* மனிதன் மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்னும் மூவாசைகளால் கட்டுண்டுகி டக்கிறான். இதிலிருந்து விடு பட முயற்சிக்க வேண்டும்.
*மூவாசைகளும் நம்மை மீண் டும் மீண்டும் பிறவிச்சுழ லில் தள்ளி விடுகின்றன. கரையேற நாம் தான் முயற்சி யில் இறங்கவேண்டும்.
* வியாதி தீரவேண்டுமானால் மருந்தோடு பத்தியமும் மிக முக்கியம். அதுபோல தெய்வீக வாழ்வி ல் ஈடுபட நினைப்பவன் ஒழுக்கத்தை க் கடைபிடிக்க வேண்டும்.
* எவன் புகழை விரும்பாமல் தன் பணியைச் செய்து வருகிறானோ அவனுடைய புகழை மூவுலகிற் கும் கடவுள் தெரியப்படுத்துவார்.
*வயது தளர்ந்தகாலத்தில் மனிதன் படும் துன்பத்தை எண்ணி இளை ஞர்கள் தன்னைத்தானே திருத்திக் கொள்ள முயலவேண்டும்.
* தியானம், பக்தி, தர்மத்தில் ஈடுபா டு, ஒழுக்கம் இவையெல்லாம் நம் மனதில் இருக்குமானால் இருக்கு ம் இடமே புனிதமாகிவிடும்.
* பணம் ஒருவரிடம் சேரச் சேர சாப்பாடு, தூக்கம், ஒழுக்கம், பக்தி இவையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து விடும்.
– dinamalar