Thursday, February 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்களுக்குன்னு ஒரு சின்ன‍ வீடு இருக்கா?

நான் ஒன்றும் தப்பா கேக்கலீங்கோவ், உங்களுக்கு சொந்தமாக ஒரு சின்ன‍தாய் வீடு இருக்கான்னு கேட்டேன்.

ந்த வீட்டின் உள் அலங்கா ரம் எப்ப‍டி செய்யுறது? அனை வரின் மனதிலும் எழும் கேள் வி. சின்ன இடத்தைக்கூட சிற ப்பாக அழகுபடுத்தலாம் என் கின்றனர் வீட்டு உள் அலங் கார நிபுணர்கள், இதோ குறிப் புக்களை படித்து பயனுறுங்க ள்.

சின்ன இடத்திற்கேற்ப நாற்காலிகள் மேஜைகளை தேர்வு செய்து போடுவது இடத்தை பெரிதாக்கி காட்டும். அடர்த்தியான நிறங்களில் பர்னிச்சர்களை தேர்வு செய்யவும். முடிந்தவரை மடக்கி வைக்கும் பொருட்களாக இருந்தால் நல்லது.

தொங்கும் கண்ணாடிகள்

கண்ணாடி இல்லாத வீட்டினை பார்க்க முடியாது அழகான தொங்கும் கண்ணா டிகளை சுவர்களில் அழகாக பொருத்தி னால் சிறிய இடம் கூட மிகப்பெரிய இடம் போல தோற்றமளிக்கும்.

வண்ணத்திற்கேற்ற வால்பேப்பர்

வீட்டுச்சுவர்களுக்கு ஏற்ற வால் பேப்பர் ஒட்டுவது வீட்டின் நீள, அகலத்தை அதிகரிக்கும். அதே போல் இதமான நிறங்களான ப்ளூ, வயலட், பச்சை போன்ற வர்ணங்களை சுவர்களுக்கு அடிப்பதும் வீட்டை பெரிதாக்கி காட்டும்.

சீலிங்கும், சுவரும் தொட்டுக் கொள்ளும் இடத்தில் அழகான பார்டர் போல வால்பேப்பரில் ஒட்டுவது அறையின் அகலத் தை அதிகமாக்கி காட்டும்.

சிறிய அறையில் ஜன்னல் இல் லாமல் இருக்கிறதா? கவலை வேண்டாம். ஓவியங்களை சுவர்களில் தொங்கவிட வீடு அழகாவ தோடு ஜன்னல் இல்லாத குறையை நீக்கும்.

உயரமான அலமாரி அவசியம்

சிறிய இடம்தான் இருக்கிறதா ஒரே அலமாரி யில் அனைத்தையும் அடுக்குவதுபோல உள் ள வசதியான அலமாரியை தேர்தெடுப்பது நல்லது.

புத்தகங்களை அடுக்க ஏற்ற உயரமான அல மாரிகளை தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும். அவை பழமையை பறை சாற்றும் வகையில் இருப்பது நலம். அதே சமயம் கண்களை உறுத்தாத வகையிலும் இருக்கவேண்டும்.

{ { இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம் } } }
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.
உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்.

Leave a Reply

%d bloggers like this: