Monday, June 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தி.மு.க. – அ.தி.மு.க. இணைப்பிற்கு தடை – பின்னணியில் நடந்தது என்ன? (அரியப் புகைப்படங்களுடன்)

ஒரிசா மாநில முன்னாள் முதல்வர் பிஜூ பட்நாயக், 1979-ல் சென் னை வந்து தி.மு.க., அ.தி.மு. க ஆகிய இரண்டு கட்சிகளை யும் இணைக்க முயற்சி மேற் கொண்டார். இதற்காக என் னையும், எம்.ஜி.ஆரையும் சந்தித்துப் பேசவைத்தார். இணைப்பு முயற்சியை வர வேற்ற எம்.ஜி.ஆர்., அதில் ஆர்வமும் காட்டினார். இரு கட்சிகளும் இணைந்தபிறகு ,‘கட்சியின் தலைவராக நான் இருக்கிறேன். முதல்வர் பத வியில் நீங்களே தொடருங் கள். கட்சிக்கொடியில் அண் ணா படம் இருப்பதில் எனக்கு ஆட்சேபணையில்லை என்று நான் சொன்னவற்றை ஏற்றுக் கொண்ட எம்.ஜி.ஆர்., ஓரிரு நாளில் எங்கள் கட்சியின் செயற் குழு வைக் கூட்டி தீர்மானம் போடுகிறேன்’ என்று சொல்லிவிட்டுப் போ னார். ஆனால் அடுத்த நாள், ‘இணைப்பு பற்றி வரும் செய்திகளை நம்பாதீ ர்கள்’ என்று சொன்னார் எம்.ஜி. ஆர். என்று சமீபத்தில் கலைஞர் பேசியிருந்தார்.
இரு கட்சிகளும் இணையாமல் போனதற்கான பின்னணி என்ன என்று இணையத்தில் தேடியதில் பண்ரூட்டி ராமச்சந்திரனின் ஒரு பேட்டி கண்ணில் சிக்கியது. அத ன் விபரம் இதுதான்…..
1980 நாடாளுமன்றத் தேர்தலுக் கு முன்பாக ஜனதா அமைச்சரவையில் அமைச்சராக இருந்த பிஜூ பட்நாயக், தி.மு.க. – அ.தி.மு.க. ஆகி ய இரண்டு கட்சிக ளை ஒன்று சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டார். அதற்காக சென்னை வந்த அவர், சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில் எங்களைச் சந்தித்தார். எம்.ஜி.ஆர்., நாவலர், நான் ஆகிய மூன்று பேரும் அ.தி.மு.க. சார்பிலு ம் தி.மு.க. சார்பில் கலைஞரும், முரசொலி மாறனும் அப்பேச்சு வார்த்தையில் கலந்து கொண் டோம். இரண்டு கட்சிகளும் ஒன் றாக இணைந்தபிறகு தலைவராக கலைஞரும், முதல்வராக எம்.ஜி. ஆரும் தொடரலாம் என்று அப்போ து பேசப்பட்டது. காலையில் இந் தச் சந்திப்பு நடந்து முடிந்த பின்பு, நானும்(பன்ரூட்டி ராமச் சந்திரன்), எம்.ஜி.ஆரும் புறப்பட்டு, தி.நகர் ஆற்காடு தெருவில் உள்ள எம்.ஜி. ஆரின் அலுவலகத்திற்குச் சாப்பிடச் சென்றோம்.
காரில் வரும்போதே, எம்.ஜி.ஆர். மன்றத் தலைவராக இருந்த முசிறி ப் பித்தன், தி.மு.க.வினரால் தாக் கப்பட்டதாக எம்.ஜி.ஆருக்குத் தகவல் வந்தது. என்னிடமும் அதைச் சொன்னார். ‘மேல் மட்ட த்தில் தலைவர்கள் ஒன்று சேர் வது எளிது. ஆனால், தமிழ் நாட் டில் உள்ள பல்லாயிரக்கணக் கான சிற்றூர்களில், பல லட்சம் தொண்டர்கள், தி.மு.க.வினரின் அராஜகத்தால் பாதிக்கப்பட்டு, பல தியாகங்களைச் செய்து, அ. தி.மு.க.வை கட்டிக் காத்து வருகிறார்கள். இணைப்-புக்குப் பிறகு அந்தத் தொண்டர்களின் கதி என்னாவது?’ என்று எம்.ஜி.ஆர். அப்போ து சிந்தித்தார்.
இந்த நிலையில் இணைப்பு நடந்தால் தொண்டர்கள் சிந்திய ரத்தமு ம், அனுபவித்த சிறைவாசமும், அவர்கள் சந்தித்துவரும் வழக்கு களும் தன்னை மன்னிக் காது என்பதை உணர்ந்தார் எம். ஜி.ஆர் . ஆகவே ஆற்காடு தெருவில் உள்ள அலுவலகத்திற்கு வந்து சேரும் முன்பாகவே, அ.தி. மு.க.- தி.மு.க. இணைப்பு சாத்திய மல் ல என்ற முடிவுக்கு வந்து விட்டா ர் எம்.ஜி.ஆர். அவருடைய கருத்து க்களை நானும் ஆமோதி த்தேன்.
இந்த நேரத்தில் இன்னொரு விஷயத்தையும் எம்.ஜி.ஆர். என்னிடம் சொன்னார். அதாவது, கலைஞருடன் சேர்ந்து மேகலா பிக்சர்ஸ் என் ற பட நிறுவனத்தை ஆரம்பித்த தையும், பின்னாளில் படிப்படி யாக சில கணக்குகளை எழுதி விட்டு, தன்னை அந்த நிறுவன த்திலிருந்து அறவே நீக்கி விட் டார் கலைஞர் என்றும் தெரிவி த்தார். எம்.ஜி.ஆர். இதைச் சொ ன்னதும், ‘ அ.தி.மு.க. வையும் அதே நிலைக்கு கலைஞர் ஆளாக்கி விடக் கூடாது’ என்று நாங்கள் இருவரும் தீர்மானித் தோம்.
அதன்படி இரு கட்சிகளையும் இணைக்கும் முடிவை கை விட்டு விட்டோம். என்று அந்த பேட்டியில் பண்ரூட்டியார் கூறியுள்ளார்.
நன்றி – rahimgazzali
நன்றி – கூகுள் (எதிர் எதிர் துருவங்கள் இணைந்த அரியப் புகைப் படங்கள்)

One Comment

Leave a Reply