழிந்தது.

அரசியல் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வந்த இந்திரா காந்தி பாராளு மன்றத்தைக் கலைத்துவிட்டுத் தேர்தல் நடத்தினால் தனக்கு மெஜாரிட்டி கிடைக்கும் என்று நம்பினார். 1977 ஜனவரி 18 ந்தேதி ரேடியோவில் பேசுகையில் “பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படும். சிறையில் இருக்கும் தலைவ ர்கள் படிப்படியாக விடுதலை செய்யப்படுவார்கள்” என்று அறிவித் தார்.

இந்திரா காந்தி கூறியபடி பாராளு மன்றத்தைக் கலைத்துவிட்டு, தேர் தல் நடத்துவதற்கான உத்தரவை, மறுநாள் ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமது பிறப்பித்தார்.

இந்திரா வாழ்க்கைப்பாதை

இந்திரா காந்தியின் கணவர் பெரோஸ் காந்தி, பாராளுமன்றத்தில் ஆணித்தரமாகப் பேசி தன் திறமையை நிரூபித்து வந்தார். 1958_ம் ஆண்டு பிப்ரவரியில் ஒரு ஊழல் குற்றச்சாட்டைக் கூறி பரபரப்பை உண்டாக்கினார். ஹரிதாஸ்மு ந்திரா என்பவர், ஒரு தொழில் அதிபர். அவருக்கு பண நெருக் கடி ஏற்பட்டது. இதன் காரண மாக, அவர் அன்றைய நிதி மந்திரி டி.டி.கிருஷ்ணமாச்சாரி, நிதி இலாகா தலைமை செய லாளர் எச்.எம்.பட்டேல் ஆகி யோரை அணுகி தன்னுடைய கம்பெனியின் ரூ.1 கோடி மதிப்பு ள்ள பங்குகளை ஆயுள் இன்சூர ன்ஸ் நிறுவனம் வாங்கிக் கொ ள்ள வேண்டும் என்றும், இதன் மூலம் நெரு க்கடியிலிருந்து தன் கம்பெனியை காப்பாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அதன்படி பங்குகள் வாங்கப்பட்டன.

“முந்திராவுக்கும், நிதி அமைச்ச கத்துக்கும் இடையே முறைகே டாக பேரம் நடந்துள்ளது. இதன் காரணமாக பங்கு மார்க்கெட்டில் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது” என்று குற்றம் சாட்டினார் பெரோஸ் காந்தி. “முந்திரா ஊழல்” என்று பரபரப்பாக பத்திரிகைகள் எழுதின. இதன் காரணமாக, நேரு ஒரு விசாரணை கமிஷனை அமைத் தார். “பங்கு கள் பரிமா ற்றம் நடந்ததற்கு நிதி மந்திரிதான் பொறுப் பு” என்று கமி ஷன் தீர் ப்பு கூறியது.

“இந்த விஷயத்தில் டி.டி.கிருஷ்ணமாச்சாரி நிரபராதி. அவர் தவறு ஏதும் செய்யவில்லை” என்று நேரு கருதிய போதிலும், நிதி மந்திரி பதவியை டி.டி.கிருஷ்ணமாச்சாரி ராஜினாமா செய்ய வேண்டும் என் று எதிர்க்கட்சிகள் வற்புறுத்தின. அதனால் கிருஷ்ணமாச்சாரி ராஜி னாமா செய்தார். புதிய நிதி மந்திரியாக மொரார்ஜி தேசாய் பதவி ஏற் றார். பெரோஸ் காந்தியின் பெயர் இந்தியா முழுவதும் பிரபலம் ஆயிற்று.

{ { இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம் } } }
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.
உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்.

 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: