சென்ற முறை நமது விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர விம ர்சனம் என்ற வகையினத்தில் என்னை கவர்ந்த பேசாமல் பேசிய விளம்பரம் என்ற தலைப்பில் நான் எழுதிய விமர்சனத்திற்கு பல் வேறு தரப்பினரிடமிருந்தும், மின்னஞ்சல் மூலமாகவும், கருத்துக்க ளின் வாயிலாகவும், கைபேசி மூலமாக, நேரடியாகவும் தெரிவித்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்க ளையும் கண்டு நான் மெய் சிலிர்த்து ப்போனேன். எனது விமர்சனத்தை பாராட்டிய அன்புள்ளங்களுக்கும், எனது விமர்சனத்தை வாழ்த்திய கரங்களுக் கும் எனது நன்றியினை விதை 2விருட்சம் சார்பாக தெரிவி த்து க்கொள்கிறேன்.
இதனடுத்த படியாக இன்னொரு விளம்பரமும் என்னை கவர்ந்துள் ளது. அதை பற்றிய எனது விமர்ச னத்தை விதை2விருட்சம் இணை யம் மூலமாக உங்களோடு பகிர்ந் து கொள்வதில் நான் பெருமகிழ்ச் சி அடைகிறேன்.
விளம்பரத்தில் பதிவான காட்சிகள்
மழலை மொழி பேசும் சிறுமி மிகுந்த சந்தோஷத்துடனும், உற்சாகத் துடனும் சிரித்த முகத்தோடு, தனது இரு பிஞ்சு கைகளை ஒருசேர குவித்து மூடிக்கொண்டே வெளியில் இருந்து உள்ளோ ஓடி வருவா ள்.
அவளை தடுத்து என்ன இது என்று அவளது தாய் கேட்க, அதுவா இது வெயில், என்று பதில் சொல்வா ள்.
வெயிலா? வா எங்கேயாவாது ஜாக் கிரதையாக வைப்போமா! என்பாள். அதற்கு அச்சிறுமி மிகு ந்த மகிழ்ச்சி யுடன் சரி என்று தலை அசைப்பாள். தாய் ஒரு சிறு பெட்டியைக் கொண்டு வந்து அச்சிறுமியிடம் காண்பித்து, இப்பெட்டியில் வெயிலை வைப்போ மா! என்று கூறிக்கொண்டே அப்பெட் டியை மெலிதாக திறக்க அதற்கு சிறுமியும் இசைந்து, அப்பெட்டியில் தனது பிஞ்சுக் கரங்களி ல் இருக்கும் வெயிலை அடைப்பாள்.
பின் தாய் அப்பெட்டியை திறந்து காண்பிப்பாள் அதில் பியர்ஸ் குளி யல் சோப் இருக்கும். உடனே அச்சிறுமியின் முகம் வெயிலை காண வில்லை என்ற வருத்தத்தில் அவளது பிஞ்சு முகம் வாடிவிடும். சட் டென அத்தாய் அந்த பியர்ஸ் குளியல் சோப்பினை வெயில் வரும் திசைநோக்கி காண்பிக்க அவ்வொளி அந்த சோப்பினை ஊடுருவி குழந்தை முகத்தில் பிரதிபலிக் கும்.
இதனை கண்ட அச்சிறுமி மிகுந் த உற்சாகமடைவாள். பின் தன து தாயை கட்டித்தழுவி, தனது தாயின் முகத்தோடு முகம் வை த்து உரசுவது போலும் பின் அத் தாய் அச்சிறுமியை குளிப்பாட்டு கிறாள். அச்சிறுமிக்கு அத்தாய் சோப்பு தேய்க்கும் போதும் அந்த சூரியனின் கதிர் அச்சோப்பில் ஊடுருவி மின்னும். பின் பியர்ஸ் குளி யல் சோப்பின் புகைப்படம் இடம்பெறும், பின்னணியில் இருந்து, ஒரு பாடலும் அதன் முடிவில் பரிசுத்தமான உறவு, பரிசுத்தமான சரு மம், பரிசுத்த மான பியர்ஸ் என்ற வசனமும் இடம்பெற்றிருக்கும்.
இதோ அந்த விளம்பரம் தாங்கிய வீடியோ உங்கள் பார்வைக்கு
விமர்சனம்
மழலை மொழி பேசும் சிறுமி மிகுந்த சந்தோஷத்துடனும், உற்சாகத் துடனும் சிரித்த முகத்தோடு, தனது இரு பிஞ்சு கைகளை ஒருசேர குவித்து மூடிக்கொண்டே வெளியில் இருந்து உள்ளோ ஓடிவரு வாள். வெயிலா வா எங்கேயாவது ஜாக்கிரதையாக வைப்போமா! என்று தாய் கூறுவதாக இருக்கு ம்.
அச்சிறுமியின் தாய், சிறுமி, வெ யிலை கொண்டு வரும்போது என்னது வெயிலைப்போய் கை ல கொண்டு வரமுடியுமா? என் ன இது? ச்சீ ச்சீ, போ போ என்று ஏளனமாக நகைத்திருந்தால், அங்கே அச்சிறுமியின் மகிழ்ச்சி பறிபோகி இருக்கும். உற்சாகம் உருக்குலைந்திருக்கும் அவளது மலரந்த முகமும் வாடி யிருக்கும். அல்லவா?
அப்படி செய்யாமல், இந்த இடத்தில் தாய்மைக்கே உரிய பண்போடு அத் தாயும், ஒரு குழந்தையாகவே மாறி, வெயிலை ஜாக்கிரதையாக வைப்போமா என்றுகூறி ஒரு சிறு பெட்டியை மெலிதாக திறந்தவு டன் அச்சிறுமியும் தான் கொண்டு வந்த வெயிலை அடைத்தவுடன் அச்சிறுமிக்கு ஏற்படும் சந்தோஷ மும், அப்பெட்டியை அத்தாய் திற ந்தவுடன்தான் கொண்டு வந்து அடைத்த வெயில் இல்லாமல் அங்கே ஏதோ ஒரு குளியல் சோப் இருப்பதை கண்டு மனம் வருந்தி முகம் வாடிப்போவதும், பின் தாய் வெயில் வரும் திசைநோக்கி அச் சோப்பினை காண்பிக்கும் போது, அதில் ஊடுருவும் ஒளியைக் கண்டு அச்சிறுமி மகிழ்ந்து புன்னகை சிந்துவதும்
ஒரு தாய் தனது குழந்தையிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை ஒவ்வொரு பெண்ணுக்கும் உணர்த்துகிறது.
தனது குழந்தையின் மகிழ்ச்சி சிறிதளவு கூட குறையக்கூடாது என்ப தில் அத்தாய்க்கு எவ்வளவு அக் கறை எடுத்துக் கொள்கிறாள் என்பதை இந்த விளம்பரம் ஒரு சிறந்த உதாரணம் என்றே சொ ல்லலாம்.
மேலும் சூரிய ஒளியினால் (வெ யிலால்) நமக்கு உண்டாகும் நன்மைகள் என்ன என்ன என்ற அறிவியலும் ரீதியாக சன் பாத் எனும் சூரியக் குளியலாலும் ஆன்மீகமும் ரீதியாக சூரிய நமஸ்காரத்தாலும் நாம் உணர்ந்துள் ளோம்.
தாய் சேய் உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதை உணர்த்தியதோ டு, சூரிய ஒளி (வெயில்) நமது உடலுக்கு நன்மை ஏற்படுத்தும் என்ற அறிவையும் குழந்தைகள் உணர தூண்டுகோளாய் அமைந்துள்ளது.
சிறுமி மகிழும்போதும் சரி, அல்ல து வெயிலை காணாது வருந்தும் போதும் நம் எல்லோரது மனங்களி லும் சிறுமியின் உணர்ச்சிகளே பிரதிபலிப்பதாக இருப்பது இதன் தனி ச்சிறப்பே!
எல்லாவற்றுக்கும் மேலாக
தான் கொண்டு வந்த அந்த வெயில் அந்த பியர்ஸ் குளியல் சோப்பின் உள்ளே இருக்கிறது என்று ஆழமா க நம்பும் அச்சிறுமி, பியர்ஸ் குளியல் சோப்பினை தனது தாய் வாங்க மறந்தாலும், இல்லை எனக்கு அந் த பியர்ஸ் குளியல் சோப்தான் வேண்டும். என்று கேட்டு பெறும். இதன் வாயிலாகவும் பியர்ஸ் குளி யல் சோப் விற்பனையில் சற்று முன்னேற்றம் காணும். என்னே அரு மையான சிந்தனை!
இந்த விளம்பரத்தில் தாயாக நடித்திருக்கும் நடிகை உண்மையில் தாய்மைக்குரிய முகபாவனை மற்றும் உணர்ச்சிகளோடு நடித்திரு க்கிறார். வெயிலை தன்னுடன் கொண்டு வரும் சிறுமியும் தன் பங்கு க்கு சிறப்பாகவே நடித்திருக்கிறார். இவர்களுக்கு விதை2விருட்சம் சார்பாக ஒரு சல்யூட்!
இந்த விளம்பரத்தின் இயக்குநர், தயாரிப்பாளர், நட்சத்திரங்கள் மற் றும் இதர தொழில் நுட்பக்கலைஞர்களின் பெயர்கள் உங்களில் யாருக்காவது தெரிந்திருந்தால், உங்களது கருத்துக்களின் வாயிலா க தெரியப்டுத்துங்கள். இதுபோன்ற விளம்பரங்கள் பலவற்றுக்கு வித்திட உதவும்.
விதை2விருட்சம்
விதை2விருட்சம்
விதை2விருட்சம்
LIC housing loan ad உள்ளது..
அற்புதமான விளம்பரம் அது..
You tupe ல் தேடி பார்த்தேன் .. Hindhi version tan கிடைக்கிறது.. Tamil version link
கிடைக்குமா..